Friday, February 17, 2017

கல்வி வள்ளல், கர்மவீரர் காமராஜர்

கர்மவீரர் காமராஜர் முதல்வராய் இருந்த போது, மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்ர்க்கை ஒதுக்கீட்டில், முதலமைச்சருக்கென 10 இடங்கள் Quota ஒதுக்கியிருந்தார்களாம். அதற்கென விண்ணப்பங்களும் வரவேற்கப்பட்டனவாம். அந்த விண்ணப்பங்களிருந்து யாரை வேண்டுமானாலும் 10 பேரை முதல்வர் தேர்ந்தெடுக்கலாம். காமராஜரின் உதவியாளருக்கு ஒரு எண்ணம் தோன்றியதாம்.

சீடரின் கேள்விக்கு மௌலானா ரூமி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அற்புத பதில்கள்:


விசம் என்பது என்ன..?
நமது தேவைக்கு அதிகமான அனைத்தும் விசமே, அது நமது அதிகாரமாக, செல்வமாக, பசியாக, அகங்காரமாக, பேராசையாக, சோம்பேரித்தனமாக, காதலாக, லட்சியமாக, வெறுப்பாகவும் எதுவாகவும் இருக்கலாம்.
அச்சம் என்பது என்ன..?
எதிர்பாராதவற்றை ஏற்றுக் கொள்ள மறுப்பதே அச்சமாகும், அதை நாம் ஏற்றுக் கொண்டால் அது சாகசமாகிவிடும்.

Friday, February 10, 2017

முதலமைச்சராக காமராஜர்! அறிஞர் அண்ணா எதிர்க் கட்சித் தலைவர்!
விலைவாசி உயர்வைப் பற்றி விவாதம்! அண்ணாவுக்கு வழங்கப்பட்டதோ கால் மணி நேரம். அவர் பேசியதோ முக்கால் மணி நேரம். காமராசர் பேச்சை ரசித்துக் கொண்டே எவரையும் குறுக்கிடக் கூடாது என்று கண்ணாலேயே உத்தரவு பிறப்பிக்கிறார்.
அண்ணா தனது பேச்சை நிறைவு செய்யும் போது, “ முதலமைச்சர் காமராசருக்கு , விலைவாசி உயர்வால் குடும்பங்கள் படும் கஷ்டங்கள் புரியாது. காரணம் அவர் பிரம்மச்சாரி. தனிக்கட்டை. குடும்பம் நடத்திப் பார்த்தால்தான் குடும்பங்கள் படும் கஷ்டம் தெரியும் ! “ என்று குறிப்பிட்டார்.

Saturday, January 28, 2017

காமராஜர் ஒரு சகாப்தம்,

காமராஜர் ஒரு முறை ஒரு கலெக்ட்டரை அழைத்து இருந்தார்.. உரையாடலுக்கிடையே தேநீர் வந்தது.. டீயக் குடிங்கன்னேன்.. என்றார் காமராஜர்..தேநீரைப் பருக சில நிமிடங்கள் தயக்கம் காட்டினார் அந்த கலெக்டர்..

Monday, January 16, 2017

முடி உதிர்வுக்கு குட்பை... அசத்தல் நெல்லிக்காய்!

நெல்லிக்காய்
நெல்லிக்காய் என்றதும் நம் நினைவுக்குவருவது அதன் சுவையும், கண்ணைக் கவரும் பச்சை நிறமும்தான். ஆனால் சுவையையும் தாண்டி அதில் இருக்கும் சத்துகள் அநேகம். அதனால்தான் ஔவை முதல் சித்தர்கள் வரை அதைக் கொண்டாடினார்கள். நெல்லிக்காயின் மருத்துவப் பயன்களை விளக்குகிறார் சித்த மருத்துவர் சோ.வித்யா. 

Saturday, January 14, 2017

பன்முக கலாச்சாரமும் இஸ்லாமிய ஆட்சியாளர்களும்

பன்முக கலாச்சாரம் கொண்ட பல சமூகங்கள் வாழும் நாட்டை இஸ்லாமிய ஆட்சியாளர்கள் ஆண்டால் அவர்களின் கலாச்சாரத்தில் கைவைக்க மாட்டார்கள்.
பாலஸ்தீனத்தை கஃலீபா உமர் அவர்கள் கைப்பற்றிய போது கிருஸ்த்துவ மற்றும் யூதர்களுக்கு எழுதிக் கொடுத்த ஒப்பந்த பத்திரம் இன்றும் பாதுகாக்கப்பட்டு இருக்கிறது. அதில் உமர் பைத்துல் முகத்தஸ்வாசிகளுக்கு எழுதியளித்த ஒப்பந்த வரிகள்:

Thursday, January 12, 2017

நபிகள் நாயகம் (ஸல்) மற்றும் ஸஹாபாக்கள் வாழ்க்கையில் எவ்வளவு ஏழ்மை?

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)  
நபிகள் நாயகத்தின் (ஸல்) மிக நெருங்கிய நண்பர் ஹஜ்ரத் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களுக்கு மிகுந்த வயிற்று பசி ஏதாவது உணவு இருக்கிறதா? என மனைவியிடம் கேட்கிறார்கள் தண்ணீரை தவிர எதுவும் இல்லை என்கிறார் அவரது மனைவி... சரி உமருடைய வீட்டிற்கு சென்று வருகிறேன் என்று சொல்லிவிட்டு செல்கிறார்கள்...
பாதி வழியில் ஹஜ்ரத் உமர் (ரலி) எதிரே வருகிறார்கள்... என்னவென்று கேட்கிறார்   ஹஜ்ரத் அபூபக்கர் சித்தீக் (ரலி வீட்டில் தண்ணீரை தவிர உண்பதற்கு எதுவும் இல்லை எனவேதான் உங்களை பார்க்க வருகிறேன் என்கிறார்கள் ஹஜ்ரத் உமர் (ரலி) சரி என் வீட்டிலும் இதே நிலைதான் அதனால் தான் நான் உங்களை பார்க்க வந்தேன் என கூறிவிட்டு இருவரும் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களை சென்று பார்க்கலாம் என நபிகளாரின் வீட்டிற்கு செல்கின்றனர்...