அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!♥♥♥
♦♦♦ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
நண்பர்களே சகோதரர்களே
இறைநேசர்கள் காலடி படாத பூமியும் உண்டோ எனக் கேட்கும் அளவிற்கு உலகம் எங்கும் இறைநேசர்கள் பயனித்து இஸ்லாத்தை பரப்பி அந்த அந்நிய பூமியை தங்கள் சொந்த பூமியாக மாற்றி அங்கே தங்கள் மறைவாழ்விடத்தை அமைத்துக் கொள்வார்கள் (இறை நாட்டப்படி இன்ஷா அல்லாஹ் )
இது சேலம் மாவட்டத்தில் வனாந்திரக் காடு ஒரு காலத்தில் மக்கள் வர அஞ்சும் காட்டு மிருகங்கள் வாழும் பகுதி.
தன் ஆன்மீக ஆசானின் கட்டளையை ஏற்று இறைவனின் வழிகாட்டுதல் படி இங்கு பயணித்து.
ஏக இறைவனின் மகிமையை சொல்லி மக்களை இஸ்லாமிய மனத்தில் மீட்டு எடுத்தவர் தான் இந்தப் பெருந்தகை
அண்ணவர்களின் சேவையால் சேலம் மாவட்டதில் இஸ்லாத்தின் இனிய மனம் பரவியது.
இன்று சேலம் மாவட்டத்தின் சன்யாசி குண்டு என்று அழைக்கப் படுகிறது
மழை அடிவாரத்தில் இந்த நேசரின் தர்ஹா ஷரீஃப் உள்ளது.
அண்ணவர்களின் மஜார்ஷரீப் ஐ சுற்றி ஒரு பெரிய மலை உண்டு.
இது அந்த உயரிய மலையில் இருந்து உருண்டு வந்த இந்த பிரம்மாண்டமான பாறையை அண்ணவர்கள் தங்கள் பறக்கத் பொருந்திய கரத்தால் தடுத்து நிறுத்தினார்கள்.
அதன் நிழழிலேயே அண்ணவர்களின் அடக்கஸ்தளம் அமைந்துள்ளது.
அவசியம் ஜியாரத் செய்யுங்கள்.
இனம் புரியாத கவலையில் உளல்வோர் அவசியம் ஜியாரத் செய்யுங்கள் அண்ணவர்களின் துவாவினால் இறைவன் அந்த கவலைகளை மறையச் செய்வான் இன்ஷா அல்லாஹ்
ஆன்மீக பாட்டையில் பயனிக்கும் முரீதீன்கள் ஜியாரத் செய்யுங்கள் உள்ளதின் கருமை நீங்கி ஒளி பிறக்கும். இன்ஷா அல்லாஹ்...
தகவல் : ஓர் இறைநேசர்கள்-12.03, 2020 முற்பகல் 9:01
No comments:
Post a Comment