Saturday, January 17, 2015

தயம்மும் மற்றும் அது தொடர்பான விளக்கங்களும்

தயம்மும் என்பது உளு செய்வதற்கோ, குளிப்பை நிறைவேற்றுவதற்கோ தண்ணீர் இல்லத போது அல்லது தண்ணீர் இருந்தும் அதைப் பயன்படுத்த முடியாதபோது மண்ணால் செய்யும் சுத்தமாகும்.
சுமார் 2 கீ.மீ தூரம் சுற்றளவில் தண்ணீர் இல்லாவிட்டால் தண்ணீரை புலங்குவதால் வியாதி உண்டாவதையோ, அல்லது அதிகமாவதையோ, உயிருக்கு ஆபத்து விளைவதையோ அஞ்சினால், இருக்கின்ற தண்ணீர் தாகத்த்டை தீர்க்கவே போதுமென்ற நிலையில் இருந்தால் உளு செய்யவோ, குளிக்கவோ சென்றால் ஜனாசாத் தொழுகை, பெருநாள் தொழுகை தவறி விடும் என்று அஞ்சினால் தயம்மும் செய்யலாம். சாதரண தொழுகை தவறுவதயோ அஞ்சினால் தயம்மும் செய்யலாகாது. வெந்நீரை பயன்படித்த முடிகின்ற போதும் தயம்மும் செய்யக்க் கூடாது.
தயம்முமின் நிய்யத் அதன் பர்ளுகள் அதை செய்யும் முறைகள் என்ன?
தயம்முமை நிறைவேற்றுகிறேன் என்று நிய்யத் செய்வது ஷர்த்தாகும்.
இரு கைகளையும், முகத்தையும், தயம்மும் செய்து தடவுவது பர்ளாகும்.
தயம்மும் நிய்யத் செய்துகொண்dடு இரு கைகளையும் தயம்மும் செய்யும் இடத்தில் அடித்து முன் பின்னாக இழுத்து உதறியபின் இரு கைகளையும் முகத்தில் உளுவின் எல்லை முழுவதும் படும்படி தடவவேண்டும். பின்பு மறு முறை இவ்வறு அடித்து முன்பின்னாக இழுத்து உதறிய பின் இரு கைகளில் உளுவின் எல்லை முழுவதிலும் படும்படி தடவ வேண்டும்.
எந்த பொருள்களில் தயம்மும் செய்யலாம்?
புழுதியுள்ள மண், மணல், கல் ஆகுயவற்றிலும் செய்யலாம். நெருப்பில் எரிந்து சாம்பலாக கூடியதும், உருகிவிடக்கூடியதுமான் மரம், தங்கம், வெள்ளி போன்றவைகளில் தயம்மும் செய்யக்கூடாது.
தயம்முமை முறிக்கும் காரியங்கள் எவை?
உளுவை முறிக்கும் காரியங்கள் தயம்முமையும் முறிக்கும், மேலும் எந்த காரணத்தினால் தயம்மும் செய்தாரோ அந்தக் காரணம் நீங்கி விட்டாலும் தயம்மும் முறிந்துவிடும்.
ஒரு தயம்முமை கொண்டு எத்தனை தொழுகைகளை தொழ முடியும்?
ஒரு தயம்முமை கொண்டு எத்தனை பர்ளுகள், நபில்கள் வேண்டுமானாலும் தொழலாம்.
காயம் ஏற்பட்டு கட்டு போடப்பட்டிருந்தால் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?
ஒரு உறுப்பை கழுவுவதற்கும், மஸஹு செய்வதற்கும் முடியாதபடி கட்டிபோடபட்டிருந்தால் அந்த கட்டின் மீது மஸ்ஹு செய்ய வேண்டும். உளு செய்து விட்டு கட்டு போடவேண்டுமென்ற நிபந்தனை இல்லை.

No comments:

Post a Comment