கண்கள் பழுதாகும் முன்
குர்ஆன் ஓதிக் கொள்ளுங்கள்!
காதுகள் செவிடாகும் முன்
குர்ஆன் ஹதீஸ்களைக் கேளுங்கள்!
🔰இரத்தம் சுண்டும் முன்
ஓடி ஆடி சம்பாதித்துக் கொள்ளுங்கள்!
🔰மூட்டுக்கள் பிசகிக் கொள்ளும் முன்
ருகூஃ சுஜுது செய்துக் கொள்ளுங்கள்!
🔰நரம்புகள் தளரும் முன்
தொழுகையை நேர்த்தியாக தொழுதுக் கொள்ளுங்கள்!
நிரந்தர நோயாளியாக முன்
நோன்புகளை நோற்றுக் கொள்ளுங்கள்!
🔰முதுமை வரும் முன்
இறையில்லம் சென்று ஹஜ் உம்ரா செய்துக் கொள்ளுங்கள்!
🔰நீங்கள் சேர்த்தவற்றில் சுயக் கட்டுப்பாடு போகும் முன்
தர்மம் செய்துக் கொள்ளுங்கள்.
மண்ணுக்கு போகும் முன்
மன்னிப்பு கேட்டுக் கொள்ளுங்கள்!
கடைப்பிடிக்க முயற்சி செய்யுங்கள்!
No comments:
Post a Comment