எம்ஜிஆர் ஆரம்பத்தில் தீவிர காங்கிரஸ் ஆதரவாளர். காந்தியையும், கர்ம வீரர் காமராஜரையும் அதிகம் நேசித்தவர் என்பது தான்.
ஆரம்பம் தொட்டே கதர் ஆடை தான் அணிந்தார் எம்ஜிஆர். அதன் பின் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா,கலைஞர் ஆகியோர் நட்பு கிடைத்து திமுகவில் இணைந்தார்.
ஆனாலும் கடைசி வரை கர்மவீரர் காமராசர் மீது தீராத பாசம் வைத்திருந்தார் எம்ஜிஆர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் காமராஜரை சந்தித்து மகிழ்ந்தார்.
தனது இல்லத்திற்கு எத்தனையோ தலைவர்களை அழைத்து விருந்து கொடுத்து மகிழ்ந்த எம்ஜிஆருக்கு ஒரு தீராத ஏக்கம் இருந்தது.
ஒரே ஒரு முறை காமராஜரை தனது இல்லத்திற்கு அழைத்து வந்து விட வேண்டும் அருகே அமர்ந்து உணவு சாப்பிட வேண்டும். ஆனால் எப்போது அழைத்தாலும் காமராஜர் சிரித்தபடி “சொல்றேன்” என்கிற ஒற்றை வார்த்தையால் தவிர்த்து விடுவார்.