Tuesday, December 13, 2016

காமராஜர் ஒரு சகாப்தம்

காமராஜர் ஒரு நாள் தன் தோளில் வலது பக்கத்தில் துண்டு போடுவதற்கு பதில், இடது பக்கத்தில் போட்டுள்ளார்.
உடனே பத்திரிகையாளர்கள் , துண்டை மாற்றி போட்டுள்ளீர்கள் எதுவும் விஷேசமா? என்று கேட்டுள்ளனர்.
காமராஜரோ ஒன்றும் இல்லை , சும்மா தான் போட்டுள்ளேன் என்று சொல்லி இருக்கிறார்.

Saturday, December 10, 2016

ஹதீஸ்கள் - புன்னகை

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ...
கோடான கோடி செல்வத்திற்க்கும் இணை இல்லாத எங்கள் நபிகளாரின் புன்னகை ஒரு தொகுப்பு...
உங்களுக்காகவே இப்பதிவில்...
''உன் சகோதரனின் முகத்தைப் பார்த்து புன்னகை புரிவது உனக்கு நல்லறமாகும். நீ நன்மையை ஏவுவதும் தீமையைத் தடுப்பதும் நல்லறமாகும். பாதை தவறிய மனிதருக்குப் பாதையைக் காட்டுவதும் உனக்கு நல்லறமாகும். பார்வையிழந்தவருக்குப் பார்வையாக நீ ஆவதும் உனக்கு நல்லறமாகும். பாதையில் கிடக்கும் கல், முள், எலும்பு போன்றவற்றை நீ அகற்றுவதும் உனக்கு நல்லறமாகும். உனது வாளியில் உள்ள தண்ணீரை உனது சகோதரரின் வாளியில் ஊற்றுவதும் உனக்கு நல்லறமாகும்.'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ, இப்னு ஹிப்பான்)

Sunday, December 4, 2016

அல்லாஹ்வின் நாட்டம் எல்லோர்களின் நாட்டங்களை விடவும் மேலானது .

நபி யூஸுஃபை கொன்றுவிடுவோம் என்று சகோதரர்கள் திட்டம் தீட்டினார்கள், ஆனால் அவர்களால் கொலைசெய்ய முடியவில்லை ❗️
நபி யூஸுஃபை தந்தையிடம் இருந்து பிரித்தால் தந்தையின் நேசத்தை குறைக்கலாம் என்று விரும்பினார்கள் ,பிரித்த பிறகு தந்தையின் நேசம் அதிகரித்தது ❗️
நபி யூஸுஃபை சந்தையில் விற்றால் அடிமையாக மாற்றலாம் என்று திட்டம் தீட்டினார்கள், ஆனால் அல்லாஹ் நபி யூஸுஃபை அதிபராக மாற்றினான் ❗️
ஆதலால் மனிதர்களின் திட்டங்களை சூழ்ச்சிகளை பற்றி கவலை கொள்ளாதே ❗️
அல்லாஹ்வின் நாட்டம் எல்லோர்களின் நாட்டங்களை விடவும் மேலானது .

Wednesday, November 30, 2016

முஹம்மது நபியின் (ஸல்) வார்த்தை உறுதியாகிறது

யூப்ரடீஸ் நதி வற்றி, அதில் தங்க புதையல் உண்டாவது மறுமை நாளுக்குறிய அடையாளமாக நபி(ஸல்) அவர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்தார்கள்..!அல்லாஹ் அக்பர் அது இப்போது நடந்தே விட்டது.

Wednesday, September 14, 2016

பெண்களை அடிமைப்படுத்துகின்ற மார்க்கமா, இஸ்லாம்?

இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகின்றது என்பது தவறான புரிதல் ஆகும்.
ஒரே ஒரு வரலாற்றுக் குறிப்பைக் கூறுகின்றேன், கேளுங்கள்.
நீங்கள் பள்ளிவாசலுக்குள் போய் இருக்கின்றீர்களா? இல்லையேல் நான் உங்களை பள்ளிவாசலுக்குள் அழைத்துச் செல்கின்றேன், உங்களுக்கு விருப்பம் இருக்கின்ற பட்சத்தில்தான்.
பள்ளிவாசலுக்குள் இமாம் (தலைவர்) நின்று தொழுகையை வழிநடத்துகின்ற இடத்துக்கு அருகில் மூன்று படிக்கட்டுகளைக் கொண்ட மேடை ஒன்று உள்ளது. இதனை மிம்பர் என்று சொல்வார்கள். உலகத்தில் மிம்பர் இல்லாத பள்ளிவாசலே இல்லை. மறுமை நாள் வரை - உலகம் அழிகின்ற நாள் வரை - உலகில் கட்டப்படுகின்ற பள்ளிவாசல்கள் அனைத்தும் மிம்பருடன்தான் கட்டப்படும்.
இந்த மிம்பருக்குப் பின்னால் ஒரு பெண்மணி இருக்கின்றார்.

Monday, September 12, 2016

ஈதுல் அழ்ஹா பெருநாள் நல்வாழ்த்துகள்!!!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு
அனைவருக்கும் மனமார்ந்த ஈதுல் அழ்ஹா பெருநாள் நல்வாழ்த்துகள்!!!
(தகப்பல் அல்லாஹ் மின்னா வ மின்கும்)
நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் செய்த தியாகத்தை போல், நாமும் அல்லாஹ்விற்காக தியாகம் செய்ய இந்த தியாகத்திருநாளில் சபதம் ஏற்போம்...
قُلْ اِنَّ صَلَاتِىْ وَنُسُكِىْ وَ مَحْيَاىَ وَمَمَاتِىْ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ‏ 
நீர் கூறும்: “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும். 
- (அல்குர்ஆன்: 6:162)
அனைவருக்கும் தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்

அல்லாஹ் உங்களிடமிருந்தும் நம்மிடமிருந்தும் (நற்செயல்களை) ஏற்றுக்கொள்வானாக!

ஹதீஸ்-குர்பானி ஆடுகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்
நிலவட்டுமாக..!

ஆடு வாங்குபவர்கள் கொம்புள்ள, முகம், மூட்டுக்கால், கண்பகுதி கருப்பு நிறமுடைய ஆடுகள் வாங்கி அறுப்பது சுன்னாவாகும்...
நபி(ஸல்) அவர்கள் ‘கொம்புள்ள கருப்பு நிறத்தால் நடக்கக்கூடிய, கறுப்பு நிறத்தால் அமரக்கூடிய, கறுப்பு நிறத்தால் பார்க்கக் கூடிய (அதாவது கால், மூட்டுக்கால், கண் பகுதி ஆகியவை கறுப்பு நிறமுடைய) ஆட்டை குர்பானி கொடுக்க வாங்கி வருமாறு கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத்).