ஈமான் என்ற அரபி வார்த்தைக்கு நம்பிக்கை கொள்வது என்று பொருளாகும். நடைமுறையில் அல்லாஹ்வை நம்பி, நமது நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த விஷயங்களை நம்பிக்கை கொள்ள வேண்டுமென்று சொன்னார்களோ அவற்றை நம்பிக்கை கொள்வதற்கு ஈமான் என்று சொல்லப்படுகிறது.
ஈமான் இருவகைப்படும். அவை ஈமான் முஜம்மல், ஈமான் முஃபஸ்ஸல் ஆகும்.
ஆறு விஷயங்களை நம்பிக்கை கொள்ள வேண்டும்.
அல்லாஹுதஆலா ஒருவன் உண்டென்று நம்புவது.
மலக்குகள் உண்டென்று நம்புவது.
வேதங்கள் வந்ததை நம்புவது.
இறை தூதர்கள் வந்ததை நம்புவது.
உலக இறுதி நாளை நம்புவது.
நன்மை தீமை யாவும் அல்லஹ்வின் ஏற்பாட்டின் படியே நடக்கின்றன என்று நம்பிக்கை கொள்வது ஆகியவையாகும்.
இந்த ஆறு விஷயங்களையும் உள்ளடக்கி இருக்கக்கூடிய கலிமாவான லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி வணக்கத்திற்குரியவன் அல்லாஹுத்தஆலாவைத் தவிர வேறு யாருமில்லை. முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹு தஆலாவின் திருத்தூராகும், என்ற கலிமாவை உள்ளத்தால் நம்பிக்கைகொண்டு நாவால் மொழிபவருக்கே முஃமின் என்று சொல்லப்படும்.
மேற்கூறிய விஷயங்களை நம்பிக்கை கொள்ளாமல் மறுப்பவர்களுக்கு “காபிர்” என்று சொல்லப்படும்.
அல்லாஹு தஆலாவை ஏற்றுக் கொண்டிருந்த போதிலும், அவனுக்கு இணையாக பல தெய்வங்களை வைத்து வணங்குபவர்களே “ முஷ்ரிக்” ஆவார்கள்.
மேற்கூறப்பட்ட விஷயங்களை உள்ளத்தில் ஏற்றுக்கொள்ளாமல் வெளிப்பார்வையில் மற்றவர்களிடம் காண்பிப்பதற்க்காக நாவால் மட்டும் சொல்பவர் “முனாபிக்” (நயவஞ்சகன்) ஆவார்.
ஈமானுக்கு முரண்பாடான சில எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் காரணமாக ஒரு முஃமின் தனது ஈமானை இழந்து விடுகிறார்.

No comments:
Post a Comment