Wednesday, December 10, 2014

ஹதீஸ்-கடைப்பிடிக்கும்படி & தடை விதித்த ஏழு விஷயங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏழு விஷயங்களைக் கடைப்பிடிக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
ஏழு செயல்களைச் செய்ய வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தார்கள்.
எங்களுக்கு அவர்கள் கடைப்பிடிக்கும்படி கட்டளையிட்ட ஏழு விஷயங்களாவன:
1. நோயாளிகளை நலம்விசாரிப்பது.
2. ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வது.
3.தும்மிய(வர் "அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்" என்று கூறினால் அவருக்கு ("அல்லாஹ்,உங்களுக்குக் கருணை புரிவானாக!" என்று)மறுமொழி கூறுவது.
4.சத்தியத்தை நிறைவேற்றுவது அல்லது (உன்னோடு தொடர்புடைய ஒரு விஷயத்தில்) சத்தியம் செய்தவருக்கு அதை நிறைவேற்ற உதவுவது.
5.அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவுவது.
6.விருந்தழைப்பை ஏற்றுக்கொள்வது.
7. (மக்களிடையே) சலாமைப் பரப்புவது.
எங்களுக்கு அவர்கள் தடை விதித்த ஏழு விஷயங்களாவன:
1. (ஆண்கள்) "பொன் மோதிரம் அணிவது" அல்லது மோதிரங்கள் அணிவது"
2. வெள்ளிப் பாத்திரத்தில் பருகுவது.
3.மென்பட்டுத் திண்டு பயன்படுத்துவது.
4.(ஆண்கள் எகிப்தியப்) பட்டு கலந்த பஞ்சாடை அணிவது.
5. (ஆண்கள்) சாதாரணப் பட்டு அணிவது.
6.(ஆண்கள்) கெட்டிப் பட்டு அணிவது.
7. (ஆண்கள்) அலங்காரப் பட்டு அணிவது.

No comments:

Post a Comment