01. துஆ கேட்பவரும் ஆமீன் சொல்பவரும் கூலியில் சமமானவர்களாகும். அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹ் நூல் : முஸ்னத் அத்தைலமி
02. ஸஃத் இப்னு அபீ வக்காஸ் ரழியல்லாஹு அன்ஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் ரழியல்லாஹு அன்ஹ் அவர்கள் ஸஃத் இப்னு அபீ வக்காஸ் ரழியல்லாஹு அன்ஹ் அவர்களிடம் நீங்கள் அல்லாஹ்விடம் துஆ கேட்க வேண்டாமா? என்று கேட்டார்கள். உடனே ஒரு ஓரமாக சென்று ஸஃத் ரழியல்லாஹு அன்ஹ் அவர்கள் " நான் மிக வீரமிக்க ஓர் எதிரியை சந்திக்க வேண்டும் நான் அவனுடன் கடுமையாக போரிட வேண்டும் ஈற்றில் நான் வெற்றி பெற்று அவனது பொருள்களை கனீமத்தாக அடைய வேண்டும்" என்று துஆ கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் ரழியல்லாஹு அன்ஹ் அவர்கள் " ஆமீன் " என்றார்கள்
No comments:
Post a Comment