Monday, June 5, 2017

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ் 
சுப்ஹானல்லாஹ்! மெய் சிலிர்த்த சம்பவம் ......

ஒரு சமயம் ஹஸ்ரத் பாத்திமா (ரலி) அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் மூன்று நாட்கள்வரை தொடர்ந்து எதுவும் சாப்பிடாமல் பட்டினியாக இருந்தார்கள்.
குடும்பத்தின் பசி, பட்டினி பொறுக்க முடியாமல் தங்களின் பிரியமான புதுத்துணியொன்றை தனது அருமைக் கணவர் ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களிடம் கொடுத்து இத்துணியை விற்றுப் பணம் கொண்டு வாருங்கள் என்று சொன்னார்கள்.

Sunday, June 4, 2017

சதகாவின் சிறப்பு - எகிப்தில் நடந்த உண்மை சம்பவம்

எகிப்தியருக்கு நடந்த உண்மை சம்பவம்:
எகிப்தில் ஒரு மனிதர் இருந்தார். அவர் இருதய வலி காரணமாக வைத்தியரிடம் சென்ற வேளை, 'உங்களுடைய இதயத்துக்கு செல்லும் இரத்த குழாய்களில் அதிகமான அடைப்புகள் காணப்படுகின்றன" என்று வைத்தியர் கூறினார். அதற்கு அந்த மனிதர், 'உங்களுக்கு அதை ஆபரேஷன் பண்ண முடியுமா" என்று கேட்டார். அதற்கு வைத்தியர், 'இதனை ஆபரேஷன் பண்ணுவது மிகவும் கடினமாகும். இன்னும் அது மிகவும் ஆபத்தானதுமாகும். உங்களுக்கு இருக்கும் சிறந்த தீர்வு ஜெர்மன் நாட்டுக்கு சென்று அங்கே இந்த ஆபரேஷனை செய்வதாகும்' என்று கூறினார்.

அகழ் தோண்டுகையில் வெளிப்பட்ட நபித்துவத்தின் அத்தாட்சிகள்


இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அகழ்ப்போரின் போது அகழ் வெட்டும் பணி நடக்கும் இடத்தை நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது முஹாஜிர்களும் அன்சாரிகளும் கடும் குளிரான காலை நேரத்தில் அகழ் தோண்டிக் கொண்டிருந்தார்கள். முஹாஜிர் என்றால் மக்காவில் இருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றவர்கள். அன்ஸாரி என்றால் உதவியாளர்கள் என்பது அர்த்தமாகும். மக்காவிலிருந்து மதீனா வந்தவர்களுக்காக அர்ப்பணிப்புக்களைச் செய்த மதீனாவாசிகளே அன்ஸாரிகள். அவர்களுக்கு ஏற்பட்டிருந்த களைப்பையும் பசியையும் கண்டபோது நபி(ஸல்) அவர்களுக்காகப் பிரார்த்தித்தார்கள். மக்களோடு சேர்ந்து நபிகளாரும் அகழ் தோண்டலானார்கள். 

Wednesday, May 31, 2017

துண்டு மாற்றி போட்டதற்கு காரணம்

காமராஜர் ஒரு நாள் தன் தோளில் வலது பக்கத்தில் துண்டு போடுவதற்கு பதில், இடது பக்கத்தில் போட்டுள்ளார்.
உடனே பத்திரிகையாளர்கள் , துண்டை மாற்றி போட்டுள்ளீர்கள் எதுவும் விஷேசமா? என்று கேட்டுள்ளனர்.
காமராஜரோ ஒன்றும் இல்லை , சும்மா தான் போட்டுள்ளேன் என்று சொல்லி இருக்கிறார்.

வீட்டுக்கு_வாங்க என்று கெஞ்சிய எம்.ஜி.ஆர், மறுத்த கர்ம வீரர்: காரணம் என்ன தெரியுமா?

எம்ஜிஆர் ஆரம்பத்தில் தீவிர காங்கிரஸ் ஆதரவாளர். காந்தியையும், கர்ம வீரர் காமராஜரையும் அதிகம் நேசித்தவர் என்பது தான்.
ஆரம்பம் தொட்டே கதர் ஆடை தான் அணிந்தார் எம்ஜிஆர். அதன் பின் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா,கலைஞர் ஆகியோர் நட்பு கிடைத்து திமுகவில் இணைந்தார்.
ஆனாலும் கடைசி வரை கர்மவீரர் காமராசர் மீது தீராத பாசம் வைத்திருந்தார் எம்ஜிஆர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் காமராஜரை சந்தித்து மகிழ்ந்தார்.
தனது இல்லத்திற்கு எத்தனையோ தலைவர்களை அழைத்து விருந்து கொடுத்து மகிழ்ந்த எம்ஜிஆருக்கு ஒரு தீராத ஏக்கம் இருந்தது.
ஒரே ஒரு முறை காமராஜரை தனது இல்லத்திற்கு அழைத்து வந்து விட வேண்டும் அருகே அமர்ந்து உணவு சாப்பிட வேண்டும். ஆனால் எப்போது அழைத்தாலும் காமராஜர் சிரித்தபடி “சொல்றேன்” என்கிற ஒற்றை வார்த்தையால் தவிர்த்து விடுவார்.

Sunday, May 28, 2017

உணவை வீணாக்காமல் தர்மம் செய்தால் தர்மம் செய்த நன்மை

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ஒரு பெண் தனது வீட்டிலுள்ள உணவை வீணாக்காமல் தர்மம் செய்தால் அவள் தர்மம் செய்த நன்மையைப் பெறுவாள். அதைச் சம்பாதித்த காரணத்தால் அவளது கணவனுக்கும் நன்மை கிடைக்கும். அது போலவே கருவூலக் காப்பாளருக்கும் கிடைக்கும். இவர்களில் யாரும் யாருடைய நன்மையையும் குறைத்து விட முடியாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: ஆயிஷா (ர­லி), நூல்: புகாரி 1425, 2065

Saturday, May 27, 2017

காமராஜரை கேள்வி கேட்ட சிறுவன்

காமராஜர் தமிழகத்தின் முதல்வராக இருந்த போது நெல்லையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து காரில் வந்து கொண்டிருந்தார். காரில் அவருடன் உதவியாளரும் இருந்தார். அன்றைய தினம் பகல் 11 மணியளவில், கார் கோவில்பட்டி அருகே வரும் போது, வழியில் 12 வயது சிறுவன் ஒருவன் மாடுகள் மேய்த்து கொண்டிருந்தான்.