Tuesday, December 2, 2014

அற்புத கலந்துரையாடல்:-

ஒரு சமயம் அலி (ரலியல்லாஹூ அன்ஹு) அவர்களுக்கு, உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. அவர்களை விசாரிக்க கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்), அபூபக்கர் ( ரலியல்லாஹு அன்ஹு), உமர் (ரலியல்லாஹு அன்ஹு), உதுமான் (ரலியல்லாஹு அன்ஹு) அனைவரும், ஃபாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள்.
அத்தனை பேரும் ஒரே சமயத்தில் வந்தது, கண்டு, அலி (ரலியல்லாஹு அன்ஹு) படுக்கையில் இருந்து எழுந்து வரவேற்றார்கள்.
...
ஃபாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் சாப்பிட ஏதாவது, இருக்கின்றதா? என்று வினவ " கொஞ்சம் தேன்" இருக்கின்றது என்றார்கள்.
...
வந்திருந்த அனைவருக்கும் தேன் வழங்கப்பட்டது.
..
கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம், தேனையும், கிண்ணத்தையும், பார்த்து அதில் ஒரு முடி இருப்பதை பார்த்துவிட்டு, தேனை அருந்திவிட்டு, கிண்ண்த்தை உற்று பார்த்தவாறு " அருமை தோழர்களே!! இதோ பிரகாசமான கிண்ணம்.
அதில் இனிமையான தேன். அதில் ஒரு முடி" இதை வைத்து உங்கள் பொன்னான கருத்துக்களை சொல்லுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்கள்.
.....
1.அபூபக்கர் சித்தீக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், "ஈமான் இந்த கிண்ணத்தை விட பிரகாசமானது. ஈமானோடு வாழ்வது தேனைவிட இனிமையானது,..ஈமானோடு இறப்பது இந்த முடியை விட சிக்கலானது." என்றார்கள்.
....
2.உமர் (ரலியல்லாஹு அன்ஹு)அவர்கள் "ஆட்சி அதிகாரம், இக்கிண்ணத்தைவிட பிரகாசமானது.ஆட்சி புரிவது. தேனை விட,
இனிமையானது.. ஆட்சியில் நீதமாக நடந்து கொள்வது இந்த முடியை விட சிக்கலானது" என்றார்கள்.
....
3.உதுமான் (ரலியல்லாஹு அன்ஹு)அவர்கள்,"கல்வி இந்த கிண்ணத்தை விட, பிரகாசமானது... மார்க்க கல்வியை கற்றுக்கொள்வது தேனைவிட இன்பமானது" என்றார்கள்.
...
4.ரலி (ரலியல்லாஹு அன்ஹு)அவர்கள், "விருந்தாளிகள், இந்த கிண்ணத்தை விட பிரகாசமானவர்கள்..விருந்தாளிகளை உபசரிப்பது, இந்த தேனைவிட, இனிமையானது.. விருந்தாளியை திருப்தி படுத்துவது , இந்த முடியை விட சிக்கலானது" என்றார்கள்.
..
5.ஃபாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா)அவர்கள், "பெண்களிடம் வெட்கம் என்பது இந்த கிண்ணத்தைவிட பிரகாசமானது.. பிறரிடம் இருந்து,உடலை மறைத்து வாழ்வது இந்த தேனைவிட இனிமையானது" என்றார்கள்.
...
6.இறுதியாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம்)அவர்கள்,
"உருவமில்லாத இறைவன் இக்கிண்ணத்தைவிட,பிரகாசமானவன்..
அந்த அல்லாஹ்விடம் ஒன்றிவிடுவது இந்த தேனைவிட இனிமையானது,..அல்லாஹ்வின் கட்டளையின் பிரகாரம் வாழ்வது, இந்த முடியைவிட சிக்கலானது" என்று அறிவித்தார்கள்.
...
7.உடனே அங்கு வந்த ஜிப்ரீல் (அலைஹி வஸல்லிம்)அவர்கள்,
"அல்லாஹ்வின் பாதை இக்கிண்ணத்தைவிட பிரகாசமானது..
.அல்லாஹ்வின் பாதையில் செல்வது இந்த தேனைவிட இனிமையானது.. அல்லாஹ்வின் பாதையில்,கடைசிவரை,
இஸ்திகாமத்தாக இருப்பது முடியைவிட சிக்கலானது" என்றார்கள்.
.....
8.இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அல்லாஹ் சொல்லி அனுப்பினான்..."முஹம்மது அவர்களே, சுவர்க்கம் இந்த கிண்ணத்தை விட பிரகாசமானது..சுவனத்தில் படைக்கப்பட்ட பொருட்கள் இந்த,
தேனைவிட இனிமையானது. .சுவனத்தின் பாலத்தை (சிராத்-பாலம்),
கடப்பது இந்த முடியைவிட சிக்கலானது" என்றான்.

No comments:

Post a Comment