Saturday, September 26, 2015

ஹதீஸ்-தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்

இறைத்தூதர்"ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ல்லம்" அவர்கள் கூறினார்கள்'
'அல்லாஹும்ம அன்த்த ரப்பீ. ல இலாஹ இல்லா அன்த்த. கலக்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க வ வஅதிக்க மஸ்ததஅத்து, அபூ உ லக்க பி நிஅமத்திக்க, வ அபூ உ லக்க பி தன்பீ. ஃபஃபக்ஃபிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக் ஃபிருத் துன}ப இல்லா அன்த்த. அஊது பிக்க மின் ஷர்ரி ஸனஅத்து' என்பதே தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல் ஆகும்.

ஹதீஸ்-அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது?

அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது? என்று நபி"ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ல்லம்" அவர்களிடம் நான் கேட்டபோது, 'தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும்" என்று பதில் கூறினார்கள்.
அதற்கு அடுத்து எது? என்றேன். 'பெற்றோருக்கு நன்மை செய்தல்" என்றார்கள்.
அதற்கு அடுத்து எது? என்றேன். 'இறைவழியில் அறப்போர் புரிதல்" என்றனர்.

துஆக்கள்

அஸ்தஃக்ஃபிருல்லாஹ் அஸ்தஃக்ஃபிருல்லாஹ் அஸ்தஃக்ஃபிருல்லாஹ்! அல்லாஹும்ம அன்த்தஸ் ஸலாம் வமின்கஸ் ஸலாம் தபாரக்த யாதல் ஜலாலி வல் இக்ராம்
பொருள் : அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுகிறேன்! அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுகிறேன்! அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுகிறேன்! யா அல்லாஹ்! நீ ஈடேற்றமளிப்பவன். உன்னிடமிருந்து ஈடேற்றம் உண்டாகிறது. கண்ணியம் மாண்பும் உடையவனே! நீயே அருட்பேறுடையவன்.
ஆதாரம் : முஸ்லிம்

Wednesday, September 23, 2015

இன்ஷா அல்லாஹ்..

திண்டுக்கல் பேகம்பூரில் எதிர்வரும் 24.09.2015 வியாழக்கிழமை அன்று ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை ஈத்ஹா மைதானத்தில் மிக சரியாக காலை 8.00 மணி அளவில் நடைபெறும். சகோதர சகோதரிகள் உரிய நேரத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

அரஃபா நாள் நோன்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்
நிலவட்டுமாக..!
அன்பார்ந்த இஸ்லாமிய சொந்தங்களே

Sunday, August 23, 2015

இந்த வருட ஹஜ்ஜில் ஒட்டகம் அறுப்பது தடை செய்யப்படுகிறது!

'மெர்ஸ்' நோய் குறிப்பாக ஒட்டகத்தின் மூலம் மனிதனுக்கு பரவுவதால் அந்த நோயைக் கட்டுப்படுத்தும் முகமாக இந்த வருடம் ஒட்டகம் ஹஜ் கிரியைகளில் அறுப்பதை சவுதி அரசு தடை செய்துள்ளது. அது தவிர்த்து ஆடு:, மாடு, போன்றவற்றை அறுத்து ஏழைகளுக்கு உணவாக அளிக்கலாம். மெர்ஸ் நோயின் தாக்கம் குறைந்தவுடன் வழக்கமாக ஒட்டகமும் சேர்த்துக் கொள்ளப்படும் என்று ஹஜ் கிரியைகளுக்கான அமைச்சகம் அறிவித்துள்ளது. இள வயது ஒட்டகத்திலிருந்து இந்த நோய் மனிதனுக்கு உடன் தொற்றிக் கொள்கிறது. கடந்த இரண்டு தினங்களில் இரண்டு பேர் இந்நோயால் இறந்துள்ளனர். 15 பேருக்கு இந்நோய் தாக்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
எனவே தமிழகத்திலிருந்து ஹஜ்ஜூக்கு வருபவர்கள் முறையாக தடுப்பூசிகளை போட்டுக் கொண்டு உடன் வரும் மருத்துவர்களளின் அறிவுரைப்படி நடந்து கொள்ள அறிவுறுத்தப்டுகிறார்கள்.
தகவல் உதவி
சவுதி கெஜட்
22-08-2015