Thursday, November 27, 2014

லேப்டாப் அடிக்கடி சார்ஜ் இறங்கிவிடுகிறதா?

லேப்டாப் அடிக்கடி சார்ஜ் இறங்கிவிடுகிறதா? உங்களுக்கு உபயோகமான சில பேட்டரி டிப்ஸ் வேணுமா? கீழே படியுங்கள்...
லேப்டாப்பிற்கு சரியான கூலிங் பேடை பயன்படுத்தவேண்டும், இது லேப்டாப்பை சூடாகாமல் பாதுகாக்கும்.
அவ்வப்போது பேட்டரியை கழற்றி சுத்தம் செய்ய வேண்டும்.
லேப்டாப்பை எப்பவும் ஏசி அறையில் பயன்படுத்தினால் சரியான இடைவெளியில் பேட்டரியை கழற்றி அறை வெப்பநிலையில் வைக்க வேண்டும்.
உங்க லேப்டாப் மற்றும் அதை பயன்படுத்தும் அறையை எப்பவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
லேப்டாப் ஸ்கிரீன் அதிக பேட்டரியை பயன்படுத்தும் அதனால் டிஸ்ப்ளே ப்ரைட்னெஸ்ஸை குறைவாக வைத்து பயன்படுத்தவேண்டும்.
இன்டெர்நெட்டை பயன்படுத்தாத சமயத்தில் வைபை ரிசீவரை ஸ்விட்ச் ஆஃப் செய்யவேண்டும்.
லேப்டாப்பில் எப்பவும் குறைவான அப்ளிகேஷனை மட்டும் பயன்படுத்தவேண்டும். இது லேப்டாப்பின் பேட்டரியை குறைவாகவே பயன்படுத்தும்.
மியுசிக் ப்ளேயரை ஸ்விட்ச் ஆஃப் செய்யவேண்டும், அல்லது மியுசிக் சிஸ்டத்தின் சத்தத்தை குறைவாக வைத்து கொள்ளவேண்டும்.
லேப்டாப்பில் இருக்கும் குறைந்த பவர் யூஸேஜ் ஆப்ஷனை பயன்படுத்தவேண்டும். இது லாப்டாப்பின் பேக்லைட்டை குறைத்துவிடும்.

No comments:

Post a Comment