நான் அல்லாஹ்விற்காக இந்த உம்ராவை நிறைவேற்றுகின்றேன் என மனதில் நிய்யத் வைத்தவராக
لَبَّيْكَ عُمْرَةً
லெப்பைக உம்ரதன் எனக் கூறுவது.
நிய்யத் வைத்ததன்பின் தவாபை ஆரம்பிக்கும் வரை தல்பியா கூறவேண்டும்.
لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لاَ شَرِيكَ لَكَ
தல்பியா : ' லெப்பைக்கல்லாஹும்ம லெப்பைக் - லெப்பைக்க லாஷரீக்க லக லெப்பைக் - இன்னல்ஹம்த வன்னிஃமத லக வல்முல்கு லாஷரீக லக
நாயனே! உன் அழைப்பை ஏற்று வந்துவிடடேன். நாயனே! உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன். நாயனே! உனக்கு நிகராக எவருமில்லை; உனக்கு இணையாக எதுவுமில்லை. உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன். நிச்சயமாக புகழ், அருள், ஆட்சி அனைத்தும் உனக்கே உரியன. உனக்கு யாதொரு இணையுமில்லை.