Wednesday, December 10, 2014

பழகியவர்களை ஒருபோதும் மறக்காதவர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்ய காமராஜர் வந்திருந்தார். நாகர்கோவில் கோட்டார் பகுதியில் டாக்டர் இ.வி.நாயுடு ஆஸ்பத்திரியின் அருகே வரும் பொழுது பக்கத்தில் உள்ள தெருவில் சுதந்திர போராட்ட தியாகி சி.பி.இளங்கோ நடந்து வந்து கொண்டிருந்தார்.

சாலையில் காரில் சென்று கொண்டிருந்த காமராஜர் அவரை பார்த்த உடன் காரை நிறுத்த சொன்னார். கார் நின்றது. உடனே அவர், "அதோ நடந்து வருவது இளங்கோ தானே? அவரை இங்கே அழைத்து வாருங்கள்'' என்றார். உடன் வந்தர்கள் உடனே ஓடிச் சென்று இளங்கோவிடம் "பெரியவர் கூப்பிடுகிறார்'' என்று கூற அவரும் உடனே வந்தார்.

காமராஜர் காரில் இருந்து இறங்கி, இளங்கோவை பார்த்து, "என்ன இளங்கோ? பார்த்து அதிக நாளாகி விட்டதே! சவுக்கியமாக இருக்கிறாயா? குடும்பம் எல்லாம் நல்லா இருக்கின்றதா?'' என்று நலம் விசாரித்தார். பிறகு "நான் புறப்படுகிறேன்.
கன்னியாகுமரியில் தங்குகிறேன் வந்து பார்'' என்று சொல்லி விட்டு காரில் புறப்பட்டு சென்றார்.
அப்போது, தியாகி சி.பி.இளங்கோவிடம் "உங்களுக்கு இவ்வளவு நெருக்கம் எப்படி என்று கேட்டனர்.
அதற்கு அவர் சுதந்திரப் போராட்ட காலத்தில் ஜீவா, நான், காமராஜர் எல்லோரும் ஒன்றாகச் சிறைச் சாலையில் இருந்துள்ளோம். அந்த நெருக்கம்'' என்றார்.
அப்போது நினைத்துக் கொண்டேன். பெரியவர் தன்னோடு பழகியவர்களுக்கும், சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும் எவ்வளவு மதிப்பு வைத்துள்ளார் என்றார்.

No comments:

Post a Comment