Tuesday, October 21, 2014

வெந்நீர் அருந்துங்கள் இளமையாக இருக்கலாம்,,,,,,,,,,,

என்றென்றும் இளமையாக இருக்க தண்ணீரை அதிகளவில் உட்கொள்வது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என பெரியவர்கள் முதல் மருத்துவர்கள் வரை சொல்லக்கேட்டிருப்போம்.

பொன்மொழிகள்,

* மாற்றம் என்பது இல்லாமல் வளர்ச்சி சாத்தியம் இல்லை. தங்கள் மன அமைவை மாற்றிக் கொள்ள முடியாதவரால் எதையும் மாற்ற முடியாது!
* வெற்றிக்கு வகை செய்யும் சில முக்கியப் பண்புகள்: உண்மை, நேர்மை, அடக்கம்,அன்பு, அடுத்தவர் உணர்வை மதிக்கும் தன்மை!

பொது அறிவு,

1. நியூஸிலாந்தில் உள்ள கியா என்னும் பறவைக்கு பிடித்த உணவு - காரின் கண்ணாடியை சுற்றீ இருக்கும் ரப்பர் பீடுகள் தான்.
2. நம் உடம்பு ஒரு நொடிக்கு ஒன்னரை கோடி சிவப்பு அனுக்களை உற்பத்தி செய்யவும் அழிக்கவும் செய்கிறது - இதை எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பும் செய்ய இயலாத அதிசயம்.

முகப்பரு

முகப்பரு நீங்க :
1. சந்தனம் or டூத் பேஸ்டை பரு மீது 10 நிமிடம் வைக்கவும் அல்லது இரவில்                           வைக்கலாம் அதிகமாக இருந்த பரு காய்ந்து குறைந்து விடும்.
2. சின்ன சீரகத்தை நன்கு அரைத்து பால் கலந்து இரவில் முகத்தில் பூசவும்.

நுங்குவின் மருத்துவ குணங்கள்

வெயிலின் உஷ்ணத்தை தணிக்க பலவித பானங்களை அருந்துகிறோம். தர்ப்பூசணி, ஆரஞ்சு போன்ற விதவிதமான பழவகைகளை சாப்பிடுகிறோம். ஆனால் அவைகளை எல்லாம்விட சிறந்தது, நுங்கு. உடலுக்கு குளிர்ச்சியை தருவதில் இது முதலிடத்தை வகிக்கிறது.

Monday, October 20, 2014

பொன்மொழிகள்,


  • பல தன்மைகள் வாய்ந்த நபர்களின் தொடர்பை விட, சில நல்ல புத்தகங்களின் உறவு நன்மையை அளிக்கும்.
  • குழந்தைகளை வளர்க்கும்போது தான், உன் பெற்றோரின் அருமையை உன்னால் உணர முடியும்.

ஹதீஸ்-ஸலாம் கூறுதல்

"அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ"
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
"இருவர் சந்தித்துக் கொள்ளும் போது யார் முதலில் ஸலாம் சொல்லி (பேச) ஆரம்பிக்கிறாரோ அவரே உங்களில் சிறந்தவராவார்."
"இரண்டு முஸ்லிம்கள் சந்தித்து (ஸலாம் கூறி) கை குலுக்கினால் அவர்கள் பிரியும் முன் அவர்கள் பாவங்கள் மன்னிக்கப் படுகிறது."                                                                                                    (நூல்: அபுதாவூத்)