Wednesday, December 17, 2014

நபிமார்கள் பற்றிய தகவல்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
நபிமார்கள் பற்றிய தகவல்கள்
நபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்தை தம் மூச்சாகக் கொண்டு செயல்பட்டவர்கள்.
மக்களை அறியாமை இருளிலிருந்து ஒளியின் பால் அழைப்பதற்காக பாடுபட்டவர்கள். அவர்களின் ஏகத்துவ அழைப்பை ஏற்றவர்களும் உண்டு. ஏற்காதவர்களும் உண்டு. ஏற்காதோர் இறைத் தண்டனைக்கு ஆளாகி அழிந்தனர். ஓரிறைக் கொள்கையை உலகில் பிரச்சாரம் செய்த அந்த உத்தமர்கள் பற்றிய அரிய தகவல்களை வினா விடைவாயிலாக கீழே காண்போம்.
1. (மர்யம் பின்த் இம்ரான்) இம்ரானின் மகள் மர்யத்தை வளர்ப்பதற்கு பொறுப்பேற்றவர்
யார்?
நபி ஸகரிய்யா ( அலை).
2. மூஸா (அலை) அவர்களின் அமைச்சராகச் செய்ல்பட்டவர் யார்?
ஹாரூன் (அலை).
3. மீனால் விழுங்கப்பட்ட இறைதூதர் யர்?
நபி யூனுஸ் ( அலை).
4. யூஸுஃப் (அலை) அவர்களின் உடன் பிறந்த சகோதரர் யார்?
புன்யாமீன்.
5. தந்தையில்லாது பிறந்த இறைதூதர் யார்?
நபி ஈஸா(அலை)
6. எந்த இறைதூதரின் மகன் (காஃபிர்) இறை நிராகரிப்பாளன்?
நூஹ் நபியன் மகன்.
7. எந்த நபியின் தந்தை (காஃபிர்)இறை நிராகிப்பாளன்?
நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் தந்தை.
8. தான் உழைக்காமல் உண்ணமாட்டார். அந்த நபி யார்?
நபி தாவூது (அலை)
9. தாவூது நபியின் நோன்பு எவ்வாறிருந்தது?
ஒருநாள் நோன்பிருப்பார். மறுநாள் நோன்பை விட்டுவிடுவார்.
10. நீண்ட காலம் நோயுற்று பொறுமை காத்த நபி யார்?
நபி அய்யூபு (அலை)
11. கொடுங்கோலன் பிர்அவ்னிடம் “நீங்கள் இருவரும் சென்று பிரச்சாரம் செய்யுங்கள்!”
என்று யாருக்கு இறைவன் கட்டளை பிறப்பித்தான்?
மூஸா (அலை), ஹாரூன் (அலை) ஆகிய இருவருக்கும்.( 20:43)
12. யூனுஸ் (அலை) எந்த மக்களுக்கு இறைதூதராக அனுப்பப்ட்டார்கள்?
நீனவா மக்களுக்கு.
13. எந்த நபியை நம்ரூத் மன்னன் நெருப்புக் குண்டத்தில் போட்டான்?
நபி இப்றாஹீம் (அலை) அவர்களை.
14. ஈஸா நபியவர்கள் எந்த சமூயத்திற்கு நபியாக அனுபப்பட்டார்கள்?
பனீ இஸ்ரவேலர்களுக்கு!
15. சிறையிலடைக்கபட்ட இறை தூதர் யார்? நபி யூஸுஃப் (அலை).
16. “இப்னுத் தபீஹைன்”(அறுப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்ட இருவரின்) மகன் யார்?
நபி முஹம்மது (ஸல்). (இப்றாஹீம் நபியின் மகன் இஸ்மாயீலும், அப்துல் முத்தலிபின் மகன்
அப்துல்லாஹ்வும் பலியிடுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள்).
17. “கலீலுல்லாஹ்” (இறைவனின் உற்ற நண்பர்) என அழைக்கப்பட்டவர் யார்?
நபி இப்றாஹீம் (அலை)
18. “கலீமுல்லாஹ்” (இறைவனிடம் உரையாடியவர்) என அழைக்கப்படுபவர் யார்?
நபி மூஸா (அலை)
19. “ஹபீபுல்லாஹ்” ( இறைவனின் நேசத்தை அதிகம் பெற்றவர்) யார்? நபி முஹம்மத் (ஸல்)
20. “தபீஹுல்லாஹ்” ( பலியிட அழைத்துச் செயல்லப்பட்டவர்) யார்?
நபி இஸ்மாயீல் (அலை)
21.ரூஹுல்லாஹ் ( இறைவனால் ரூஹ் ஊதப்பட்டவர்) யார்?
நபி ஈஸா (அலை).
22. அபுல் பஷர் ( மனிதத்தந்தை) யார்.
முதல் மனிதர் ஆதம் (அலை).
23. அபுல் அன்பியா (நபிமார்களின் தந்தை எனப்படுபவர் யார்?
நபி இப்றாஹீம் (அலை). இவர்களிலிருந்தே அதிகமான நபிமார்கள் தோன்றியதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றனர்.
24.நபி யூஸுஃப் (அலை) அவர்கள் கிணற்றில் எறியப்பட்டு எத்தனை நாட்கள் அங்கே
இருந்தார்கள்?
மூன்று நாட்கள்.
25. நபி யூஸுஃப் (அலை) அவர்கள் எத்தனை நாட்கள் சிறை வைக்கப்பட்டார்கள்?
ஏழு வருடங்கள்.

No comments:

Post a Comment