Saturday, March 10, 2018

நானூறு ஹஜ்ஜு செய்வதற்குரிய நன்மை

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே!!!
 ஹஜ்ரத் அலீ ரலியல்லாஹுதாலா அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
ஒருமுறை நபிகள் கோமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தோழர்களை நோக்கி, உங்களில் யார் கடமையாக்கப்பட்ட ஹஜ்ஜை நிறைவேற்றி, மார்க்கப் போரிலும் பங்கு பெறுகின்றாரோ, அவருக்கு நானூறு ஹஜ்ஜு செய்வதற்குரிய நன்மை வழங்கப்படும் என்று சொல்ல, அங்கிருந்த தோழர்களில் சிலர் நபிகளாரின் இந்த வார்த்தையைக் கேட்டு மனமொடிந்து போனவர்களாக, நமக்கு அதற்குரிய சக்தியும், வசதியும் இல்லையே என்று வருத்தத்துடன் யோசித்துக் கொண்டிருந்த தருணத்தில் 
அத்தோழர்களின் எண்ணத்தை தெரிந்து கொண்ட வல்ல இறைவனின் ரஹ்மத் பொங்கியெழுந்து, தன் ரஸூலின் மீது வஹியை இறக்கிச் சொன்னான்.

ஓ! ஹபீபே! உம் மீது யார் ஸலவாத்துச் சொல்கிறாரோ, அவர் நானூறு ஹஜ்ஜுச் செய்த நன்மையையும் பெறுவார் என்று கூறினான்.o
         
ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
யா றப்பீ ஸல்லி அலைஹிவஸல்லம்
நூல்: ஜத்புல் குலூப்.
— with Shahul Hameed Qadiri   
நன்றி : Nasoordeen Cassimநபிகள் நாயகம் ﷺ நேசர்கள் வட்டம்
                                                                                                

No comments:

Post a Comment