அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!♥♥♥
♦♦♦ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
23 ஆண்டு போராட்டத்திற்கு பின் கஅபாவிற்கு செல்கிறார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்). கஅபாவின் சாவி யாரிடம் இருக்கிறது என்று அல்லாஹ்வின் தூதர் வினவினார்கள். அதற்கு உஸ்மான் பின் தல்ஹா அவர்களிடம் இருக்கிறது என்று சொல்லப்பட்டது.
அந்த சாவியை வாங்க அலீ (ரலி) அவர்களிடம் கட்டளையிட்டார்கள் அண்ணலார். அப்பொழுது உஸ்மான் பின் தல்ஹா அவர்கள் இஸ்லாத்தை ஏற்கவில்லை. அலீ (ரலி) அவர்கள் உஸ்மானிடம் சாவியை கேட்டார். அனால் உஸ்மான், “நான் இஸ்லாத்தை ஏற்கவில்லை. ஆகையால் சாவியை தரமாட்டேன்” என்றார். பின் அலீ (ரலி) அவர்கள் சாவியை உஸ்மானிடம் இருந்து பிடுங்கி வந்தார். சாவி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கரங்களில் கொடுக்கப்பட்டது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கஅபாவை திறந்தார்கள். அப்பொழுது அல்லாஹ், “நபியே! அமானிதத்தை அவரவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள்” என்று ஒரு வசனத்தை இறக்கினான். பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நடந்ததை உணர்ந்து கஅபாவின் சாவியை உஸ்மானிடம் ஒப்படைக்க சொன்னார்கள். அலீ (ரலி) அவர்கள் உதுமானிடம் சாவியை கொடுத்தார்.
அப்பொழுது உஸ்மான், “ஏன் நீங்கள் சாவியை திருப்பி தருகிறீர்கள்?” என்று வினவினார். அலீ (ரலி) அவர்கள் நடந்த நிகழ்வினை கூறினார். அதை கேட்ட உஸ்மான் சொன்னார், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று சொல்லுங்கள் நான் இஸ்லாத்தை ஏற்று கொண்டேன் என்று ” (அல்லாஹு அக்பர்).
தகவல் : Mohamed Ameenதுஆக்களின் தொகுப்பு - 02/03/2020 பிற்பகல் 01:30 மணி
தகவல் : Mohamed Ameenதுஆக்களின் தொகுப்பு - 02/03/2020 பிற்பகல் 01:30 மணி
No comments:
Post a Comment