அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு........!!!!!
இறைவா !
எங்களை விட்டும் மரணித்தவர்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக கருணை புரிவாயாக ; (மறுமையின் சோதனைகளிலிருந்து) அவர்களைக் காப்பாயாக ; அவர்கள் பாவங்களை மாய்ப்பாயாக ; அவர்களுக்கு நல்கப்படும் விருந்தை நல்லதாக்குவாயாக !
அவர்கள் புகுமிடத்தை (கப்றை) விசாலமாக்குவாயாக ; அவர்களுடைய குற்றங்குறைகளிலிருந்து அவர்களை நீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் (கழுவி), அழுக்கிலிருந்து வெண்மையான ஆடையை நீ தூய்மைப்படுத்துவதைப் போன்றுதூய்மைப்படுத்துவாயாக ; மேலும், இங்குள்ள வீட்டைவிடச் சிறந்த வீட்டை அவர்களுக்கு வழங்குவாயாக ; இங்குள்ள குடும்பத்தைவிடச் சிறந்த குடும்பத்தை வழங்குவாயாக ; இங்குள்ள துணையைவிடச் சிறந்த துணையை அவர்களுக்கு வழங்குவாயாக ; அவர்களைச் சுவர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வாயாக ; அவர்களை மண்ணறையின் வேதனையிலிருந்து காத்தருள்வாயாக / நரகத்தின் வேதனையிலிருந்து காத்தருள்வாயாக !)ஆமீன்…. ஆமீன்…. ஆமீன்…. ஆமீன்…. ஆமீன்….
No comments:
Post a Comment