Wednesday, December 24, 2014

பொது அறிவு,

1) உலகின் மிகப் பெரிய திரையரங்கம் நியூயார்க் நகரில் உள்ள ராக்ஸி திரையரங்கம்.
2) உலகின் மிகப் பெரிய வைரச் சுரங்கம் தென்னாப்பிரிக்காவில் உள்ள கிம்பர்லி என்ற இடத்தில் உள்ளது.

Saturday, December 20, 2014

ஹதீஸ்-தஜ்ஜால் கால் வைக்காத இடம்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மக்கா, மதீனா தவிர தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இராது! மதீனாவின் எந்தவொரு வாசலானாலும் அங்கே வானவர்கள் அணிவகுத்து அதைக் காப்பார்கள். பின்னர் மதீனா, தன் குடிமக்களுடன் மூன்று முறை நிலநடுக்கத்திற்குள்ளாகும்; அப்போது ஒவ்வொரு காஃபிரையும் முனாஃபிக்கையும் (இறைமறுப்பாளனையும் நயவஞ்சகனையும்) அல்லாஹ் (மதீனாவிலிருந்து) வெளியேற்றி விடுவான்!"
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக்(ரலி)                              நூல் : ஸஹீஹுல் புகாரி 1881.

47 வகையான நீர்நிலைகள்

01. அகழி - (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்
02. அருவி - (Water fall)மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது
03. ஆழிக்கிணறு -(Well in Sea-shore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு

Thursday, December 18, 2014

தேடி வந்த பதவிகள்

பதினைந்து வயது முதலே காங்கிரஸ் கட்சியின்பால் பற்றுக் கொண்டு, பணியாற்றத் தொடங்கினார் காமராஜர். இருப்பினும், 1924-ம் ஆண்டில் தான் தனது 21-வது வயதில் நான்கணா செலுத்தி காங்கிரசில் அடிப்படை உறுப்பினர் ஆனார். அதன் பின்னர் அவர் காங்கிரஸ் கட்சியில் வகித்த பதவிகள் வருமாறு:-

ஹதீஸ்-இரண்டு நல்லறங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காதுஹு
இரண்டு நல்லறங்கள் உள்ளன. அவற்றை முறையாகக் கடைப்பிடிக்கும் முஸ்லிம் நிச்சயமாக சொர்க்கத்தில் நுழைவார். அவ்விரண்டும் மிக எளிதானது. எனினும் அதனைக் கடைப்பிடிப்பவர் மிகக் குறைந்த எண்ணிக்கையினரே.

ஹதீஸ்-பத்து நன்மைகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் முஃமீன் ஆன ஆண் பெண் அனைவரின் மீது வற்றாது பொழியட்டுமாக.
இன்றைய தினத்தை மலர செய்த அல்லாஹ்க்கே எல்லா புகழும்.
இன்றைய தினம் இனிதாய் அமைய வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக.

Wednesday, December 17, 2014

கலையும் காமராஜரும்

கருணை உள்ளம் படைத்த பெருந்தலைவர் காமராஜரிடம் கலையுள்ளம் நிரம்பி வழிந்தது. காந்தத்தை நோக்கி இரும்பு பாய்ந்து செல்வது போல் கலைஞர்கள் அனைவருமே பெருந்தலைவரை நாடிச் சென்றனர். கட்சிக் கண்ணோட்டத்திற்கு அப்பாற்பட்டு அனைத்துக் கலைஞர்களிடமும் அன்புடன் பழகிய பெருந்தலைவர் காமராஜர் அனைத்துக் கலைஞர்களையும் சமமாகப் போற்றினார்.