Saturday, October 11, 2014

ஜும்மா தொழுகை

ஜும்மா தொழுகையை சும்மா தொழுகையாக கருதும் அலட்சியமானவர்களே...!
ஐந்து நேர தொழுகையும் இல்லை. ..சுன்னத்தான தொழுகைகளும் இல்லை. .நபீலான தொழுகைகளும் இல்லை. ...பிறகு எதற்காக உன் பிறப்பு?

நீ பிறக்கபட்டதன் நோக்கமே அல்லாஹ் ஒருவனை வணங்குவதற்காக தானே..! உன் பிறப்பின் நோக்கத்தை கூட அறியாத நீ என்ன வாழ்க்கையை வாழ்கின்றாய் இந்த பூமியில்!
நீ முஸ்லிமாக பிறந்ததற்கு உனக்குரிய அடையாளமே இந்த ஐந்து நேர தொழுகை தான்...நான் முஸ்லிம் என்று வாயால் அறிமுகம் செய்வதில் எந்த பலனுமில்லை...உனக்கும் மாற்றுமதத்தாருக்கும் உள்ள வேறுபாடு இந்த தொழுகை தான் என்று நமது தூதர் சுற்றிகாட்டியுள்ளாரே! அந்த வித்தியாஷம் உன்னில் எங்கே?
ஜும்மா என்பது இன்று சும்மா ஆகிவிட்டது...அஸ்தஃபிருல்லாஹ். ...
ஆண்களுக்கு கடமையான தொழுகை இந்த ஜும்மா தொழுகை....
அல்குர்ஆன்-62:29
இறைநம்பிக்கை கொண்டவர்களே! வெள்ளிக்கிழமை அன்று தொழுகைக்காக அழைக்கபட்டால் வியாபாரத்தை விட்டுவிட்டு அல்லாஹ்வை நினைவுகூறுவதற்காக விரைந்து செல்லுங்கள். .நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு சிறந்ததாகும்...
வியாபாரத்தை விட்டுவிட்டு தொழுகைக்காக விரைபவர்கள் நம்மில் எத்தனை பேர்?
தொழுகைக்காக கடையை அடைக்காமல் தொழசெல்லாமல் இருக்கிறார்கள் சிலர்....
ஏதோ கடமையை நிறைவேற்றுவோம் என்று சொல்லி இமாம் தக்பீர் சொன்னதும் பள்ளிக்கு செல்பவர்கள் சிலர்....
அல்லது இமாம் உரையை முடிக்கும் நேரத்தில் செல்பவர்கள் சிலர். ..
அவ்வாறு முதலிலே பள்ளிக்கு சென்றாலும் இமாமுடைய உரையை செவி தாழ்த்தாமல் பேசிகொண்டு இருப்பவர்கள் சிலர்....
தூங்கி கொண்டு இருப்பவர்கள் சிலர்....
இவ்வாறாக ஜும்மாவை பாழாக்கி விட்டு அதனை பற்றி துளியளவு சிந்தனையற்று இருக்கின்றோமே தீர்ப்பு நாளை மறந்துவிட்டோமா?
முதல் வரிசைக்கும்..முதலாவது ஆளாக சென்று ஒட்டகத்தை குர்பானி கொடுத்த நன்மையை அடைய வேண்டுமென்று போராடி வெள்ளிக்கிழமை அன்று இமாம் மிம்பரில் ஏறுமுன்பே நன்மைகாக காத்திருந்து அமைதியாக பிறரிடத்தில் ஒரு சைகை கூட செய்யாமல் இமாமின் உரையை செவிதாழ்த்தி கேட்டு பின் தொழுகையை நிறைவேற்றினாலே ஜும்மாவின் நன்மையை நாம் அடைந்தவராவோம்....
இதற்கு ஆதாரமாக வரும் ஹதீஸ்கள்...புகாரீ 881,924..
என்று பார்த்தாலும் இமாம் தக்பீர் கட்டியதும் அவசரமாக வந்து தொழுகையில் கலந்து கொள்பவர்களே அதிகம்...அதில் என்ன நன்மை உள்ளது?
ஜும்மா தொழுகையை இன்று தொழுதால் அடுத்த ஜும்மா வரை உள்ள பாவங்கள் மன்னிக்கபடுகின்றன....பெரும் பாவங்கள் தவிர்க்கபட்ட நிலையில்....
அலட்சியம் ஆபத்தானது...அதிலும் இறைவனின் கட்டளைகளில் அலட்சியம் செய்தால் இறைவனின் கோபத்திற்கு ஆளாகிவிடுவோம்...வியாபாரத்தை தந்தவன் அவன்...அவனுக்காக இரண்டு மணி நேரம் வியாபாரத்தை தவிருங்கள்....பரக்கத்தான வாழ்க்கையை பெறவேண்டுமானால் அல்லாஹ்வின் துணை வேண்டும் ......
அவனை நினைவுகூறுங்கள்...அவனும் உங்களை நினைவுகூறுவான்....

No comments:

Post a Comment