Monday, March 30, 2020

இரும்பை பற்றி திருக்குரானில்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
வணக்கம் (அறிவியலை அதிரவிடும் திருக்குரான்) நான் எழுதி முதல் பரிசை வாங்கிய கட்டுரையில் 167சவால்களை சுட்டிக்காட்டி அறிவியல் உலகம், ஆராய்ச்சி கழகம் திருக்குரான் சொல்வது தான் உண்மை என்பதை ஆராய்ச்சி கழகமும், ஆராய்ச்சி வல்லுனர்களும் வெளியிட்ட பதிவைகளை கட்டுரையோடு இணைத்து அனுப்பினேன்.
திருக்குரான் உலக மக்களுக்கும், உலக அறிவியல் ஆராய்ச்சி மேதைகளுக்கும் விடும் சவால்கள் 167ல் (சவால் 6) இரும்பை பற்றி திருக்குரானில் அத்தியாயம் 57 வசனம் 25 (And we also sent down iron in which there lie's great force and which has many uses for mankind's. Chapter 57 Version 25) ஆங்கில திருக்குரானில் இதன் தமிழ் அர்த்தம் நபியே நீர் சொல்விராக (இரும்பை நாமே இறக்கினோம். அதில் பெரும் சக்தி உள்ளது. மற்றும் மனித குலத்திற்கு பல பயன்கள் உள்ளது) இதை 6ம் நூற்றாண்டில் வாழ்ந்த முஹம்மது நபியால் சொல்ல முடியுமா? இந்த திருக்குரானின் சவாலை பொய்யாகிக்கிறோம் என்று எதிர் சவால் விட்டு உலகில் மிக பெரும் அறிவியல் ஆராய்ச்சி கழகம் நாசா விஞ்சானிகள் இரும்பு விண்ணில் இருந்து வந்ததா இல்லை மற்ற கனிமங்களை போல பூமியில் இருந்ததா என்று? நாசா அறிவியல் கூடத்தின் தலைமை ப்ரோபோசர் ஆம்ஸ்ட்ராங் (Armstrong) தலைமையில் ஆராய்ச்சி தொடங்குகிறது. பூமியில் தனிமங்கள் உருவாக வேண்டும் என்றால் அதற்கு ஏற்ப வெப்பம் இருக்க வேண்டும் கார்பன், சோடியம், மக்னீசியம், நியான், அலுமினியம், சிலிகான், ஈயம், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் எப்படி பூமியில் உருவாகிறது என்பதை கண்டுபிடித்த நாசா குழுவால் பூமியில் இரும்பு எப்படி உருவாகிறது என்பதை கண்டுபிடிக்க முடியாமல்.............. இரும்பை ஆராய தொடங்குகின்றனர். பூமியில் இரும்பு உருவாக வேண்டும் என்றால் சூரிய ஒளியின் வெட்பத்தால் உருவாக முடியாது இரும்பு உருவாக வேண்டும் என்றால் 30 கோடி டிகிரி வெட்பம் இருக்க வேண்டும் பூமியில் அதற்கு சாத்தியம் இல்லவே இல்லை. இரும்பு பின்னர் எப்படி பூமிக்கு வந்தது நாசா குழுவினர் திருக்குரானின் வசனத்தை ஆராய தொடங்குகின்றனர். வானத்தை நோக்கி ஆய்வை தொடங்குகிறது........
படம் இதைக் கொண்டிருக்கலாம்: உணவு
படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்சூரியனுக்கு இரும்பை பூமியில் உருவாக்கும் அளவுக்கு வெப்ப தன்மை இல்லை என்றால் 35 கோடி டிகிரி வெட்பம் கொண்ட நட்சத்திரங்களில் இருந்து எரி கற்கள் பலகோடி வெடித்து சிதறி பூமியை நோக்கி வரும் போது காற்று மண்டலங்கள் அதை தடுத்து அவைகள் துகள்களாக பூமியில் விழுந்து அது இரும்பாக உருமாறுகிறது.இப்படி பல கோடி ஆண்டுகளாக இந்த பூமியில் விழுவது தான் இரும்பாக உருமாறுகிறது. திருக்குரானில் சொல்வது தான் உண்மை இரும்பு என்பது விண்ணில் இருந்து வந்தது. சொல்பவர்கள் நாசா விண்வெளி ஆராய்ச்சி கழகம் (The National Aeronautics's And Space Administration) நான் இந்த திருக்குரானை ஆய்வு செய்து அதில் சொல்லபட்டவைகளை அதன் ஆதார நூல்களை தேடி அதில் வெற்றி பெற்றவள். என் கட்டுரை வெற்றி பெரும் வரை நான் திருக்குரானில் பி ஹச் டி வாங்கிவள் என்பது அந்த குழுவினருக்கு தெரியாது. (அன்புடன் வாசுகி மோகன்)

No comments:

Post a Comment