Saturday, August 26, 2017

இருபெருநாள்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ......
955. பராஃ(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள்தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) 'நம்முடைய தொழுகையைத் தொழுது, (அதன் பிறகு) நாம் குர்பானி கொடுப்பதுபோன்று கொடுக்கிறவரே 'உண்மையில் குர்பானி கொடுத்தவராவார். தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறவர் தொழுகைக்கு முன் (தமக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவரல்லர்.' என்று குறிப்பிட்டார்கள். 

Friday, August 25, 2017

ஹராமான, தடுக்கப்பட்ட, பாவமான காரியத்தைப் போன்ற செயல்களை செய்வது

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ......
உங்களில் யாரேனும் மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத ஹராமாக அறிவிக்கப்பட்ட இரத்தம், பன்றியின் இறைச்சி, தாமாக செத்தபிராணிகள் மற்றும் அல்லாஹ்வின் பெயர் சொல்லப்படாமல் அறுக்கப்பட்ட மாமிசத்தை உண்ண விரும்புவாரா?
அல்லது
இறந்த தனது சகோதரரது மாமிசத்தை உண்ண விரும்புவாரா?
கலிமா ஓதும் உங்கள் பதில் இல்லை என்றுதான் இருக்கும்!
ஆனால் மேற்கண்ட ஹராமான, தடுக்கப்பட்ட, பாவமான காரியத்தைப் போன்ற செயல்களை உங்களில் பலர் உங்களை அறியாமலேயே செய்து வருகிறீர் அதுதான்.

இகாமத் சொல்ல மறந்தால் தொழுகை கூடுமா?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ......
இகாமத்_சொல்ல_மறந்தால்_தொழுகை_கூடுமா?
கடமையான தொழுகையில் இகாமத் சொல்ல மறந்த நிலையில் தக்பீர் கட்டி, தொழுது விட்டோம். இந்தத் தொழுகை கூடுமா? கூடாதா?
பதில் : கூடும். ஒரு நன்மையை இழந்து விடுகின்றோம்.

ஜும்ஆ தொழுகையின் ஒழுங்கும் சிறப்பும் :

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு
மூன்று பேர்கள் ஜும்ஆவிற்கு வருகின்றார்கள். ஒருவர் ஜும்ஆவிற்கு வந்து (குத்பாவின் போது பேசி) வீணாக்குகின்றார். இதுவே அவரது ஜும்ஆவில் கிடைத்த அவருடைய பங்காகும்.
இன்னொருவர் ஜும்ஆவிற்கு வந்து பிரார்த்திக்கின்றார். இவர் மகத்துவமும், கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தவராவார். அவன் நாடினால் அவருக்கு வழங்குவான். அவன் நாடினால் அவருக்கு (கொடுக்காமல்) தடுக்கின்றான்.

Thursday, August 24, 2017

குர்பானியின் சட்டங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு
🕋கிப்லாவை முன்னோக்கித் தான் அறுக்க வேண்டுமா
💢🐄குர்பானிப் பிராணியை *கிப்லாவை முன்னோக்கித்தான்* அறுக்க வேண்டும் என்று *கூறுவதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்* எதுவும் இல்லை. இது தொடர்பாக பைஹகியில் இடம் *பெறுகின்ற ஹதீஸை இமாம் பைஹகீ அவர்களே பலவீனமானது* என்று குறிப்பிட்டுள்ளார்கள். எனவே *எந்தத் திசை* அறுப்பவருக்கு *தோதுவாக* உள்ளதோ அந்தத் திசையில் அறுக்கலாம்.
💢🐫சில ஊர்களில் அறுப்பதற்கு முன்னால் பிராணியைக் *குளிப்பாட்டுவது, மஞ்சள் பூசுவது, கண்களில் சுர்மா இடுவது, கொம்புகளில் பூச்சுற்றுவது* போன்ற செயல்களைச் செய்கின்ற னர். *இவை எல்லாம் மாற்றுமதக் கலாச்சாரங்களாகும்* . மேலும் நபி(ஸல்) அவர்கள் காட்டித் தராத *மார்க்கத்தில் புதிதாக நுழைக்கப்பட்ட பித்அத்'தான* நடைமுறைகளாகும். இவற்றைத் தவிர்ப்பது மிகவும் அவசியமானதாகும்.

வெள்ளிக்கிழமை அன்று அரஃபா நோன்பு வைக்கலாமா?...



🗣
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு
கேள்வி : வெள்ளிக்கிழமை அன்று அரஃபா நோன்பு வைக்கலாமா ?
 பதில் : 🍁 துல்ஹஜ் மாதம் பிறை 9 அன்று அரஃபா நோன்பு நோற்குமாறு நபிகளார் வழிகாட்டியுள்ளார்கள். இதற்கு நன்மையையும் குறிப்பிட்டுள்ளார்கள்.

🍁 துல்ஹஜ் ஒன்பதாவது நாள் (அரஃபா) அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: உமர் (ரலி), நூல்: முஸ்லிம் (2151)
🍁 முந்தைய பிந்தைய பாவங்கள் மன்னிப்பதற்கு காரணமாக இருக்கும் இந்த அரஃபா நோன்பு இந்த வருடம் வெள்ளிக்கிழமை வருகிறது. எனவே வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு வைக்கலாமா? அல்லது முந்தைய ஒரு நாள்அல்லது பிந்தைய ஒரு நாள் சேர்த்து வைக்க வேண்டுமா? என்று ஐயம் பின்வரும் நபிமொழிகளை பார்க்கும் போது எழலாம்.

சில உளவியல் உண்மைகள்!


1. அதிகம் சிரிப்பவர்கள்..... தனிமையில் வாடுபவர்கள்..
2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள்..
3. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்..
4. அழுகையை அடக்குபவர்கள்... மனதால் பலவீனமானவர்கள்..
5. முரட்டுத்தனமாக உண்பவர்கள்..!!! மன அழுத்தத்தில் இருப்பவர்கள்..
6. சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள்!!!! அப்பாவிகள். மனத்தால் மென்மையானவர்கள்..
7. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள்... அன்புக்காக ஏங்குபவர்கள்...!!!!