Friday, August 15, 2014

இளமையாக என்றும் இருக்க உதவும் ஏலக்காய் !

மிளகுக்கு அடுத்து உலகில் அதிக மதிப்பு மிக்க நறுமணப் பொருள் ஏலக்காய் தான்.
ஏலக்காய் எல்லோருக்கும் மனதில் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தரும் அரிய பொருளாகும்.
இதில் உள்ள வாலட்டைல் என்ற எண்ணெய்தான் நறுமணத்தையும் தந்து நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலையும் தனக்குள் கொண்டுள்ளது. இதில் உள்ள காரக்குணம் வயிற்றுப் பொருமலைக் குணமாக்கி எளிதில் செரிமானம் ஆகும்படி தூண்டுகிறது.
ஏலக்காயை தேநீர் பாயசம் முதலியவற்றில் சேர்த்துப் பருகினால் இதில் உள்ள மனம் கவரும் நுண்ணிய பண்பு மன இறுக்கம் படபடப்பு முதலியவற்றை அகற்றி உடனடியாகப் புத்துணர்ச்சி அளிக்கிறது. எனவே காலையில் தேநீர் அல்லது காபியில் ஏலக்காய் சேர்த்து அருந்துவது நல்லது.
ஈரப்பதம் புரதம் மாவுப்பொருள் நார்ச்சத்து மற்றும் கால்சியம் பாஸ்பரஸ் இரும்பு போன்ற முக்கிய தாது உப்புக்களும் கலந்துள்ளன.
ஏலக்காய் ஆண்மைக் குறைவு பெண்மைக் குறைவும் நீக்கி குழந்தைப் பாக்கியமும் உண்டாக்க வல்லது பலர் அறியாத செய்தி. இது தாம்பத்திய வாழ்வில் இனிமை சேர்க்கவல்லதும் கூட!
இரவு ஒரு சிட்டிகை ஏலக்காய்த்தூளை அடித்தொண்டை அழற்சி தொண்டைக்கட்டு உள்நாக்கில் வலி குளிர்காய்ச்சலால் ஏற்படும் தொண்டைக்கட்டு முதலியவற்றைக் குணப்படுத்தி ஏலக்காயும் இலவங்கப்பட்டையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் கொப்பளித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.
நறுஞ்சுவையும் நறுமணமும் உள்ள மருந்துப்பொருள் ஏலக்காய் இதன் காரணத்தால் மருந்துத் தயாரிப்பாளர்கள் பலரும் பயன்படுத்தி நோய்கள் விரைந்து குணமாகவும் உடலுறுப்புகளை தூண்டிவிடவும் பயன்படுத்துகின்றனர்.

முருங்கைப்பூ!!!

உடல் சூட்டைத் தணிக்கும் முருங்கைப்பூ!
முருங்கைப்பூ நமது நாட்டில் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் கிடைக்கக்கூடிய அற்புதமான மருந்து மூலப்பொருளாகும்.
முருங்கை மரத்தின் இலை, பட்டை, வேர், காய் அனைத்தையுமே ஒவ்வொரு வகையில் மருத்துவச்சிறப்பு பெற்றுத் திகழ்கின்றன. 

கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டால் முருங்கைப்பூவையும் பிரண்டையையும் வகைக்கு ஒரு படி வீதம் சேகரித்து கொள்ள வேண்டும். சிறு துண்டு தேங்காயை அவற்றுடன் சேர்த்து புட்டு அவிப்பது போல் அவிக்க வேண்டும்.பின்னர் இதை பிழிந்து கொடுக்க வயிற்று வலி குணமாகும். 

நன்கு காய்ச்சிய பசுவின் பாலில் நாலைந்து முருங்கைப் பூக்களைப் போட்டு நாள்தோறும்- சாப்பிட்டு வந்தால் தாது நல்ல புஷ்டி பெறும். 

முருங்கை பூவுடன் கற்றாலைச்சாறு, பசு வெண்ணெய், ஆகியவற்றை சம அளவு கலந்து சாப்பிட்டு வந்தால் மேகநோய் எனப்படும் பெண் சீக்கு குணமாகிவிடும். 

மேநோய்க்கு வேறொரு பக்குவமும் செய்து சாப்பிடலாம். முருங்கைப்பூவை சாறெடுத்துக்கொள்ள வேண்டும்.இந்தச் சாற்றில் அரைக்கால் படி அளவு எடுத்து அதே அளவு நல்லெண்ணெய் கூட்டி நூறு கிராம் அளவுக்கு வெல்லம் சேர்த்து மூன்று நாட்கள் சாப்பிட்டாலே மேகநோய் தணிந்து விடும். 

உடல் சூட்டினை தணிப்பதற்கு முருங்கைப்பூ நல்ல முறையில் பயன்படும். முருங்கைப்பூவை கஷாயம் முறையில் பக்குவம் செய்து சாப்பிட்டால் உடல்சூடு உடனேயே சரிபடும். 

பெண்களுக்கு பெரும்பாடு என்னும் உதிரப்போக்கு ஏற்படுவதுண்டு. உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் உயிராபத்து ஏற்படக்கூடும். இதற்கு முருங்கைப்பூ பெரிதும் பயன்படுகிறது. முருங்கைப்பூவை நன்றாக அரைத்து ஒரு தேங்காய் அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். பசுவின் பாலும் தேங்காய் பாலும் படிக்கு அரைப்படி எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் 25 கிராம் வெல்லத்தை கூட்டி எல்லாவற்றையும் சேர்த்து காய்ச்சி இலேகிய பதத்தில் இறக்கிவிடவேண்டும். இந்த லேகியத்தை எலுமிச்சை அளவு எடுத்து ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பிடவேண்டும். இவ்வாறு ஒரு வருடம் சாப்பிட்டால் பெரும்பாடு என்னும் உதிரப்போக்கு குணமாகிவிடும்

இஞ்சி, ஓர் மருத்துவ மூலிகை

சுவைக்காக உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் இஞ்சி, ஓர் மருத்துவ மூலிகையாகும்.
உடலுக்கு தேவையான ரசாயனங்கள், தாதுக்கள் இஞ்சியில் நிறைந்து காணப்படுகிறது, 100 கிராம் இஞ்சி 80 கலோரி ஆற்றலை தருகிறது.
சக்தி நிறைந்த இஞ்சியின் தோல் பகுதி மட்டும் நஞ்சு போன்றது.
அதனால் தோலை நீக்கிவிட்டுத்தான் இஞ்சியை பயன்படுத்த வேண்டும்.
பசியின்மை, வாந்தி, குமட்டல், அஜீரணம், வயிற்றுவலி போன்றவைகளை போக்கும் சக்தி இஞ்சிக்கு உண்டு.
இது `ஆன்டி ஆக்சிடென்ட்’ ஆக செயல்பட்டு ஆயுளை அதிகரிக்கவும் செய்யும். பாக்டீரியா, வைரஸ் கிருமிகளை அழிக்கும் ஆற்றலும் இஞ்சியில் இருக்கிறது.
இஞ்சி டீ
ஒரு பாத்திரத்தில் அல்லது டீ குக்கரில் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் நன்கு கொதிக்கும்போது டீத்தூள், இஞ்சி சாறு, துளசியை சேர்க்கவும். உடனே ஒரு நிமிடம் மூடி வைக்கவும்.
பின் ஒரு பெரிய கப்பில் தேன் தேவைக்கேற்ப சேர்த்து டீயை வடிகட்டி கலக்கி கறுப்பு உப்பு ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு சேர்த்து கலந்து பரிமாறவும்.
பால் இல்லாத இந்த டீ மிகமிக சுவையாக இருக்கும். சூடாகவோ, ஜில்லென்றோ பருகலாம்.
ரத்தத்தின் அடர்த்தியை குறைக்கக்கூடிய ஆஸ்பிரின் போன்ற மாத்திரை, மருந்துகளை சாப்பிடக்கூடியவர்களும், உடல் உஷ்ணத்தன்மை கொண்டவர்களும் குறைந்த அளவிலே இஞ்சி சாறு பருகவேண்டும்.
இஞ்சி குழம்பு
தேவையானவை
இஞ்சி- 50 கிராம்
பூண்டு- 50 கிராம்
வெங்காயம்- ஒன்று
தக்காளி- ஒன்று
பச்சை மிளகாய்- 2
புளி- எலுமிச்சை அளவு
மிளகாய் – தூள்- அரை தேக்கரண்டி
மிளகு- ஒரு தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை- தாளிக்க
நல்லெண்ணெய்- ஒரு தேக்கரண்டி
செய்முறை
முதலில் இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்ய வேண்டும். பின் துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஒரு ஸ்பூன் ஊற்றி வெட்டிய இஞ்சியை பொன் நிறம் ஆகும் வரை வதக்கவும்.
பின் ஆறவைத்து பேஸ்ட் ஆக அரைத்து தனியே வைத்து கொள்ளவும்.
வாணலில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கருவேப்பிலை போட்டு தாளித்த பின், பச்சை மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
அதனுடன் நறுக்கின வெங்காயம் சேர்த்து நன்கு சிவக்க வதக்கவும்.
இப்பொழுது அரைத்து வைத்திருக்கும் இஞ்சி மற்றும் மிளகு கலவையை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
பின்னர் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்.
புளியை 3 கப் தண்ணீர் சேர்த்து கரைத்து அதை வதக்கியவற்றுடன் சேர்த்து கொதிக்க விடவும்.
ஒரு கொதி வந்ததும் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
மிளகாய் தூள் பச்சை வாசம் போகும் வரை கொதிக்கவிட்டு எண்ணெய் மேலே வந்ததும் இறக்கி விடலாம்.
இஞ்சி துவையல்
தேவையானவை
இஞ்சி துண்டு- 6
உளுத்தம் பருப்பு- ஒரு கப்(சிறியது)
புளி- ஒரு கொட்டை பாக்கு அளவு
காய்ந்த மிளகாய்- 2
உப்பு- தேவையான அளவு
பெருங்காயம்- சிறிதளவு
எண்ணெய்- வதக்குவதற்கு
செய்முறை
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பை லேசாக சிவக்கும் படி வறுக்கவும்.
பிறகு காய்ந்த மிளகாயையும் பெருங்காயத்தையும் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும்.
பிறகு இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக், அதையும் நன்கு வறுத்துக் கொள்ளவும்.
சூடு ஆறிய பிறகு வறுத்த பொருட்களுடன் உப்பு புளி சேர்த்து மிக்ஸியில் நற நற வென்று அரைக்கவும். சுவையான இ‌ஞ்‌சி துவையல் தயா‌ர்.

நரைமுடிக்கு 'குட்-பை' சொல்ல 5 நல்ல இயற்கை வழிகள்!!!

நரைமுடிக்கு 'குட்-பை' சொல்ல 5 நல்ல இயற்கை வழிகள்!!
நரைமுடி வருவதால் மக்கள் கவலைப்படுவது வழக்கம். ஆனால், மிகவும் அதிகமாகக் கவலைப்பட்டால் நம் தலையில் நரைமுடி தோன்றும் என்பதும் உண்மை தான். ஆணோ, பெண்ணோ... இளம் வயதில் நரை வந்துவிட்டால், அவர்கள் ரொம்பவே வருத்தப்படுவார்கள். நரைமுடி அவர்களுக்கு வயதான தோற்றத்தைக் கொடுப்பதால், அவர்கள் மிகவும் நொந்து போயிருப்பார்கள்.
நரையை மறைப்பதற்கு மக்கள் டை அடிப்பது இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது. பவுடர் மற்றும் திரவ நிலைகளில் நிறைய கம்பெனிகள் டை தயாரித்து வருகின்றன. அது மட்டுமல்ல, தற்போது பலப்பல வண்ணங்களிலும் நமக்கு இந்த சாயம் கிடைக்கிறது. ஆனாலும் அத்தகைய சாயங்களில் அம்மோனியா உள்ளிட்ட பல ரசாயனங்கள் கலந்திருப்பதால், முடி மற்றும் சருமம் ஆகியவற்றின் ஆரோக்கியம் பற்றிய கேள்விகள் எழுந்துள்ளன. முடிகள் உதிரவும், சருமங்களில் அலர்ஜி ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.
இதற்கு சரியான மாற்று வழி, ரசாயனங்கள் கலக்காத இயற்கையான முறையில் மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட சாயங்களை நாடுவதுதான். முடிந்தால், அவற்றை நாம் வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம். நரை முடிகளுக்கான சில இயற்கை தீர்வுகள் குறித்து பார்க்கலாம். ஏற்கனவே இவை நமக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் முயற்சித்திருக்கவே மாட்டோம். உடனே முயற்சி செய்து பாருங்கள்; பலன் நிச்சயம்!
தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை
தேங்காய் எண்ணெயுடன் சிறிது கறிவேப்பிலையைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும். பின் அதைக் குளிரச் செய்து, முடிகளில் நன்றாக மசாஜ் செய்து தேய்க்க வேண்டும். சுமார் அரைமணி நேரம் அப்படியே விட்டுவிட்டு பின்னர் மிதமான சுடுநீரில் ஷாம்பு கொண்டு கழுவினால், நல்ல பலன் கிடைக்கும். நரை முடியை மறைக்கும் திறன் கறிவேப்பிலையில் உள்ளது.
நெல்லிக்காய்
நெல்லிக்காயிலும் நரைமுடியை மறைக்கும் பண்பு காணப்படுகிறது. நெல்லிக்காயைச் சிறுசிறு துண்டுகளாக வெட்டி, நிழலில் நன்றாகக் காய வைக்கவும். பின், சுத்தமான தேங்காய் எண்ணெயில் அதைச் சிறிது நேரம் கொதிக்க வைத்து, பின்னர் அது குளிர்ந்ததும் தலையில் தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து, ஷாம்பு கொண்டு கழுவ வேண்டும். தினமும் காலையில் நெல்லிக்காய் ஊற வைத்த நீரில் தலைமுடியைக் கழுவி வருவதும் நல்லது.
மோர், கறிவேப்பிலை
கறிவேப்பிலை கலந்த மோரைத் தலைமுடியில் தேய்த்து, அரைமணி நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்னர் தலையை மெதுவாக மசாஜ் செய்து, தண்ணீரில் கழுவினால் சில நாட்களிலேயே நரை ஓடிப் போகும்.
நல்லெண்ணெய் மற்றும் கேரட் விதை எண்ணெய்
நரை வராமல் தடுப்பதற்கு, சிறிது கேரட் விதை எண்ணெயுடன் 4 ஸ்பூன் நல்லெண்ணெயை சேர்த்து தலையில் மசாஜ் செய்து தேய்க்க வேண்டும். சிறிது நேரம் கழித்து, ஷாம்பு கொண்டு கழுவ வேண்டும்.
எலுமிச்சை சாறு, பாதாம் எண்ணெய், நெல்லிக்காய்
இந்த மூன்றும் கலந்த கலவையைத் தயாரித்து 3 நாட்களுக்கு ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும். அந்தக் கலவையை தலைமுடியில் நன்றாக மசாஜ் செய்து, அரை மணிநேரம் அப்படியே விட்டுவிட வேண்டும். பின்னர், ஷாம்பு கொண்டு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தினமும் இதை செய்து வந்தால் நரைமுடிக்கு 'குட்-பை' சொல்லிவிடலாம்.

இயற்கை மருத்துவம்...

வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.
தேமல் மறைய
கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.
பாலுண்ணி மறைய
சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகுபோலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.
தொண்டை நோய்க்கு
கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.
பெளத்திரம் நீங்க
குப்பை மேனிச் சூரணமும், திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள பெளத்திரம் நீங்கும்.
தீச்சுட்ட புண்களுக்கு
வேப்பங் கொழுந்தைச் சிதைத்து ஆமணக்கிலையில் பொதித்து உப காந்தலில் பொதித்து வெந்த பதத்தில் எடுத்து மேற்படி புண்மேல் வைத்துக்கட்ட தீச்சுட்டபுண் ஆறிவிடும்.
தேக பலமுண்டாக
நத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.
படைகளுக்கு
பொன்னாவாரை வேருடன் சந்தனத்தை சேர்த்து அரைத்து தடவி வந்தால் படைகள் உதிர்ந்து மறைந்து போகும்.
கண்ணோய் தீர
வெள்ளை (அ) சிவப்பு நந்தியாவட்டை பூவை பிழிந்து அந்த ரசத்தை 2 – 3 துளி கணக்காய் காலை மாலை கண்களுக்கு விட்டு வர கண்ணோய் தீரும்.
கற்றாழை நாற்றத்திற்கு
கோஷ்டத்தைப் பசுவின் பால் விட்டரைத்து பாலில் கலக்கி உட்கொண்டு வந்தால் கற்றாழை நாற்றம் நீங்கும்.

அய்யங்கார் ஸ்பெஷல் புளியோதரை

என்னென்ன தேவை?
புளி - சிறிய கமலா ஆரஞ்சு சைஸில்
உப்பு - தேவையான அளவு
மிளகாய் வற்றல் - 10, 12
வெந்தயம் - 1 ஸ்பூன்
விரலி மஞ்சள் - 2
பெருங்காயக் கட்டி - சுண்டைக்காய் அளவு (சிறு துண்டு)
உளுத்தம் பருப்பு - 3 ஸ்பூன்
கடலைப் பருப்பு - 3 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - கொஞ்சம்
எண்ணெய் - கால் கப்
எப்படிச் செய்வது?
சுடுதண்ணீரில் புளியையும் உப்பையும் ஊற வைத்துக் கொள்ளவும் (தண்ணீர் 300 மி.லி.). கெட்டியான கரைசலாகக் கரைத்து வடிகட்டி எடுக்கவும்.
கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய்விட்டு வெந்தயம், மஞ்சள், கொஞ்சம் பெருங்காயத்தை வறுத்து எடுத்துப் பொடி செய்துகொள்ளவும்.
கடாயில் கொஞ்சம் எண்ணெய்விட்டு மிளகாயைக் கிள்ளிப் போட்டு வறுக்கவும். புளிக் கரைசலை விடவும். கொதித்து வரும்போது பொடியைப் போட்டுக் கிளறவும், தீ குறைவாக இருக்கட்டும்.
நன்கு கொதித்துப் பாதியாகச் சுண்டி வரும்போது கடாயில் எண்ணெய்விட்டுக் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றைப் பொன்னிறமாக வறுக்கவும். உடன் கறிவேப்பிலை போட்டுப் புளிக் கலவையில் சேர்த்துக் கலக்கவும்.
நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்துவரும் நேரம் இறக்கி ஆறவிடவும். பின் வேறு பாத்திரத்துக்கு மாற்றவும். இப்போது புளிக் காய்ச்சல் தயார்.
இது நாள்பட இருக்கும். தேவையானபோது புளிக் காய்ச்சல் போட்டு 2 ஸ்பூன் எண்ணெய்விட்டுக் கலக்கவும். 5 நிமிடங்கள் ஊறிய பிறகு பரிமாறலாம்.
குறிப்பு: சீதா சம்பத்

Thursday, August 14, 2014

காமராஜர் ஒரு சகாப்தம்

சென்னை மெரினா கடற்கரையில் ஒரு தடவை நடந்த பொதுக் கூட்டத்தில் காமராஜர் முன்னிலையில் முக்கியமான தலைவர்கள் பேசத் தொடங்கினர்.
எங்கிருந்தோ சரமாரியாக விழுந்த கற்களில் இரண்டு பேர் காயமுற்றனர். கூட்டத்தில் பரபரப்பு. காமராஜர் திரும்பிப் பார்த்தார்.
அவரிடம் காட்டுவதற்கு ரத்தம் வழிந்த தொண்டர்களைச் சிலர் மேடைக்கு அழைத்து வந்தனர். காமராஜர் கோபத்துடன் சீறினார்.இங்கே என்ன நாடகமா நடத்தறீங்க? அடிபட்டவனை ஆஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லாமல் மேடையில் என்ன ஷோ காட்டறீங்களா? போங்கப்பா...'' என்றார்.
ஒரு தொண்டன் சிந்திய ரத்தத்தைக் காட்டி, கூட்டத்தில் உணர்ச்சியை ஊட்டி அரசியல் நடத்த விரும்பாத அபூர்வமான அரசியல்வாதியை அன்று பலரும் பார்த்தனர்.
அடுத்து... கவிஞர் கண்ணதாசன் பேசுவார் அறிவிக்கப்பட்டது.
ரத்தம் சிந்திய தொண்டரைப்பார்த்து கண்ணதாசன் உணர்ச்சிப் பொங்க பேசினார். அவரது பேச்சு திடீரென காவல் துறை மீது திரும்பியது.
போலீஸ் கமிஷனர் ஷெனாய் மந்திரிகளின் மனைவிமார்களுக்குப் புடவை துவைக்கப்போவது நல்லது என்று கண்ணதாசன் ஆவேசமாக கூறினார்.
அந்த பேச்சை அரசியல் மேடை நாகரிகத்தின் எல்லை மீறப்பட்டதாகக் காமராஜர் கருதினார்.
நீ பேசியது போதும்... உட்காருன்னேன் என்று சொல்லியபடி கவிஞரின் சட்டையைப் பிடித்திழுத்து உட்கார வைத்து விட்டார்.