Wednesday, May 3, 2017

அல்லாஹ்வின் உதவியை வாங்கிய குடும்பம்

ஒரு நாள் பாத்திமா(ரலி) அவர்கள் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் கிடந்தார்கள்....!!!!
கணவர் அலி(ரலி) பக்கத்தில் இருந்து பனிவிடைகள் செய்தார்கள். அப்போது மனைவியை நோக்கி. அன்பு மனைவியே தாங்களுக்கு பிடித்தமானதை கேளுங்கள் வாங்கி வருகிறேன் என்றார்கள்....!!!!
இதுவரை கணவரிடம் அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்டிராத பாத்திம(ரலி) அவர்கள் இருமனதோடு சரி எனக்கு மாதுளம் பழம் சாப்பிட ஆசையாக உள்ளது என்றார்கள். சந்தோஷம் தாங்க முடியாமல் கடைத் தெரு நோக்கி புறப்பட்டார்கள். கடைத்தெருவில் மாதுளம் பழம் கிடைக்க வில்லை....!!!!

Thursday, April 13, 2017

ஈ பற்றி முஹம்மது நபி (ஸல்) சொன்னது உண்மை என ஏற்றுக்கொண்ட ரஷ்ய ஆய்வாளர்!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவரது பானத்தில் ஈ விழுந்துவிட்டால் (முதலில்) அதை அவர் (அதிலேயே) அமிழ்த்தட்டும். பிறகு அதை வெளியே எடுத்துப் போட்டுவிடட்டும். ஏனெனில், ஈயின் இரண்டு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் உள்ளது. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம், ஹதீஸ் – 3320)

Tuesday, April 11, 2017

செய்ஹூல் இஸ்லாம் மாதிஹூர் ரஸுல் சதகதுல்லாஹ் காஹிரி றஹிமஹூமுல்லாஹ் (ஸதகதுல்லாஹ் அப்பா)

 17ம் நூற்றாண்டின் முஜத்தித் - செய்ஹூல் இஸ்லாம் மாதிஹூர் ரஸுல் சதகதுல்லாஹ் காஹிரி றஹிமஹூமுல்லாஹ் (ஸதகதுல்லாஹ் அப்பா)
பாடசாலையில் படிக்கும் நாட்களில் எம்மை குர்ஆன் மத்ரஸாவுக்கு அனுப்புவார்கள். வெள்ளிக்கிழமை தவிர ஒவ்வொரு நாளும் பின்னேரம் 2.30 முதல் மாலை வரை குர்ஆன் மத்ரஸா நடைபெறும்.

Wednesday, March 22, 2017

“இறைமறுப்பாளர்களைக் கொல்வதற்கு இஸ்லாம் அனுமதி அளிக்கிறது” என்று முஸ்லிமல்லாத சில அறிவுஜீவிகளுக்காக இந்த வரலாறு.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 
“இறைமறுப்பாளர்களைக் கொல்வதற்கு இஸ்லாம் அனுமதி அளிக்கிறது” என்று முஸ்லிமல்லாத சில அறிவுஜீவிகளுக்காக இந்த வரலாறு.
நபிகளாரின் காலத்தில் உஹதுப் போர் தீவிரமாக நடந்துகொண்டிருந்த நேரம்.
முஸ்லிம் படையில் சிறந்த வீரரும் நபிகளாரின் நெருங்கிய உறவினருமான ஹம்ஸா(ரலி) அவர்களை எப்படியாவது வெட்டிச் சாய்த்துவிட வேண்டும் என்று இறைமறுப்பாளர்களின் தலைவர்கள் வஹ்ஷி எனும் கறுப்பர் இன அடிமை ஒருவரை நியமிக்கின்றனர்.

Wednesday, March 8, 2017

உம்ரா செய்யும்போது ஓதப்பட வேண்டியவைகள்



நான் அல்லாஹ்விற்காக இந்த உம்ராவை நிறைவேற்றுகின்றேன் என மனதில் நிய்யத் வைத்தவராக
لَبَّيْكَ عُمْرَةً 
லெப்பைக உம்ரதன் எனக் கூறுவது.
நிய்யத் வைத்ததன்பின் தவாபை ஆரம்பிக்கும் வரை தல்பியா கூறவேண்டும்.

Tuesday, February 28, 2017

பொது அறிவு,

* இருமலின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர்.
* ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது
மாதத்திலிருந்துஉரு வாகின்றன.
* கை, கால்கள் நகங்களின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேல்பாகம் வரை வளர்வதற்கு 6 மாதங்கள்ஆகின்றன. கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன.
* ஒரு மனிதனுக்கு சரியாக தினமும்40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன.

Monday, February 27, 2017

வலிமார்களை நேசிப்போம்

***அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா செய்யிது யா ரஸுலல்லாஹ்...(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
***அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா செய்யிது கெளதுல் அஃலம் முஹியத்தீன்...(ரழியல்லாஹுதஅலன்ஹு)
***அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா செய்யிது அஹ்லில்பத்ரியீன்...(ரழியல்லாஹுதஅலா அன்ஹும்)
***அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா செய்யிது அஹமது கபீர் ரிபாயி...(ரழியல்லாஹு அன்ஹு)