Monday, March 30, 2020

முத்துப்பேட்டை இறைநேசர்களின் நினைவிடங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
திருவாரூர் மாவட்ட கடற்கரையில் அமைந்துள்ள முத்துப்பேட்டை இறைநேசர்களின் நினைவிடங்களாக தர்காக்கள் உள்ளன.
மகான் ஷேக் தாவூது தர்கா, பீவி பாத்திமா அம்மா தர்கா, ஆற்றுக்கரை பாதுஷா நாயகர் தர்கா ஆகிய நினைவிடங்கள் பிரபலமானவை. இயற்கை வளம் மிக்க ஆறும், குளமும்,பள்ளிவாசலும் ஊருக்கு அழகூட்டுகின்றன.
ஆற்றங்கரை பீவி பாத்திமா(RA)
முத்துபேட்டை தர்காவில் தங்குகிறவர்களின் கனவில் ஷேக் தாவூது அவர்கள்தோன்றி அறுவை சிகிச்சை செய்வதாகவும், அதற்குப் பிறகு அவரகள் குணமடைந்துசெல்வதாகவும் கூறப்படுகிறது. அறுவை சிகிச்சையின்போது உதவிபுரியும் தாதியாக ஒரு பெண்மணி தோன்றுவார் என்றும் சொல்லப்படுகிறது. முத்துப் பேடடையில் அடக்கமாகியுள்ள பாத்திமா நாச்சியார் எனும் இறைநேசச் செல்வியே அவர் என்று நம்புகின்றனர்.
படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் வெளிப்புறம்
பாத்திமா நாச்சியாரின் நினைவிடமான தர்காவும் முத்துப் பேட்டையிலுள்ள முதலை முடுக்கில் அமைந்துள்ளது.

இந்த அம்மையார் காஷ்மீரிலிருந்து முத்துப்பேட்டைக்கு வந்தவர்.
ஒன்பது வயதுக்குள் குர்ஆனை மனப்பாடம் செய்துவிட்டு, பாரசீக மொழியிலும் புலமைபெற்றார். ஷெய்க் முன்ஷி ஆலிம் என்ற ஆசிரியரிடம் மெய்ஞ்ஞானத் தத்துவங்களைக் கற்றுவிட்டு முத்துப்பேட்டைக்கு வந்தார்.

அவர் நினைவாகப் பிற்காலத்தில் தர்கா கட்டப்பட்டது. அவருக்கு மஸ்தானா காத்துான் என்ற பெயரும் உண்டு. பாத்திமா நாச்சியாரின் தரிசனக் காட்சி சிலருக்குக் கிடைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது..
முத்துப்பேட்டையின் மறக்கவியலாத ஆன்மிக நினைவாக இறைநேசர்கள் ஷேக் தாவூதும், பாத்திமா நாச்சியாரும் இருக்கிறார்கள்.
தகவல் : ஓர் இறைநேசர்கள்-முற்பகல் 09.45 மணி 

No comments:

Post a Comment