Saturday, September 29, 2018

அல்குர்ஆனை ஓதியபோது, வந்திறங்கிய மலக்குகள்...!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குர்ஆனை ஓதுவது என்றால் உஸைத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மிகவும் ஆசை!
தனியாக உட்கார்ந்து ஓதிக்கொண்டே இருப்பார்.
அதுவும் இரவு நேரத்தில், மக்கள் எல்லாம் தூங்கிய பிறகு, நட்சத்திரங்கள் மட்டும் விழித்திருக்கும் நேரத்தில் தனியாக உட்கார்ந்து ஓதுவார்.
ஒருநாள் அதேபோல இரவுநேரம் ஊரெல்லாம் இருட்டு கவிந்திருந்தது. தூங்க மனம் வரவில்லை உஸைதுக்கு! இரவு நேரத்தில் இறை அடியார்கள் தூங்க நினைக்க மாட்டார்கள். இறைவனை வணங்க வேண்டும்: குர்ஆனை ஓதவேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள்.
வீட்டின் கொல்லைப் புறத்தில் போய் உட்கார்ந்து கொண்டார். பக்கத்தில் தன்னுடைய மகனையும் படுக்கவைத்துக் கொண்டார்.

Thursday, September 27, 2018

தம் இறைவனின் வல்லமையும் மாண்பும்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வல்லமையும் மாண்பும் மிக்க தம் இறைவன் குறித்து அறிவித்தார்கள்:  
ஓர் அடியார் ஒரு பாவம் செய்துவிட்டார். பிறகு "இறைவா! (நான் ஒரு பாவம் செய்து விட்டேன்.) என் பாவத்தை மன்னிப்பாயாக!" என்று கூறினார். உடனே வளமும் உயர்வும் உள்ள இறைவன், "என் அடியான் ஒரு பாவம் செய்துவிட்டுப் பிறகு தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிக்கவும் செய்வான்; பாவங்களுக்காகத் தண்டிக்கவும் செய்வான் என்றும் அறிந்துகொண்டான்" என்று சொல்கிறான்.

Friday, September 21, 2018

முஹர்ரம் 10 - ஆஷூரா நோன்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முஸ்லிம்களில் சிலர் முஹர்ரம் 10 வந்துவிட்டால், அந்த நாளில் என்னசெய்ய வேண்டுமென்று மார்க்கம் சொல்லியிருக்கிறது என்றெல்லாம் பார்ப்பதில்லை காலம் காலமாக நடைமுறையில் என்ன உள்ளதோ அதையே செய்து நன்மைக்கு பதிலாக அல்லாஹ்விடம் பாவத்தை பெற்றுக் கொள்வதை பார்க்கிறோம்.

சில பகுதிகளில் முஹர்ரம் 10 அன்று கொழுக்கட்டை சுட்டு மற்றவர்களுக்கு கொடுப்பது என்ற பழக்கம் இருந்தது. அல்லாஹ்வின் பேரருளால் தற்போது இந்த பித்அத் குறைந்துள்ளது. எனினும், முழுமையாக ஒழியவில்லை.

Wednesday, August 29, 2018

மரணம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும்    உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒரு நாள் அபூ தன் மனைவி மற்றும் அவரது பிள்ளைகளுடன் பயணம் சென்று கொண்டு இருந்தார்...,!
வழியில் சாலையோரம் ஒரு நபர் நின்று கொண்டு இருந்தார்..
அபூ கேட்டார்: "நீங்கள் யார்?"
அந்த நபர் கூறினார் :"நான் 'பணம்'
அப்பொழுது அபூ தன் மனைவி மற்றும் குழந்தைகளிடம் கேட்டார்:
"நாம் நமது சவாரியில் இவரை சேர்த்துக் கொள்ளலாமா....?
அனைவரும் கூறினார்:

Tuesday, August 28, 2018

மஸீஹ் தஜ்ஜால்..

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும்    உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டம் வெளிக் கிளம்புவதற்கு முன்னதாக தஜ்ஜால் புறப்பட்டு வருவான்.
தஜ்ஜாலுக்கு பல பெயர்கள் உள்ளன. சிலர் அவனை ‘ஸாயிப்பின் ஸய்யாத்’ என்றழைகின்றனர். பிறிதொரு ரிவாயத்தின்படி அப்துல்லாஹ் என்றழைக்கப்படுகின்றான். மேலும் அவன் ‘மஸீஹ்’ என்றும் அழைக்கப்படுகின்றான். காரணம் அவனது இரண்டு கண்களில் ஒன்று தடவப்பட்டுள்ளது. இன்னொரு கருத்தின்படி குறுகிய காலத்தில் அவன் பூமியைக் கடப்பதனாலும் ‘மஸீஹ்’ என்று அழைக்கப்படுகின்றான்.

Sunday, August 26, 2018

#பெண்கள் மார்க்க கடமைகளில் குறையுள்ளவர்களா?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும்    உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மாதவிடாய் காலத்தில் நோன்பு, தொழுகைகளை விட வேண்டும் என்று அல்லாஹ்வே கூறியிருக்கும் போது அதை மார்க்கக் கடமையில் குறை என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவது முரண்பாடாகத் தெரிவதால் இவ்வாறு கேட்டுள்ளீர்கள். நீங்கள் குறிப்பிடும் ஹதீஸ் இது தான்.
ஹஜ்ஜுப் பெருநாள் அன்றோ நோன்புப் பெருநாள் அன்றோ தொழும் திட-ற்கு நபி(ஸல்) அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது சில பெண்களுக்கு அருகே அவர்கள் சென்ற போது, “பெண்கள் சமூகமே! தான தர்மம் செய்யுங்கள்! காரணம் நரக வாசிகüல் அதிகமாக இருப்பது நீங்கள் தாம் என எனக்குக் காட்டப்பட்டது” என்று கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! ஏன்’ என்று அப்பெண்கள் கேட்டனர்.

Monday, August 20, 2018

நபி(ஸல்) கூறிய புற்று நோயை தடுக்கும் தூங்கும் முறை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும்    உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விஞ்ஞானிகள் ஆச்சரியபடும் புற்று நோயை தடுக்கும் நபி(ஸல்) தூங்கும் முறை
நமது உடல் ஓர் அற்புத படைப்பு. அதில் ஆச்சரியப்படத்தக்க பல அம்சங்கள் உள்ளன!!
அதில் ஒன்றுதான் நமது உடலில் நேரத்தை தானாகவே ஒழுங்கு படுத்தும் உயிரியல் நேர முறைமை (Biological Clock System)!!!