Friday, February 28, 2020

ஜிப்ரீல் (அலை) வேகமாக வந்த நான்கு சந்தர்ப்பங்கள்........

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
ஒருநாள் பொழுதில் ரஸூலுல்லாஹி ﷺ அன்னவர்கள் ஹஸ்ரத் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் கேட்டார்கள், "நீங்கள் எப்போதாவது முழு வேகத்தோடு பயணித்து இருக்கிறீர்களா?"
ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் கூறினார்கள், "ஆம், நான்கு சந்தர்ப்பங்களில் பயணித்து இருக்கிறேன்."
ரஸூலுல்லாஹி ﷺ அன்னவர்கள் கேட்டார்கள், எவை அந்த நான்கு சந்தர்ப்பங்களும்?"
ஜிப்ரீல் அலைஹஸ்ஸலாம் கூறினார்கள், "முதலாவது முறை, ஹஸ்ரத் இப்றாஹீம் عليالسلام நம்ரூதுடைய நெருப்பிலே வைக்கப்பட்டப்போது வந்தேன். அப்போது நான் அர்ஷின் அருகிலே இருந்தேன்.
அல்லாஹ் எனக்கு அந்தத் தீயை குளிர வைக்கும்படிக் கூறினான். நான் அர்ஷைவிட்டும் நீங்கி ஏழு வானங்களையும் கடந்து தருணத்திற்கு வந்து சேர்ந்தேன்.
இரண்டாவது முறை
மினாவில் வைத்து இப்றாஹீம் عليه السلام அவருடைய மகனார் இஸ்மாயீல் عليه السلام அவர்களை குர்பானி கொடுக்கப் போகப்போகும் தருணத்தில் வந்தேன். ஸையுதுனா இப்றாஹீம் عليه السلام தன்னுடைய கத்தியால் தாக்கி அறுக்குமுன் அதற்குப் பகரமாக ஒரு செம்மறி ஆட்டை கொடுக்குமாறு எனக்கு உத்தரவிட்டான்.
மூன்றாவது முறை,
நபி யூஸுfப் عليه السلام அவர்களை அவர்களின் சகோதரர்கள் பாழுங் கிணற்றினுள் வீசி எறிந்தப்போது வந்தேன். அப்போது வேகமாக வந்த நான் யூஸுப் عليه السلام அந்த (ஆழமான) கிணற்றின் அடியை அடைய முன்னர் என் சிறகுகளை அவர்களுக்கு கீழாக வைத்தேன்.
கடைசியாக
யா ரஸூலல்லாஹ் ﷺ, உஹது யுத்தத்தின்போது உங்கள் முபாரக்கான பல் உடைப்பட்டு காயமுற்றப்போது உங்களுக்காக வந்தேன். அல்லாஹ் ஸுப்ஹானஹு வ த'ஆலா உங்களின் புனிதக் குருதி பூமியைத் தொடு முன்னர் அதைப் பிடியுங்கள் என்றுக் கூறினான். அப்படி அது தொடுமேயானால் இந்தப் பூவுலகம் அழியும்வரை அங்கு எத்தகைய புல், பூண்டு, தாவரமும் முளைக்காது என்றுக் கூறினான். இதைக் கேட்டவுடன், வேகமாக வந்தேன். என் சிறகுகளால் உங்கள் குருதியைத் தாங்கிக் கொண்டேன்.
தகவல் : Mohamed Ameenதுஆக்களின் தொகுப்பு -28/02/2020 காலை 08:00 மணி 

No comments:

Post a Comment