அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!♥♥♥
♦♦♦ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அப்பொழுது ஹஸன் ரலியல்லாஹூ அன்ஹூ ஹூஸைன் ரலியல்லாஹூ அன்ஹூ இருவரும்
அழுது கொண்டிருந்தனர்,
அழுது கொண்டிருந்தனர்,
#அவர்கள் இருவரையும் நோக்கி,நீங்கள் இருவரும் ஏன் அழுகின்றீர்கள்? என்று வினவினர்,
அதற்கு அன்னை ஃபாத்திமா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் பசியின் காரணமாக அழுகின்றார்கள் என்றனர்...!!!
அப்போது அவர்கள் ஒரு பொன் நாணயத்தை வீதியில் கண்டெடுத்து வந்தனர்,,,,
ஃபாத்திமா ரலியல்லாஹூ அன்ஹா அவர்களிடம் விபரத்தைக் கூறினர், அப்போது அன்னை அவர்கள், "இன்ன யூதனிடம் சென்று இதற்கு பகரமாக மாவு வாங்கி வாருங்கள்" என்று கூறினர்,
அதுபோல் அவனிடம் சென்று மாவு வாங்கினர், அப்போது அந்த யூதர் அவர்களை நோக்கி "நிச்சயமாக, ஒருவர் தம்மைத்தாமே அல்லாஹ்வுடைய தூதர் என்று உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறாரே, அவருடைய மருமகன் நீர்தானா?என்று வினவினான்,
அதற்கு அவர்கள்,, "ஆம்"என்றனர்,அதற்கு அவன் உம்முடைய பொன் நாணயத்தை நீரே வைத்துக் கொள்ளும் என்று கூறி மாவை இலவசமாக கொடுத்தான்...!!
பொன் நாணயத்துடன் வந்து ஃபாத்திமா ரலியல்லாஹூ அன்ஹா அவர்களிடம் நடந்த விபரத்தைக் கூறினார்கள்.
பின்னர்,அவர்கள், "இன்ன இறைச்சிக்காரனிடம் சென்று ஒரு வெள்ளி நாணயத்திற்கு இறைச்சி வாங்கி வாருங்கள் என்றனர்,
அவ்வாறே அந்த பொன் நாணயத்தை கொடுத்து ஒரு வெள்ளி நாணயத்திற்கு இறைச்சி வாங்கி வந்தனர்..!!
ஃபாத்திமா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் மாவினை பிசைந்து அடுப்பில் சட்டி ஏற்றி ரொட்டி தயாரித்து தங்களின் அருமை தந்தையரான அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஆள் அனுப்பி அவர்களை உண்பதற்கு அழைத்து வருமாறு செய்தனர், அவர்களும் வந்தனர்.
அப்போது ஃபாத்திமா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் நடந்த விபரத்தை தன் தந்தையாரிடம் கூறினார்கள்.
தாங்கள் இது ஆகுமானதாக கூறினால் நாங்களும் இதை உண்கிறோம், தாங்களும் எங்களிடம் சேர்ந்து இதை உண்ணுங்கள் என்றனர்...!!
அதுகேட்ட அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்,,,,
"இதனை இறைவனின் திருப்பெயரால் பிஸ்மில்லாஹிர் ரஹ்மான் நிர்ரஹீம் என்று கூறி உண்ணுங்கள் என்று கூறிவிட்டு, அவர்களும் அதிலிருந்து உண்டனர்..!!
அங்கு உண்டு கொண்டிருக்கும் வேளையில் வெளியே ஒரு இளைஞர் எதையோ தேடிக் கொண்டிருந்தார்,
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்விளைஞரை அழைத்து அவரிடம் ,"என்ன செய்தி?"என்று வினவினர்,
அதற்கு அந்த இளைஞர் தன் பொற்காசு ஒன்று கடைத் தெருவில் தவறி விட்டதாகக் கூறினார்,,,
#அதற்கு அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்,,,
அலீ ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களை அனுப்பி,,,"அலீயே"அந்த இறைச்சி கடைகாரரிடம் போய்
உங்களிடம் தந்து இறைச்சி வாங்கிய அந்த தங்க நாணயத்தை அண்ணல் நபிகளார் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் தம்மிடம் அனுப்பி வைக்குமாறு கூறுகிறார்கள் என்றுகூறி அதை
வாங்கி வாரும்,,,,
உங்களிடம் தந்து இறைச்சி வாங்கிய அந்த தங்க நாணயத்தை அண்ணல் நபிகளார் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் தம்மிடம் அனுப்பி வைக்குமாறு கூறுகிறார்கள் என்றுகூறி அதை
வாங்கி வாரும்,,,,
#அந்த_வெள்ளி நாணயத்திற்கு அண்ணல் நபிகளார் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்கள் என்றும் கூறிவிடும் என்றார்கள்..!!!
#அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய செய்தியை அலீ ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் கூறியதும் அந்த கடைகாரர் அதை அனுப்பி வைத்து விட்டார்.!!
அதனை அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த இளைஞரிடம்
கொடுத்து விட்டார்கள்,"
கொடுத்து விட்டார்கள்,"
அறிவிப்பவர்;ஸஹ்லுப்னு ஸஃது ரலியல்லாஹூ அன்ஹூ நூல்;அபூ தாவூத்;-4811
ஸித்றத்துல் முன்தஹா
No comments:
Post a Comment