Saturday, August 19, 2017

கவலைப்படாதீர்கள்!

அஸ்ஸலாமு அலைக்கும்  (வரஹ்)
💠கவலைப்படாதீர்கள்..!💠
​நிச்சயமாக அல்லாஹ் எம்மோடு இருக்கிறான்...​
​​لا تحزن إن الله معنا​​
🔹 கணவன் சரி இல்லையே என்ற கவலையா???
கவலைப்படாதீர்கள்!
ஆசியா நாயகி அவர்களுக்கும் கணவன் (பிர்அவ்ன்) மோசமானவன் தான்!
🔹 மனைவி சரி இல்லை என்ற கவலையா?
கவலைப்படாதீர்கள்!
லூத் நபி, நூஹ் நபி (அலை) அவர்களின் மனைவியும் மோசமானவர்கள்தாம்!
🔹 குழந்தை இல்லையே என்ற கவலையா....???
கவலைப்படாதீர்கள்!
முஃமின்களின் தாயார்கள்
ஆயிஷா_ரலி அவர்களுக்கும், ஸைனப்_ரலி அவர்களுக்கும் குழந்தை இல்லை!
🔹 பிள்ளை சொன்ன பேச்சு கேட்காமல் இருக்கிறானே என்ற கவலையா?
கவலைப்படாதீர்கள்!
நூஹ் நபியின் மகனும் மாறு செய்தவன் தான்!
🔹சொந்த வீடு இல்லையே என்ற கவலையா???
கவலைப்படாதீர்கள்!
ஹாஜரா (அலை) அவர்கள் பாலைவனத்தில் வானம் பார்த்த பூமியில் வாழ்ந்து வந்தார்கள்!!!
🔹 தீராத நோய் என்ற கவலையா?
கவலைப்படாதீர்கள்!
அய்யூப் (அலை) அவர்களுக்கும் நோய் வந்தது!
🔹 பெற்றோர்கள் சரி இல்லை என்ற கவலையா?
கவலைப்படாதீர்கள்!
இப்ராஹீம் நபி (அலை) அவர்களின் தகப்பனும் மாறு செய்தவர்தான்!
🔹 படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கவில்லை என்ற கவலையா???
கவலைப்படாதீர்கள்!
எல்லா நபியும் ஆடுதான் மேய்த்தார்கள்!
🔹 உடன் பிறந்தோரே துரோகம் செய்கின்றனரா...???
கவலைப்படாதீர்கள்!
யூசுப் நபிக்கும் அதுதான் நடந்தது!!!
🔹 கஷ்டத்தில் இருப்பவர்களை காப்பாற்றினால் அவர்கள் முதுகில் குத்திவிட்டார்களா?
கவலைப்படாதீர்கள்!
கடலையே பிளந்து அற்புதத்தை கண்ணால் கண்ட பின்னும் மூஸா நபியின் முதுகில் ஒரு சமுதாயமே குத்தியது!
🔹 உம்மீதும்,குடும்பத்தார் மீதும் அவதூறு சொல்லி துன்புறுத்துகிறார்களா?
கவலைப்படாதீர்கள்!
கொடைவள்ளல் அபுபக்கர் (ரலி) அவர்களின் மகள்,அல்லாஹ்வின் தூதரின் மனைவி அன்னை ஆயிஷா (ரலி) மீதும் அவதூறு சொன்ன சமுதாயம் தான் இது...
நம்மை மட்டும் தங்க தராசிலா வைக்கப்போகிறார்கள்!
மனிதர்கள் அப்படித்தான்!
எல்லாம் கிடைத்தவர் இங்கு எவருமில்லை!
சோதனைக்கு அப்பாற்பட்டவர் இங்கு யாருமில்லை!
ஒவ்வொரு நன்மையும் சோதனை என்ற போர்வை போர்த்தித்தான் வரும்!
இஸ்லாம் கூறும் வழியில்
முஸ்லீம்களாக முமீன்களாக வாழ்ந்து காட்டுவோம்.
நன்றி : அலிஃப் கான் 

No comments:

Post a Comment