Friday, August 3, 2018

ஈமான் எனும் இறைநம்பிக்கை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும்    உண்டாகட்டுமாக !!!

இறைத்தூதர் அவர்களே! இஸ்லாத்தில் சிறந்தது எது?' என்று நபித்தோழர்கள் கேட்டதற்கு 'எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறாரோ அவரின் செயலே சிறந்தது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்
ஸஹீஹ் புகாரி 11.

சோதிக்கப்பட்ட மூவர்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும்    உண்டாகட்டுமாக !!!

பனூ இஸ்ராயீல் கூட்டத்தாரில்
ஒரு வெண்தோல் நோயுடையவர்,
ஒரு வழுக்கைத் தலையுடையவர்,
ஒரு குருடர் ஆகிய மூவர் இருந்தனர்.
அல்லாஹ் அம்மூவரையும் சோதிக்க நாடி, அவர்களிடம் ஒரு மலக்கை அனுப்பி வைத்தான். அவர் (முதலில்) வெண்தோல் நோயுடையவரிடம் வந்து, உமக்கு மிக உவப்பானது எது என வினவினார்.
அதற்கவர் அழகிய நிறம், அழகிய தோல், மக்கள் அறுவருக்கும் இந்நிறம் என்னை விட்டுப் போய்விடுவது ஆகியவை என்றார். அவரை அம்மலக்கு தமது கரத்தால் தடவவே, அவரது அறுவறுப்பான நிறம் போய்விட்டது அழகிய நிறம் கொடுக்கப்பட்டார்.

ளுஹா தொழுகை முக்கியத்துவம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும்    உண்டாகட்டுமாக !!!

கண்மணி நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:

"யாரேனும் ஒருவர் பன்னிரண்டு ரக்அத்துகள் ளுஹா தொழுதால் அல்லாஹ் அவருக்காக சுவர்கத்தில் ஒரு மாளிகையை எழுப்புகிறான்"
நூல் - திர்மிதி
கண்மணி நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"சுவனபதியில் ஒரு நுழைவுவாயிலுக்கு ளுஹா என்று பெயர். ளுஹாத் தொழுகையினைத் தொடர்ந்து தொழுபவர்கள் இவ்வாயிலின் வழியாக நுழைந்து வருமாறு அழைக்கப்படுவார்கள்"
நூல் : தபரானி

Thursday, August 2, 2018

பயணம் வேதனையில் ஒரு பகுதியாகும்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
♦                                              ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் 
                                                              அனைவரின் மீதும்    உண்டாகட்டுமாக !!!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'பயணம் வேதனையில் ஒரு பகுதியாகும். அது ஒருவரின் உணவையும் பானத்தையும் உறக்கத்தையும் தடுத்து விடுகிறது. எனவே, ஒருவர் தம் தேவையை முடித்ததும் விரைந்து தம் குடும்பத்தாரிடம் செல்லட்டும்.' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
உமர்(ரலி) அவர்களின் ஊழியாரான அஸ்லம்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) மக்கா செல்லும் வழியில் நான் அவர்களுடன் (பயணம் செய்து) இருந்தேன். (அவரின் மனைவி) ஸஃபிய்யா பின்த் அபீ உபைத் என்பவர் கடும் வேதனையில் இருக்கும் செய்தி அவர்களுக்குக் கிடைத்தது. உடனே, பயணத்தை விரைவுபடுத்தினார்கள்.
அடிவானத்தின் செம்மை மறைந்த பின் (வாகனத்திலிருந்து) இறங்கி மக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதார்கள். 'நபி(ஸல்) அவர்கள் விரைந்து பயணம் செய்வதாக இருந்தால் மக்ரிபைத் தாமதப்படுத்தி இரண்டு தொழுகைகளையும் சேர்த்துத் தொழுவதை பார்த்திருக்கிறேன்!' என்றும் குறிப்பிட்டார்கள்.
ஷஹீஹுல் புஹாரி 1804,1805

Sunday, July 29, 2018

மூஸா நபியின் வாழ்க்கை தரும் படிப்பினைகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும்    உண்டாகட்டுமாக !!!

“ஓ! மூஸா! உங்கள் இனத்தாரின் ஆண் குழந்தைகளை பிர் அவுன் வதை செய்து கொண்டிருந்தான். உங்களைப் பற்றி உங்கள் தாய் கவலை கொண்டாள். ஆகவே உங்கள் தாயை நோக்கி, ‘உங்களைப் பேழையில் வைத்து கடலில் எறிந்து விடுங்கள். அக்கடல் அதனை கரையில் சேர்த்து விடும். எனக்கும் அந்த குழந்தைக்கும் எதிரியாக உள்ளவனே அதனை எடுத்துக் கொள்வான்’ என்று உங்கள் தாய்க்கு அறிவித்தோம்”. (திருக்குர்ஆன் 20:39)
எகிப்து நாட்டில் பனிஇஸ்ரவேலர்கள் செல்வாக்கு அதிகமாக இருந்த காலம் அது. அப்போது, எகிப்தின் பூர்வீக குடிகளான கிப்திகள் அடிமைப்பட்டுக் கிடந்தார்கள். கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்குப் பின் ஏற்பட்ட மக்கள் புரட்சியால் மீண்டும் கிப்திகள் பனி இஸ்ரவேலர்களிடமிருந்து ஆட்சியை கைப்பற்றினார்கள். மேலும் அவர்களை பழிவாங்கும் வகையில் கொத்தடிமைகளாக நடத்தினார்கள்.

பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும்    உண்டாகட்டுமாக !!!


"அல்லாஹும்ம அன்(த்)த ரப்பீ[B] லாயிலாஹ இல்லா அன்(த்)த கலக்(த்)தனீ வஅன அப்[B]து(க்)க வஅன அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)க மஸ்ததஃ(த்)து அவூது பி[B](க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அபூ[B]வு ல(க்)க பி[B]னிஃமதி(க்)க அலய்ய, வஅபூ[B]வு ல(க்)க பி[B]தன்பீ[B] ப[F]க்பி[F]ர்லீப[F]இன்னஹு லா யஃக்பி[F]ருத் துனூப[B] இல்லா அன்(த்)த". ஆதாரம்: புகாரி 6309.
பொருள் : இறைவா! நீயே என் எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரி யவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது.

Saturday, July 28, 2018

இஹ்ராம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !!!
                                                                               *********
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'இறைத்தூதர் அவர்களே! இஹ்ராம் அணிந்தவர் எதையெதை அணியலாம்?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள்
'சட்டை, தலைப்பாகை, முழுக்கால் சட்டை, தொப்பி, காலுறை ஆகியவற்றை அணியக்கூடாது. செருப்பு கிடைக்காதவர், தம் காலுறையின் (மேலிருந்து) கரண்டைக்குக் கீழ் வரையுள்ள பகுதியை வெட்டிவிட்டு அதை அணிந்து கொள்ளலாம்
குங்குமப்பூச் சாயம் மற்றும் வர்ஸ் எனும் செடியின் சாயம் தோய்க்கப்பட்ட ஆடையை அணியாதீர்!' என்றார்கள்.
ஷஹீஹுல் புஹாரி 1542
ஸயீத் இப்னு ஜுபைர் அறிவித்தார்.
இப்னு உமர்(ரலி) (இஹ்ராம் அணிந்த நிலையில், நறுமண எண்ணெய் பூசாமல் நறுமணமற்ற) ஆலிவ் எண்ணெய்யைப் பூசியதாக இப்ராஹீமிடம் நான் கூறியபோது, 'அவர் என்ன சொல்வது? (இது நபி(ஸல்) அவர்களின் நடைமுறைக்கு மாற்றமா இருக்கிறதே) என்றார்.
(மேலும் தொடர்ந்து) நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் பொழுது அவர்களின் தலையின் வகிட்டில் பார்த்த நறுமண எண்ணெய்யின் மினுமினுப்பு நான் இன்று பார்ப்பது போலுள்ளது என்று ஆயிஷா(ரலி) கூறியிருக்கிறாரே' என இப்ராஹீம்
கூறினார்.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இஹ்ராம் அணியும் நேரத்தில், நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிவதற்காக நான் நறுமணம் பூசினேன். இதுபோல் இஹ்ராமிலிருந்து விடுபடும்போது கஅபாவை வலம் வருவதற்கு முன்னால் நறுமணம் பூசுவேன்.
ஷஹீஹுல் புஹாரி 1538,1539
நன்றி : அதிரை முஸ்லீம்