Saturday, January 17, 2015

இஸ்லாமிய கேள்வி பதில்

"ல்லாஹ்” என்ற வார்த்தையின் பொருள் என்ன?
”அல்லாஹ்” என்ற வார்த்தை எத்தனை விரிவான பொருளை கொண்டுள்ளதோ அத்தகையதொரு வார்த்தை பிறமொழிகளில் இல்லை என்பதே தெளிவான முடிவாகும் இறைவன் கடவுள் ஆண்டவன் போன்ற வார்த்தைகள் இதன் நேரடிப் பொருள் அல்ல.
லக்குகள் என்போர் யார்? அவர்களின் தன்மை என்ன?
மலக்குகள் என்போர் ஒளியால் படைக்கப்பட்ட படைப்பாகும். அல்லாஹுத ஆலாவின் அற்புத படைப்புகளில் இவர்களும் ஒன்றாகும். அவர்களை எல்லோரும் பார்க்க முடியாது. யாருக்கு அவர்கள் காட்சியளிக்கிறார்களோ அவர்களே பார்க்க முடியும். அவர்கள் விரும்பினால் நாய், பன்றியைத் தவிர மற்ற உறுவங்களில் வரலாம். அவர்கள் ஆண்களுமல்ல. பெண்களுமல்ல, அவர்களுக்கு ஊண், உறக்கம், மறதி, இச்சை எதுவும் இல்லை.

பிமார்கள், ரசூல்மார்கள், என்போர் யார்?
நபிமார்கள், ரசூல்மார்கள் என்பவர்கள் மனித, ஜின் இனங்களை நேர்வழிப்படுத்துவதற்காக மனிதர்களிலிருந்தே அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட அடியார்களும், தூதர்களுமாவார்கள்.

வேதங்கள் என்றால் என்ன?
மக்களை நேர்வழிபடுத்துவதற்காக ரசூல்மார்களுக்கு இறக்கி வைக்கப்பட்ட அல்லாஹ்வின் திருவசனங்களே வேதங்களாகும். இதல்லாமல் சிறு ஏடுகளும் சிலருக்கு அருளப்பட்டன. இந்த வேதங்களிலும், ஏடுகளிலும் முன்னோர்களின் சரித்திரங்களும் வாழ்க்கூடிய மக்கள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும், மறுமையின் நிகழ்ச்சிகளும் இடம் பெற்றிருக்கின்றன.

லக இறுதி நாள் என்பது என்ன? எப்போது ஏற்படும்?
இந்த உலகமும், இதிலுள்ள எல்லா வஸ்த்துக்களும் அழியக்கூடியதாகும். அதற்கு பிறகு உள்ள நாள் கியாமத் நாள், இறுதி நாள் எனக் கூறப்படும். இது எப்போது ஏற்படும் என்று அல்லாஹுத் தஆலா மட்டுமே அறிவான்.

No comments:

Post a Comment