Wednesday, November 5, 2014

இரவில் விழிப்பு வந்தால்...

ஒருவருக்கு இரவில் விழிப்பு வந்து கீழ்க்காணும் துஆவை ஓதி மன்னிப்புக் கேட்டால்
அதை இறைவன் ஏற்காமல் இருப்பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்...

Tuesday, November 4, 2014

ஹதீஸ்-ஆஷூரா நோன்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பராகாதுஹு...
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, (மக்களுக்கும்) நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும், கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?" என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், "இன்ஷா அல்லாஹ், (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம் பத்தாவது நாள், மற்றும் அதற்கு முன்பு உள்ள முஹர்ரம்) ஒன்பதாவது நா(ள், ஆகிய இரு நாட்க)ளில் நோன்பு நோற்போம்" என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)                                                                                                  நூல்: முஸ்லிம் 2088

Monday, November 3, 2014

பர்தாவின் பலன்கள்....

ஒரு பெண் பிற ஆடவர்களின் பார்வையிலிருந்து தன் உடலை மறைத்துக் கொள்ளும் விதமாக அணியும் ஆடை பர்தா எனப்படும்.அல்லாஹ் கூறுகிறான்: தானாக வெளிப்படுவதைத் தவிர வேறு எதையும் அப்பெண்கள் தங்கள் அழகை வெளிப்படுத்த வேண்டாம். இன்னும் தங்கள் முன்றானைகளில் அவர்கள் தங்கள் மார்பகங்களை மறைக்க வேண்டும்.

காமராஜரின் கோபம்

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டபின் காமராஜர் ஒருமுறை நாகப்பட்டினம் அருகேயுள்ள திருத்துறைப்பூண்டிக்கு வந்தார். அப்போது காமராஜர் வாழ்க என்ற கோஷம் மேலிருந்து கேட்க, நிமிர்ந்து பார்த்தார் காமராஜர்.

Sunday, November 2, 2014

காற்றுக்கு பெயர்கள் !!!

தெற்கிலிருந்து வீசினால் --தென்றல்
வடக்கிலிருந்து வீசினால் --வாடை
கிழக்கிலிருந்து வீசினால் ---கொண்டல்
மேற்கிலிருந்து வந்தால் ---மேலை

பொன்மொழிகள்,

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

ஆச்சரியப்படும் உண்மைகள்:

1. இன்னும் 100 வருடம் கழித்து பேஸ்புக்கில் 50 கோடி இறந்தவர்களின் அக்கவுன்ட் இருக்குமாம்.
2. குதிக்க முடயாத ஒரே உயரினம் யானை தான்.