TAMIL MUSLIM SONGS
Thursday, May 24, 2018
Wednesday, May 23, 2018
நல் அமல்கள் செய்து ஸாலிஹானவர்களாக மரணிக்க அல்லாஹ் கிருபை செய்வானாக
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !!
எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே !!!
ஒரு அன்சாரித் தோழரின் ஜனாசாவை அடக்கம் செய்வதற்காக நபி(ஸல்) அவர்களுடன் சென்றோம்.
கப்ரடியில் சென்றபோது உட்குழி தோண்டப்படாத நிலையில் இருந்ததால் நபி (ஸல்)அவர்கள் கப்ருக்கு அருகில் அமர்ந்து கொண்டு ஒரு குச்சியால் கிளறிக் கொண்டிருந்தார்கள்.
எங்களின் தலைகள் மீது பறவைகள் இருப்பது போன்று நாங்களும் அமைதியாக கப்ருகளுக்கு அருகில் அமர்ந்தோம்.
கப்ரடியில் சென்றபோது உட்குழி தோண்டப்படாத நிலையில் இருந்ததால் நபி (ஸல்)அவர்கள் கப்ருக்கு அருகில் அமர்ந்து கொண்டு ஒரு குச்சியால் கிளறிக் கொண்டிருந்தார்கள்.
எங்களின் தலைகள் மீது பறவைகள் இருப்பது போன்று நாங்களும் அமைதியாக கப்ருகளுக்கு அருகில் அமர்ந்தோம்.
*பாத்திமா (ரலி) வீட்டில் நடந்த அற்புத கலந்துரையாடல்*
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !
எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே !!
*பாத்திமா (ரலி) வீட்டில் நடந்த அற்புத கலந்துரையாடல்*
நான் படித்த புத்தகம் ஒன்றில் மிகவும் அழகான ஹதீஸ் ஒன்றை பார்த்தேன் ...
பெரிய ஹதீஸாக இருக்குனு படிக்காம இருக்காதீங்க சகோஸ் ... அருமையான ஹதீஸ்
அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்...
கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் ...
சரி ஹதீஸுக்கு போலாம்...
Saturday, May 19, 2018
அரசியல் என்பது சாக்கடையா?
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே
கேள்வி: அரசியல் என்பது சாக்கடையா?
பதில்: சவூதி அரேபியா என்ற இஸ்லாமிய நாட்டில் உமர் என்று ஒரு ஜானதிபதி இருந்தார். அவர் நோய்வாய்ப்பட்டபோது அங்கிருந்த மருத்துவர்கள் சில மருந்துகளை கொடுத்து இதனை தேனில் குழைத்து சாப்பிடுங்கள் என்றார்கள்.
'ஹுஸ்னுள் ஹாத்திமா''
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ! எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே !!
மஸ்ஜிதுன் நபவீ ''யில் ஒரு பெண்ணின் ஜனாஸா'' வந்து விட்டது.
நபி ஸல் அவர்கள் இமாமாக நின்று தொழ வைக்க தக்பீர் சொல்ல கையை உயர்த்துகிறார்கள்.
அந்த சமயம் வானவர் கோமான் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலா நேரில் வந்து, "அந்த பெண்ணின்
ஜனாஸாவை தாங்கள் தொழ வைக்க வேண்டாம்,
அப்படி தொழ வைக்க வேண்டுமானால் அந்த பெண்ணின் கபுரை சென்று பார்த்து விட்டு பிறகு தொழுகை நடத்த அல்லாஹ் சொல்கிறான் " என்று உத்திரவிடுகிறார்.
நபி ஸல் அவர்கள் நேராக சென்று கபுரை காண்கின்றார்கள்.
''சுப்ஹானல்லாஹ்'' கப்ரு குழிக்குள் பாம்பும் ,தேளும் ,விஷ ஜந்துக்களும் நிறைந்து காணப்பட்டது .அதைக்கண்டு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அன்னவர்கள் கவலையே உருவாக வருகின்றார்கள்.
Thursday, May 10, 2018
குளத்து நீரை கூஜாவில் அடைத்த ஹாஜா!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!!
எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே !!!
அஜ்மீர் அரசர் கரீப் நவாஸ் ஹாஜா முயனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபீகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இஸ்லாமின் பக்கம் மனிதர்களை அழைப்பதற்காக இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் என்ற ஊருக்கு வந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மிக நெருங்கிய "முரீது" சிஷ்யர்களும் இருந்தார்கள்.
அக்காலகட்டதில் அஜ்மீர் அதிபதி முஸ்லிம் அல்லாதவர்களின் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது.அந்த மன்னனின் பெயர் பிரதிவிராஜ்.
Tuesday, May 1, 2018
பரக்கத் நிறைத்த பராஅத் இரவு
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!!
எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே !!!
இன்றிரவு ஷஃபான் 15 ம் நாள் புனித "பராஅத்" இரவாகும்.
'ஷஃபான் மாதம் என்னுடையது' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். ஷஃபான் மாதம் 15 ம் நாளைத்தான் நிஸ்பு ஷஃபான் என்று அழைக்கிறார்கள்.
இந்த இரவில்தான் வரும் சென்ற வருடத்தின் அமல்களின் கணக்குகள் முடிவுக்கு வந்து இந்த வருடத்திற்குள்ள புதிய கணக்கு (அமல் நாமா) இறைவனால் நிர்ணயிக்கப்படுவதாகவும், இவ்வருடத்திற்குள்ள இறப்பு, பிறப்புகள் எழுதப்படுவதாகவும் ஹதீஸ் கிரந்தங்களில் கூறப்பட்டுள்ளன.
Subscribe to:
Posts (Atom)