Saturday, January 17, 2015

தொழுகையின் பர்ளுகள்,வாஜிபுகள் மற்றும் சுன்னத்கள்

தொழுகையின் பர்ளு
தொழுகையின் பர்ளு என்பது அதை விட்டால் தொழுகை கூடாது திருப்பித் தொழவேண்டும். 
அவை 6.
1. தக்பீர் தஹ்ரீமா கூறுதல் 
2. நிலை நிற்பது
3. கிராஅத் ஓதுதல் 
4. ருகூவு செய்தல் 
5. இரண்டு ஸுஜுது செய்தல் 
6. கடைசி இருப்பு இருத்தல் 

தொழுகையின் வாஜிபு
வாஜிபு என்பது பர்ளுக்கு அடுத்த அந்தஸ்தில் உள்ளதாகும். ஒரு வாஜிபை விட்டுவிட்டல் தொழுகை கூடிவிடும். ஆனால் வேணுமென்று விட்டிருந்தாலும், மறதியாக விட்டிருந்து அதற்காக சுஜூது செய்யாவிட்டலும், தொழுகையை திருப்பி தொழுவது வாஜிபாகும். இல்லாவிட்டால் குற்றவாளியாக வேண்டியதேற்படும். இந்த வாஜிபுகள் 18.
1. அல்ஹம்து சூரா ஓதுதல்.
2. அத்துடன் ஒரு சிறு சூரா அல்லது மூன்று சிறிய ஆயத்துக்களை ஓதுவது. இவ்வாறு ஓடுவது பர்ளான தொழுகையில் இரண்டு ரக அத்களிலும் வித்ரு, நபில் தொழுகையில் எல்லா ரக் அத்களிலும் வாஜிபாகும்.
3. பர்லான தொழுகையில் முந்திய இரு ரக அத்களில் கிராஅத்தை குறிப்பாக்குவது.
4. அல்ஹம்து சூராவை முந்தியும், மற்ற சூராவை பிந்தியும் ஓடுவது.
5. சுஜூதில் நெற்றியுடன் மூக்கையும் வைப்பது.
6. அடுத்த ரகஅத்திற்கு எழுந்திருக்கும் முன்பு ஒவ்வொரு ரகஅத்திலும் இரண்டாவது சுஜூது செய்தல்.
7. ஒவ்வொரு பர்ளான செயல்களையும் அமைதியாகச் செய்வது.
8. முந்திய இருப்பு இருப்பது ( இரண்டுக்கு அதிகமான ரக அத்களுள்ள தொழுகையில்)
9. முந்திய இருப்பில் அத்தஹிய்யாத் ஓதுவது.
10. கடைசி இருப்பில் அத்தஹிய்யாத் ஓதுவது.
11. இரண்டுக்கும் அதிகமான ரகஅத்களுள்ள தொழுகையில் முந்திய இருப்பில் அத்தஹிய்யாத்து ஓதியதும் தாமதிக்காமல் மூன்றாவது ரக அத்திக்கு எழுந்திருப்பது.
12. தொழுகையை முடிக்கும் போது சலாம் சொல்வது.
13. வித்ரு தொழுகையில் குனூத் ஓதுவது.
14. இரு பெருநாள் தொழுகைகளில் கூடுதலான (ஆறு) தக்பீர்கள் சொல்வது.
15. எல்லா தொழுகையும் ஆரம்பிக்கும் போதும் அல்லாஹு அக்பர் என்ற சொல்லை பயன்படுத்துவது ( வேறு வார்த்தையை பயன்படுத்தக்கூடாது )
16. இரு பெருநாள் தொழுகைகளில் இரண்டாவது ரகஅத்தில் ருகூவுக்கு செல்வதற்கு தக்பீர் சொல்வது.
17. பஜர் தொழுகை, மஃரிபு, இஷாவுடைய முந்திய இரு ரகஅத்கள், ஜும்மா தொழுகை, இரு பெருநாள் தொழுகை, தராவீஹ் தொழுகை, ரமலான் மாத வித்ரு தொழுகை ஆகியவற்றில் இமாம் சப்தமிட்டு ஓதுவது.
18. லுஹர் அஸர் தொழுகைகளிலும், இஷா, மஃரிபுடைய முந்திய இரு ரகஅத்களுக்கு பிறகுள்ளதிலேயும் பகலில் நபில் தொழுகையிலும் சப்தமின்றி ஓதுவது அகியவையாகும்.


தொழுகையின் சுன்னத்
சுன்னத்களை செய்தால் தொழுகை பூர்த்தியாவதுடன் நன்மையும் பூர்த்தியாக கிடைக்கும். விட்டு விட்டால் தொழுகை நிறைவேறிவிடுமென்றாலும் தொழுகையில் குறையை ஏற்படுத்தும். எனவே தொழுகையை திருப்பித் தொழுவது விரும்பத்தக்க செயலாகும். அத்தகைய சுன்னத்கள் 23.
1. தக்பீர் தஹ்ரீமா (முதல் தக்பீர்) கட்டுவதற்காக இருகைகளையும் உயர்த்துதல்.
2. விரல்களை விரித்து வைத்திருத்தல்.
3. தக்பீர் சொல்லும்போது தலையைத் தாழ்த்தாமல் இருப்பது.
4. தக்பீர் தஹ்ரீமாவை இமாம் சப்தமிட்டு சொல்வது.
5. தக்பீர் கட்டியதும் தனா ஓதுவது.
6. பிற்கு அஊது பில்லாஹி மினஹ் ஷைத்தானிர் ரஜீம் என்று ஓதுவது.
7. பிறகு பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று ஓதுவது.
8. அல்ஹம்து சூரா ஓதியதும் ஆமீன் சொல்வது.
9. தனா, அஊது, பிஸ்மி, ஆமீன் இவைகளை சப்தமில்லாமல் சொல்வது.
10. ஆண்கள் தக்பீர் சொல்லிக் கையைக் கட்டும் போது இடதுகையின் மீது வலது கையை தொப்புளுக்கு கீழ் கட்டிக் கொள்வது.
11. ருகூவுக்கு தக்பீர் சொல்லி குனிவது.
12. ருகூவிலிருந்து எழுந்திருக்கும்போது இமாமும் தனித்து தொழுபாவரும் ஸமிஅல்லாஹுலிமன் ஹமித்ஹ் என்றும், ரப்பனாலக்கல் ஹம்து என்றும் சொல்வது. இமாமை பின்பற்றுபவர்கள் ரப்பனா லக்கல்ஹம்து என்று மட்டும் சொல்வது.
13. ருகூவில் மூன்று முறை தஸ்பீஹ் ஓதுவது.
14. ருகூவில் இருகைகளாலும் முட்டுக்கால்களை பிடிப்பது.
15. விரல்களை விரித்து வைப்பது.
16. இரண்டாம் சுஜுதுக்கு தக்பீர் சொல்லி செல்வது.
17. அதிலிருந்து தக்பீர் சொல்லி எழுந்திருப்பது.
18. சுஜுதில் மூன்று முறை தஸ்பீஹ் ஓதுவது. 
19. சுஜுதில் இரு முட்டுக்கால்களையும், இரு கைகளையும் வைப்பது.
20. இரு சுஜூதுக்கிடையில் சிரிது நேரம் இருப்பது.
21. ஆண்கள் அத்தஹிய்யாத்து இருப்பில் இடது காலை விரித்து அதன் மீது உட்காருவது.
22. கடைசி இருப்பில் நபி ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் ஓதுவது.
23. அதன்பின் துவா ஓதுவது. ஒரு நிலையிலிருந்து மற்றொன்றுக்கு செல்லும் போது தக்பீர் சொல்வதும் ஸலாம் கொடுக்கும் வலது பக்கமும், இடது பக்கமும் முகத்தை திருப்புவதும் சுன்னத்தேயாகும்.

No comments:

Post a Comment