Tuesday, July 22, 2014

கண்களை கொஞ்சம் கவனியுங்கள்...

பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய பொருட்களை கண் மாதிரி பாதுகாக்க வேண்டும் என சொல்வது வழக்கம். கண் பத்திரமாக, பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய உறுப்பு. ஏனென்றால், உள்ளத்து உணர்ச்சிகளைப் அப்படியே கண்ணாடி போன்று பிரதிப்பலிப்பவை கண்கள். கண்களில் உண்டாகிற பிரச்னைகள் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, அழகுக்கும் நல்லதல்ல. கண்ணழகு தொடர்பான சில பிரச்னைகளையும், அவற்றிற்கான தீர்வுகளும்... 

சுருக்கங்கள் மற்றும் கோடுகள்:கண்களைச் சுற்றியுள்ள சருமம் மிக மென்மையாக இருக்கும். சீக்கிரமே வறண்டு போய்விடும். 25 வயதிலிருந்தே கண்களைச் சுற்றி வரும் சுருக்கங்களை விரட்டலாம். கண்களைச் சுற்றி ஐ கிரீம் அல்லது கண்களுக்கான எண்ணெய் தடவி வரலாம். மோதிர விரலால் அழுத்தம் தராமல் மெதுவாக மசாஜ் செய்யலாம். கண்களில் அரிப்போ, எரிச்சலோ இருந்தால் கைகளால் கண்களை கசக்கக்கூடாது. அது சுருக்கங்கள் உண்டாக்கிவிடும். சுருக்கம் அதிகம் இருந்தால் தரமான ஆன்ட்டி ரிங்கிள் கிரீம் அல்லது பாதாம் ஆயில் பயன்படுத்தலாம். மோதிர விரலால் மிக மென்மையாக மசாஜ் செய்து துடைக்கலாம். தேயிலை கொதித்து வைத்த தண்ணீரை வடிகட்டி அதில் பஞ்சை நனைத்து, கண்களின் மேல் ஒத்தடம் கொடுத்தல் சுருக்கங்கள், கோடுகள் மறையும். இதை போன்று தினமும் செய்யவும்.

கருவளையம்: சருமத்தின் எல்லா இடங்களிலும் பரவியிருக்கும் ஹைப்போ டெர்மிஸ் கண்கள் சுற்றியுள்ள பகுதியில் மிக குறைவு. பரம்பரை வாகு, தூக்கமின்மை, சரிவிகித உணவு உண்ணாதது, கம்ப்யூட்டர், டி.வி முன் அதிக நேரம் இருப்பது என கருவளையங்கள் உருவாக காரணம். துவக்கத்திலேயே கவனித்து சிகிச்சை மேற்கொண்டால் சரி செய்யலாம். முதலில் 8 மணி நேரம் தூக்கம் தேவை. பகல் நேரத்தில் உள்ளங்கை குவித்து கண்களின் மேல் வைத்து மூடியபடி அடிக்கடி செய்யலாம். கண்களை வேகமாக மூடித் திறந்தால் அது ஒருவித மசாஜ்.
கண்களை இறுக மூடவும், பிறகு அகலமாகத் திறக்கவும். இதைப்போன்று 5 முறை செய்யவும். புருவங்களை குறுக்காமல், கண் இமைகளை மட்டும் மூடி, மூடி திறக்கவும். நெற்றி, முகத் தசைகள் சாதாரணமாக இருக்கட்டும். இந்த பயிற்சி கண்களைச் சுற்றியுள்ள தசைகளுக்கான பயிற்சி. கருவளையத்தை போக்க இதை தொடர்ந்து செய்யலாம். கருவளையம் அதிகமாக இருந்தால் பியூட்டி பார்லர்களில் ஐ மசாஜ் செய்தால் பலனளிக்கும்.

கண்களுக்கான மேக்கப் நீக்க வேண்டிய அவசியம்: இரவு படுக்கும் முன் கண்களில் போட்ட மேக்கப் முற்றிலும் அகற்றவேண்டும். செயற்கை இமைகள் பொருத்தியிருந்தால் அதை அகற்றவேண்டும். தற்போது, ஐ மேக்கர் ரிமூவரும் கிடைக்கிறது. பஞ்சைத் தொட்டு கண்களை மூடியபடி வெளியிலிருந்து உள்ளே மூக்கை நோக்கி துடைக்க வேண்டும். இரண்டு, மூன்று முறைகள் இப்படிச் செய்யவும். பிறகு கண்களைத் திறந்து, வேறொரு பஞ்சால் கண்களின் உள் பக்கத்தையும், கீழ் இமைகளையும் சுத்தப்படுத்த வேண்டும். கண்ணில் மேக்கப் முழுக்க அகற்றப்படாவிட்டால், அது எரிச்சலை உண்டாக்கி கண்கள் சிவந்து போகுமாறு செய்யும்.

சிவந்து, கண்ணீர் வடியும் கண்கள்
: கண்களுக்கு உபயோக்கின்ற மை, பிரஷ், ஐ லைனர், மஸ்காரா போன்ற ஏதேனும் அலர்ஜியானால் இப்படி கண்ணீர் வடியலாம். வாயில் துணியை வைத்து ஊதி கண்களின் மேல் வைக்கக்கூடாது. எச்சில் மூலம் தொற்றுக் கிருமிகள் கண்களுக்குள் போகும். கண்களை கழுவி விட்டு அப்படியே காத்திருக்கலாம். அலர்ஜி காரணமாக உண்டாகியிருந்தால் அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளலாம். கண்களுக்கான மேக்கப் சாதனங்கள் தரம் வாய்ந்தவையாக இருக்க வேண்டும்.

கண்களை பராமரிக்க டில டிப்ஸ்: சுத்தமான தண்ணீரால் அடிக்கடி கண்களை கழுவவும். சாதாரண மையில் ஆரம்பித்து, ஐ லைனர், ஐ ஷேடோ, மஸ்காரா என எல்லாமே தரமான தயாரிப்புகளாக இருக்க வேண்டும். கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் வேலை பார்ப்பவர்கள் அடிக்கடி கண்களை மூடி ஓய்வெடுக்க வேண்டும். கண்களுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய பச்சை, நீல நிறங்களை சிறிது நேரம் பார்க்கலாம். தினமும் 8 மணி நேர தூக்கம் மற்றும் 10 முதல் 12 டம்ளர் தண்ணீர் குடித்தால் நல்லது. பின்னர், கண்கள் வசீகரமாக தோற்றமளிக்கும்.

ரோஜாப்பூ தரும் மருத்துவ பயன்கள்

ரோஜாப்பூ தரும் மருத்துவ பயன்கள்
****************************************************
* வெற்றிலை - பாக்கு போடும்போது ரோஜா இதழ்களை சிறிது சேர்த்துக் கொண்டால், அஜீரணக் கோளாறு நீங்கும்.
* காதில் திருகு வலி ஏற்பட்டால், 2 சொட்டு ரோஜா தைலத்தைக் காதுக்குள் விட்டால் வலி, குத்தல் மறைந்துவிடும்.
* ஒரு கப் ரோஜா இதழுடன் பாசிப்பருப்பு சேர்த்துக் கூட்டாகச் சாப்பிட்டால் உடல் உஷ்ணம் நீங்கி, குளிர்ச்சியாகும்.
* ஒரு கைப்பிடி ரோஜா இதழ்களை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, இதனுடன் பால், வெல்லம் சேர்த்துக் குடித்தார்.. வாய்ப்புண், வாய் துர்நாற்றம் ஓடிப்போய் வாய் மணக்கும்.
* கர்ப்பிணிப் பெண்கள் தினமும், 5, 6 ரோஜா இதழ்களை சாப்பிட்டு வந்தால்... சிறுநீர் நன்றாகப் போகும்.
* சளித் தொல்லையால் அவதிப்படுபவர்கள்.. ரோஜாவை முகர்ந்தாலே போதும். சளி மூக் கடைப்பு நீங்கி, நன்றாக சுவாசிக்க முடியும்

பொன்மொழிகள்-9

ஒவ்வொருவரும் உங்களை நேசிக்க வேண்டுமென்றால், நீங்கள் முதலில் அனைவரையும் நேசிக்க வேண்டும்.
சத்குரு

Monday, July 21, 2014

தொழுது முடித்ததும் ஓத வேண்டிய திக்ருகள்!

‘அஸ்தஃக்பிருல்லாஹ், அஸ்தஃக்பிருல்லாஹ், அஸ்தஃக்பிருல்லாஹ். அல்லாஹும்ம அன்தஸ்ஸலாம் வமின்கஸ் ஸலாம் தபாரக்த யாதல் ஜலாலி வல் இக்ராம்”
(பொருள் : அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுகிறேன். இறைவா நீ எல்லாக் குறைகளை விட்டும் பாதுகாப்பு பெற்றவன். உன்னிடமிருந்தே பாதுகாப்பு ஏற்படுகின்றது. மதிப்பும் மகத்துவமும் மிக்கவனே! நீ உயர்ந்து விட்டாய்!)

ஏழைக்கு அரசு ஊழியர் வேலை கிடைக்க உதவிய காமராஜர்

ஏழைக்கு அரசு ஊழியர் வேலை கிடைக்க உதவிய காமராஜர்

******************************************************************


காமராஜர் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக இருந்த நேரம். தனது அதிகாரிகளுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
திரளான மக்கள் கூட்டத்திலும் சுலபமாக நெருங்க முடிந்த ஏழை மனிதர் ஒருவர், ``அய்யா எனக்கு ஏதாவது வேலை போட்டுக் கொடுங்க...'' என்று கையேந்துகிறார்.
அதிகாரிகள் அவசர கதியில் அவரை விசாரிக்கும் போது அவர் படிக்காதவர், பரம ஏழை என்று புலனாகிறது.
அந்த ஏழை மனிதருக்கு ஏதாவது அரசாங்க வேலை போட்டுத்தர முதல்-அமைச்சர் காமராஜர் விரும்பினார்.
அதுபற்றி அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த போது, ``படிக்காதவர், அதோடு அரசாங்க வேலை பார்க்கும் வயதுக்கான வரம்பையும் தாண்டியவர்'' என்று விளங்கிய அதிகாரிகள், ``சட்டரீதியாக அரசு வேலை கிடைக்க (கொடுக்க) வாய்ப்பில்லை'' என்பதையும் தெளிவுபடுத்தினார்கள்.
உடனே சட்டென முகம் வாடிப்போனது முதல்-அமைச்சருக்கு. ஆனாலும் தனது வேதனையை அதிகாரிகளிடம் கேள்வியாக்கினார். ``இல்லாத ஒரு ஏழைக்கு ஒரு வேலை கொடுத்து உதவ மாநிலத்தின் முதல்-அமைச்சருக்கே கூட அதிகாரம் இல்லாமல் ஒரு சட்டமா?''
முதல்-அமைச்சரின் இந்த வருத்தமான கேள்விக்கு உடனே தலைமை நிர்வாகி இப்படிப் பதில் சொன்னார். ``ஆனாலும் பொதுநலன் கருதி முதல்-அமைச்சர் தனது சுயசிந்தை மூலம் அச்சட்டத்தை மீற அச்சட்டமே இடம் கொடுக்கிறது''.
முதல்-அமைச்சர் முகத்தில் வருத்தம் மறைந்தது. ``ஒரு ஏழைக்கு உதவறதுன்னா என்ன? பொது நலன்னா என்ன? ரெண்டும் ஒண்ணுதானே.
இவருக்கு வாட்ச்மேன் வேலை போட்டு ஆர்டரை அடிச்சிட்டு வாங்க. நான் கையெழுத்துப் போடறேன்'' என்றார் மகிழ்ச்சி முகமாய்.
அதன்படியே அந்த ஏழைக்கு அரசு ஊழியர் வேலை கிடைத்தது.

இதய நோய்கள் குணமாக

1. மணத்தக்காளி கீரையோடு, பூண்டு 4 பல், நான்கு சிட்டிகை மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும்.

2. கொத்தமல்லிச் சாறு, பூண்டுச் சாறு, வெங்காயச் சாறு மூன்றையும் சம அளவில் எடுத்து, தேன் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் 30 மிலி அளவுக்குச் சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும்.

3. பிரண்டைத் தண்டுடன், வாதநாராயணன் இலை, பூண்டு, மிளகு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும்.

4. வல்லாரை இலை (4), அக்ரூட் பருப்பு (1), பாதாம் பருப்பு (1), ஏலக்காய் (3), மிளகு (3) ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து கொஞ்சம் கற்கண்டோடு அதிகாலையில் சாப்பிட்டு வந்தால், கடுமையான இதய நோய்கள் குணமாகும்.

5, ஆரைக்கீரை, தாமரைப் பூ இரண்டையும் சம அளவு எடுத்து, ஏலக்காயை (4) தட்டிப்போட்டு கஷாயமாக்கிச் சாப்பிட்டால் இதய நோய்கள் அனைத்தும் குணமாகும்.

6, வாதநாராயணன் கீரையுடன் சுக்கு, ஓமம், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும்.

7, வங்கார வள்ளைக் கீரைச் சாறில் பூண்டை (ஒரு பல்) அரைத்துச் சாப்பிட்டால் இதய நோய்களும், ரத்த அழுத்தமும் குணமாகும்.

உடலுறுப்பு தானம் உயிர்களை காக்கும்

நம்நாட்டில் ஆண்டிற்கு சராசரியாக 2 லட்சம் பேர் விபத்தில் சிக்கி மூளைச்சாவுக்கு ஆளாகி இறக்கிறார்கள். இவர்களது கிட்னி, இருதயம், நுரையீரல், கல்லீரல் ஆகியவை வீணாக மண்ணுக்கு போகிறது. மண்ணுக்கு வீணாக செல்லும் உறுப்புகளை வாழ காத்திருக்கும் மனிதருக்கு வழங்கினால், தானம் பெறுபவரும் வாழ்வார், தானம் கொடுத்தவரும் மற்றொரு உயிரில் வாழ்வார்.

ஆனால் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் மூளைச்சாவு ஏற்பட்டவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்படாமல் வீணாகிறது. மூளை சாவு ஏற்பட்டவரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க உறவினர்கள் முன் வர வேண்டும். உடல் உறுப்பு தானம் வழங்க வயது ஒரு தடையில்லை.

விபத்தில் சிக்கி மூளை சாவு ஏற்பட்டவரின் இதயம் துடித்து கொண்டிருக்கும். ரத்த அழுத்தம் குறைந்து வரும். அப்படியே விட்டால் 2 அல்லது 3 நாளில் தானாக உடலின் அனைத்து உறுப்புகளும் செயலிழந்து உடல் இறந்து விடும். அதற்குள் மூளைச்சாவு ஏற்பட்டதை உறுதி செய்ய 10 முதல் 15 வகையான பரிசோதனை உள்ளது. அதன் மூலம் உறுதி செய்த பின்னர், மருத்துவர் குழு உறவினர்களுக்கு அறிவிக்கும். உடனடியாக உறவினர்கள் மூளைச்சாவு ஏற்பட்டவரின் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தால் டாக்டர்கள் உடனடியாக அரசின் நல்வாழ்வுத்துறையில் பதிவு செய்வார்கள்.

இதற்கிடையில் உடல் உறுப்புகளை ஆரோக்கியமான நிலையில் அகற்ற போதுமான பராமரிப்புகளை கையாண்டு, அதை உயிர் நிலையில் வைத்திருப்பார்கள். பின்னர் உறுப்புகளை அகற்றி பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பொருத்த ஏற்பாடு செய்வார்கள். இதனால், பலரது உயிர்களை காக்க முடியும்.