அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
கண்மணி நாயகம் (ஸல்) அவர்களும், ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களும் மஸ்ஜீதுன்னபவியில் தொழுது கொண்டிருக்கையில் மழை வந்த காரணத்தால் அந்த பேரித்தம் பழ மரத்தின் ஓலையில் மேய்ந்த கூரையில் ஓழிகிய தண்ணிரில் பள்ளிவாசல் சேரும் சகதியுமாக ஆகிவிட்டது. அப்போழுது ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் அல்லாஹவுடைய தூதரிடத்தில்... யா ரஸூலுல்லாஹ்! இந்த ஈச்சை மரத்தின் ஓலைகளை மாற்ற வேண்டும். யா ரஸூலுல்லாஹ்! பாருங்கள பள்ளியினுல் முழூவதும் தண்ணிராக இருக்கின்றது என்றார்கள்..(அன்று மிக சிறிய பள்ளிவாசல் தான் மஸ்ஜீதுன்னபவி) கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் அப்படியே செய்வோம் உமரே! என்று கூறிவிட்டு.. உமரே! உனக்கு ஒன்று தெரியுமா?.. ஒரு காலம வரும் அன்று இந்த பள்ளிவாசல் இரவு தொழுகையான (தஹஜ்ஜுத்) தொழுகைகாக இதன் கதவுகள் எப்போது திறக்கும்? என்று காத்திருப்பார்கள் அப்போழுது நீ உயிரோடு இருந்தால் அதை காணலாம் என்றார்கள்.. ஆனால் அதை காண ஹஜ்ரத் உமர் (ரலி) உயிரோடு இல்லை, உயரினும் மேலான கண்மணி நாயகம்(ஸல்) அவர்கள் கூறிய முன்னரிவிப்பை காண வாய்பளித்து இந்த பொற்காலத்தில் வாழச்செய்த அல்லாஹுவிற்கே எல்லா புகழும்...
அல்ஹம்துலில்லாஹ்!!! அல்ஹம்துலில்லாஹ்!! அல்ஹம்துலில்லாஹ்!,
No comments:
Post a Comment