Saturday, October 13, 2018

யோகா Vs தொழுகை : அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் !

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முஸ்லிம்கள் கட்டாய கடமையாக 5 முறை தொழுகை நடத்துகின்றனர். அதுதான் சிறந்த ‘யோகா’ முறை.
ஒரு யோகா ஆசிரியரின் வியப்பு :
பள்ளியில் உடற்பயிற்சி வகுப்பில் ‘வஜ்ராசனம்’ சொல்லிக் கொடுக்கும் போது ‘முஸ்லிம் பசங்களால மட்டும் இதை எப்படி அசால்ட்டா செய்யமுடிகிறது என்று, முஸ்லிம் மாணவர்களிடம் கேட்டபோது :
அது எங்களுக்கு தொழுகையில் ‘அத்தஹிய்யாத்’ இருப்பு நிலை அதனால் எங்களுக்கு பழகி விட்டது சார், என்றபோது அந்த யோகா மாஸ்டர் வியந்து போனார்.

தொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் “பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.”
யோகா பற்றி ஆய்வு நடத்தியவர்கள் அதன் பாதக செயல்களை கீழ்க் கண்டவாறு கூறுகிறார்கள்:
யோகா முறையினை அதிக உடல் வலியுடன் செய்தால் மன நிலை ஸ்திரத்தன்மை பாதிக்கும் என்றும், போலியான இறப்பு, சமாதி அடைதல், பைத்தியம், அமைதியின்மை, படபடப்பு, பய உணர்வு, தற்கொலை எண்ணம், தனக்குத் தானே ஊனம் ஏற்படுத்துதல் ஏற்பதுத்துதல் போன்றவை உண்டாக வழி வகுக்கும் என்று கூறுகிறார்கள்.
அத்துடன் தலை வலி, தற்காலிக கண் பார்வை இழத்தல், பிறப்பு உறுப்புகளில் வலி ஏற்படுத்துதல், மற்றும் ஆண், பெண் இணைந்து செய்வதால் சமூகப் பிரச்சனை ஏற்பட வழி வகுக்கும்.
யோகா 14 வயதிற்குக் கீழ் உள்ள பிள்ளைகளுக்கு அறவே கூடாது என்று சொல்கிறது. ஏனென்றால் குழந்தைகளின் வளர்ச்சியினை அது பாதிக்குமாம்.
யோகா என்ற மாய வார்த்தைகளில் மயங்காது எல்லாம் வல்ல அல்லாஹ் அருளிய முஸ்லீம்கள் கட்டாய கடமையான ஐவேளை தொழுகையினை கடைப் பிடித்து நல் வழி தவறாமல் இருந்தாலே சாலச் சிறந்ததாகும்.
தொழுகை’…அல்லாஹ் அருளிய அழகிய யோகா’
தன்னிலை மறக்கும் தியானமும்… தெம்பூட்டும் மூச்சுப் பயிற்சியும்… திடன் வளர்க்கும் ஆசனங்களும்… தன்னுள்ளடக்கியது தானே… தாங்களின் யோகா!!!
அவைகள் மூன்றையும்… அளவில் சமமாய் கலந்து… அழகாய் சமைத்து… அதற்கென நேரமிட்டு… அற்புத தொழுகையாக… அருளினானே அல்லாஹ்… அதற்கு இணையுண்டோ???
இறைவனோடு பேசுவதாய்… இறைவன் பார்க்கிறதாய்… இதயமதில் நினைத்து, இஸ்லாமியன் தொழும்போது… இனிய தியானம் கிடைக்கிறது.
இறைமறையின் வசனங்களை… இறைத்தூதர் கற்றுத் தந்த படி… முழுமையான தஜ்வீதுடன்… இனிமையாய் ஓதும் போது… மூச்சுப் பயிற்சிக் கிடைக்கிறது.
நின்று… குனிந்து… நின்று… மண்டியிட்டு…இருந்து…மண்டியிட்டு எழும்பி நிற்கும் போது… ரகாஅத் ஒன்று ஆகிறது, நாளொன்றுக்கு ஐந்து நேரம், பதினேழு தடவைச் செய்ய, நல்ல உடற்பயிற்ச்சியும் தான் கிடைக்கிறது.
பின்னர், உமக்கும் எமக்குமான வித்தியாசமே… இந்த தொழுகை தான்.
உமது யோகாவோ… உலகம் துறந்த சித்தர்களுக்கானது. எமது தொழுகையோ… உலகைச் சார்ந்து வாழும் மனிதர்களுக்கானது.
உமது சிந்தனை… உமது இரட்சிப்பை மட்டும் பேசும். எமது சிந்தனையோ… எல்லோருடையதுமான இரட்சிப்பை பேசும்.
எனவே தான், தொழுகையின் போது கூட… தொட்டு நின்று ஒன்றாய் தொழுகிறோம், ஒற்றுமையையும் சமத்துவத்தையும்… ஓங்கி வளரச் செய்கிறோம்.
பிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து
“இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ‘என கூறுகிறார்.
“இதை ஒருவர் தொடர்ந்து மன ஓர்மையுடன் கடைப்பிடித்து வந்தால் அவருக்குத் தனியே ‘யோகா’ பயிற்சியே தேவையில்லை” என்றார்.
தொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முயற்ச்சி அல்ல இது. யோசித்துப் பார், உம்… யோகாவினால் இது சாத்தியமா?
ஓ….முஸ்லிமே! ஐவேளைத் தொழுகைக்காக… ’உளூ’ச் செய்யும் போது… உந்தப்படும் ’அக்கு பாயின்ட்கள்’* எத்தனையோ… உனக்குத் தெரியுமா?
நீ மட்டும் தொழுகிறவனாக இருந்து… அண்ணலாரின் அரைவயிறு… அளவான உணவுக் கொள்கையை… அப்படியே கைகொண்டால்… துன்பம் என்பது… துனியாவில் உனக்கு இல்லையே!!!
அல்ஜிமர்ஸ் நோயை விரட்டுகிறது தொழுகை -அமெரிக்க ஆய்வு !.
ஐவேளை தொழுகையை நேரம் தவறாமல் நிறைவேற்றும் முஸ்லிம்களிடம் அல்ஜிமர்ஸ் Alzheimer’s disease எனும் நோய் 50 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க – இஸ்ரேலிய விஞ்ஞானிகள் புதிதாக கண்டு பிடித்துள்ளனர்.
அல்ஜிமர்ஸ் Alzheimer’s disease எனும் இந்த நோய் மனிதனுக்குள் ஏற்படும் ஞாபக மறதியைப் பற்றியது. தொழுகாத மக்களை விட நேரம் குறிப்பிட்டு சரியாக மசூதியை அடைந்து விடும் மக்களுக்கு இந்த நோய் வருவது தடுக்கப்படுகிறது.
டெல் அவீவ், யாஃபா, அமெரிக்காவின் இதர பல்கலைக்கழகத்தைச் சார்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். இந்த ஆய்வுக் குழுவின் தலைவராக பணியாற்றிய பேராசிரியர் Rivka Inzelberg “நினைவாற்றல் குறையாமலிருக்க பயிற்சி மையங்கள் மற்றும் இதர வழிகளில் பயிற்சி மேற்கொள்பவர்களை விட குறித்த நேரத்தில் தொழுகையை பேணுவது அல்ஷிமர்ஸ் நோயிலிருந்து காப்பாற்றுவதுடன் புத்தியாகவும், சிந்தனை ரீதியாகவும் பேசுவதற்கு தேவையான ஆக்கப்பூர்வமான பலன்கள் “ கிடைப்பதாக கூறுகிறார்.
Kabir Helminski என்பவர், A Sufi Way to Mindfulness and the Essential Self ‘ என்ற புத்தகத்தில், இஸ்லாமிய ஐவேளை தொழுகை (நிற்பது,குனிவது, தரையில் தலை வணங்குவது மற்றும் காலை மடித்து உட்காருவது ஆகிய உடல் அசைவுகள் மூலம் முக்கிய எலும்பு இணைப்புகள், ஸ்பைனல் கார்ட் எலும்பு உள்பட வலுப்பெறும், வயிற்றில் குடல் அழுத்தம் பெரும், நுரை ஈரல், கல்லீரல் இயங்கவும், மூச்சு சீராகவும், சிறு மூளை மூலம் இதய ஓட்டம் நல்ல முறையில் இயங்க வழி வகுக்கின்றது என்கிறார்.
உடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.
தொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.
தொழும்போது இறைவனிடம் பேசுகிறீர்கள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவன் உங்களிடம் பேசுகிறான்.
நமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை.
தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே..

எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிரயாணத்திலும்,
சண்டையிலும், சமாதானத்திலும், சிறையிலும், சுகபோகத்திலும், நட்பிலும், பகையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல்.
ஓ மானுடனே! சிந்திப்பாயா ?
அருட்கொடையாம் தொழுகை

முஸ்லீம்களின் கட்டாய அன்றாட ஐந்து வேளை தொழுகையே இறை தியானத்துடன் கூடிய தலை சிறந்த யோகப்பியாசம்
ஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி உடற்சுகாதாரம் எவ்வாறு பேணி கடைப் பிடிக்கப்படுகின்றது என்பதை சிந்தித்தீர்களா?
ஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.இதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது. ஆச்சரியமான விந்தை புலப்படவில்லையா?
சுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.
ஐவேளை தொழுகையின் மூலம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாதய சூழ்நிலைகளிலேயே மூழ்கி கிடந்திடாமலும் இறைவனிடம் தொடர்பை சற்றும் தொய்வில்லாமல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்பதற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா?
[20/06 2:54 pm] +91 94435 07454: உலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை. இதன் சூட்சுமம் அளவிலடங்காதது.
உலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற உண்மை உணர்ந்தீரா?
தொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன், நெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய ஸுஜூது செய்யும்பொழுது நம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா?
தொழுவதால் மது வெறுத்தல், பொய் சொல்லுதல், பித்தலாட்டம் செய்யாதிருத்தல், நேர்மை காப்பது போன்ற உளச் சுத்தம் ஏற்படும்.
தொழும் இடத்தில் கண்களுக்கும் கட்டுப்பாடு இருப்பதினால் நப்பாசைகளுக்கும், வழியில்லை
தொழுகை அதிக அளவினான மன அமைதியும், மனதினை ஓர் நிலைப் படுத்தவும் செய்கின்றது.
அல்ஹம்துலில்லாஹ்.

Image may contain: one or more people
Image may contain: one or more people
Image may contain: one or more people
Image may contain: 1 person
No automatic alt text available.
பதிவு : ஈமானிய தோழி - துஆக்களின் தொகுப்பு 

No comments:

Post a Comment