Wednesday, December 10, 2014

ஹதீஸ்-பாவங்களிலேயே மிகப் பெரிய பாவம்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை தன் தோழர்களிடம் கூறினார்கள்: "பாவங்களிலேயே மிகப் பெரிய பாவத்தை நான் சொல்லித் தரட்டுமா...?
"ஆம் இறைத்தூதரே!" என்று தோழர்கள் கூறினார்கள்.
நபி( ஸல்) கூறினார்கள்:
"அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், பெற்றோருக்கு கொடுமை இழைத்தல்" என்றார்கள்.
( நூல்: புகாரி, முஸ்லிம் )
பிள்ளைகள் மீது பெற்றோர்கள அதிருப்தியுற்ற நிலை இறந்துவிட்டால் உலகத்திலே ஆறுவிதமான தண்டனைகள் உண்டு. மறுமையில் மூன்று விதமான தண்டணையும் உண்டு.
1. ‪#‎உங்கள்‬ ஒளியை அணைத்து விடுவான்  அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும்
ஒளியற்ற வாழ்வுதான்...
நபி (ஸல்) கூறினார்கள்: "உன் தந்தையின் அன்பை பாதுகாத்துக் கொள். அதை துண்டித்து விடாதே! அப்படிச் செய்தால் ஒளியை அல்லாஹ் அணைத்துவிடுவான்." ( நூல்: ஹாகிம் )
2.‪#‎உலகின்‬ இழிவான வாழ்வு.
நபி(ஸல்) கூறினார்கள்: "முகத்தில் மண்தான் ( இழிவுதான் ) முகத்தில் மண் தான். முகத்தில் மண் தான். தோழர்கள் கேட்டனர்: "யாரை கூறுகின்றீர்கள் இறைத்தூதரே!
நபி (ஸல்) கூறினார்கள்: "வயதான நிலையில் பெற்றோர்கள் இருந்தும் சுவனத்திற்கு தகுதியானவனாக யார் தன்னை மாற்றவில்லையோ அவன்." ( நூல்: முஸ்லிம் )
3.‪#‎தண்டணை‬ உலகிலேயே விரைவாக கிடைக்கும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மறுமைக்கு முன் உலகிலேயே தண்டனையைப்
பெற்றுத் தரும் காரியங்கள் - பெற்றோர் கொடுமை, உறவை துண்டித்தல்."
4. ‪#‎தொடர்‬ சோதனைகள்.
"உலகிலேயே தொடர்ந்து சோதனைக்கு உள்ளாக்கப்படுவான்."
5. ‪#‎இறக்கும்போது‬ ஷஹாதத் கலிமா வாயில் வராது.
அல்கமா (ரலி) நல்ல நபித்தோழர். மரண வேளையில் மக்கள் அருகிலிருந்து ஷஹாதத் சொல்லிக் கொடுக்க அவரின் நாவில் அது வரவில்லை. நபி(ஸல்) அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு. அவர்கள் வந்தார்கள். தோழர்களிடம் கேட்டார்கள்:
"இவருடைய தாயார் உயிருடன் இருக்கின்றாரா?"
"ஆம்...... இறைத்தூதர் அவர்களே!"
"அழைத்து வாருங்கள்" அந்தத் தாயார் வந்த பின் தாயிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்: "அக்மாவைக் குறித்து ஏதாவது மனவேதனை உங்களுக்கு உண்டா....?"
"ஆம் இறைத்தூதர் அவர்களே! பழங்கள் வாங்கி வருவான் என் மகன். மனைவிக்கும் மக்களுக்கும் இனிப்பானதைக் கொடுத்துவிட்டு எனக்குப் புளிப்பான பழங்களைத் தருவான்."
"அவனை மன்னித்து விடக்கூடாதா....?
"இல்லை இறைத்தூதரே! அவனின் செயலால் எனக்கு மனவேதனை உண்டு."
அந்த தாயின் மனதை மாற்ற வேண்டி நபி (ஸல்) தோழர்களிடம் கூறினார்கள்:
"நெருப்பை மூட்டி அல்கமாவை அதி்ல் போடுங்கள்."
நெருப்பு மூட்டப்பட்டது. தாய் மௌனமாகவே நிற்க அல்கமா கொண்டு வரப்பட்டார். மகனையும் நெருப்பையும் அருகருகே பார்த்த தாயின் மனம் மாறுகிறது.
"இறைத்தூதர் அவர்களே! அவனை நான் பொருந்திக் கொண்டேன்; அவனை நான் மன்னித்துவிட்டேன்!" என்று தாய் கூற; அல்கமாவின் உதடுகள் " அஷஹது
அன்லாயிலாஹ இல்லல்லாஹ்...என்ற கலிமாவை கூற நபி (ஸல்) தம் தோழர்களிடம்.
"பாருங்கள்........... பாருங்கள்.......... அவரின் தாயார் அவரை மன்னித்துவிட்டார்" என்றார்.
( நூல்: முஸ்லிம் )
6.‪#‎பிள்ளைகளுக்கு‬ எதிராக பெற்றோர்கள கேட்கும்
துஆ உடனே ஒப்புக் கொள்ளப்படும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மூன்று துஆக்கள் உடனே ஏற்றுக் கொள்ளப்படும்,
1. அநீதி இழைக்கப்பட்டவனின் துஆ,
2. பயணிகளின் துஆ
3. பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு எதிராகக் கேட்கும் துஆ." ( நூல்: அஹ்மத், திர்மிதி, அபூதாவூத் )
-இவை இவ்வுலகில் உள்ள ஆறு சோதனைகள் என்றால் மறுமையில் இதைவிட மிகக் கொடியது.
1.‪#‎மறுமையில்‬ அல்லாஹ் பார்க்கமாட்டான்:
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: பெற்றோர்களை கொடுமை செய்தவனை மறுமையில்
அல்லாஹ் பேசமாட்டான், பார்க்கமாட்டான், அவர்களுக்கு கடுமையான வேதனையுண்டு."
( நூல்: நஸயீ )
2.‪#‎நற்செயல்களை‬ அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான்:                                                       நபி(ஸல்) கூறினார்கள்: "தம் தாய் தநதையர்களை நோவினை செய்துவிட்டு இஸ்லாத்தின் கடமைகளை செய்தால்கூட அல்லாஹ் அதை ஏற்பதில்லை."
3.#மறுமையில் சுவனம் நுழைவது இறுதிவரை தாமதப்படுத்தப்படும்:
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "படைப்பினங்களக்கெல்லாம் தீர்ப்பு சொல்லும்வரை
பெற்றோர்களுக்கு நோவினை செய்தவன் சுவனம் புகமுடியாது."
இறைவா! எங்களை எங்கள் பெற்றோர்கள் பொருநத்க் கூடிய நிலையிலும் எங்களை உனக்கு கட்டுப்பட்ட முஸ்லிம்களாக வாழ்ந்து மரணிக்கின்ற பாக்கியத்தைத் தருவாயாக!!


No comments:

Post a Comment