Wednesday, May 31, 2017

துண்டு மாற்றி போட்டதற்கு காரணம்

காமராஜர் ஒரு நாள் தன் தோளில் வலது பக்கத்தில் துண்டு போடுவதற்கு பதில், இடது பக்கத்தில் போட்டுள்ளார்.
உடனே பத்திரிகையாளர்கள் , துண்டை மாற்றி போட்டுள்ளீர்கள் எதுவும் விஷேசமா? என்று கேட்டுள்ளனர்.
காமராஜரோ ஒன்றும் இல்லை , சும்மா தான் போட்டுள்ளேன் என்று சொல்லி இருக்கிறார்.

வீட்டுக்கு_வாங்க என்று கெஞ்சிய எம்.ஜி.ஆர், மறுத்த கர்ம வீரர்: காரணம் என்ன தெரியுமா?

எம்ஜிஆர் ஆரம்பத்தில் தீவிர காங்கிரஸ் ஆதரவாளர். காந்தியையும், கர்ம வீரர் காமராஜரையும் அதிகம் நேசித்தவர் என்பது தான்.
ஆரம்பம் தொட்டே கதர் ஆடை தான் அணிந்தார் எம்ஜிஆர். அதன் பின் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா,கலைஞர் ஆகியோர் நட்பு கிடைத்து திமுகவில் இணைந்தார்.
ஆனாலும் கடைசி வரை கர்மவீரர் காமராசர் மீது தீராத பாசம் வைத்திருந்தார் எம்ஜிஆர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் காமராஜரை சந்தித்து மகிழ்ந்தார்.
தனது இல்லத்திற்கு எத்தனையோ தலைவர்களை அழைத்து விருந்து கொடுத்து மகிழ்ந்த எம்ஜிஆருக்கு ஒரு தீராத ஏக்கம் இருந்தது.
ஒரே ஒரு முறை காமராஜரை தனது இல்லத்திற்கு அழைத்து வந்து விட வேண்டும் அருகே அமர்ந்து உணவு சாப்பிட வேண்டும். ஆனால் எப்போது அழைத்தாலும் காமராஜர் சிரித்தபடி “சொல்றேன்” என்கிற ஒற்றை வார்த்தையால் தவிர்த்து விடுவார்.

Sunday, May 28, 2017

உணவை வீணாக்காமல் தர்மம் செய்தால் தர்மம் செய்த நன்மை

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ஒரு பெண் தனது வீட்டிலுள்ள உணவை வீணாக்காமல் தர்மம் செய்தால் அவள் தர்மம் செய்த நன்மையைப் பெறுவாள். அதைச் சம்பாதித்த காரணத்தால் அவளது கணவனுக்கும் நன்மை கிடைக்கும். அது போலவே கருவூலக் காப்பாளருக்கும் கிடைக்கும். இவர்களில் யாரும் யாருடைய நன்மையையும் குறைத்து விட முடியாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: ஆயிஷா (ர­லி), நூல்: புகாரி 1425, 2065

Saturday, May 27, 2017

காமராஜரை கேள்வி கேட்ட சிறுவன்

காமராஜர் தமிழகத்தின் முதல்வராக இருந்த போது நெல்லையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து காரில் வந்து கொண்டிருந்தார். காரில் அவருடன் உதவியாளரும் இருந்தார். அன்றைய தினம் பகல் 11 மணியளவில், கார் கோவில்பட்டி அருகே வரும் போது, வழியில் 12 வயது சிறுவன் ஒருவன் மாடுகள் மேய்த்து கொண்டிருந்தான்.

Thursday, May 25, 2017

ஸூரத்துல் பாத்திஹாவின் சிறப்பு


அபூ ஹுரைரா ரலியல்லாஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஸூரத்துல் பாத்திஹாவை ஜிபரீல் அலைஹிஸ்ஸலாம் மூலம் அல்லாஹ்தஆலா நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இறக்கி அருளியபோது, இப்லீஸ் மிகக்கடுமையாக கவலை தோய்ந்து அழ ஆரம்பித்து விட்டான். அவனின் அழுகை நிலை கண்டு அவனின் பிள்ளைகள் தந்தையே! உன்னை இந்த அளவுக்கு கவலையிலும், துன்பத்திலும் ஆழ்த்தியது எது? என்று வினவினர்.

Monday, May 8, 2017

இந்திய பிரதமர்க்கு வழிகாட்டிய பச்சை தமிழர் காமராஜர்

இந்திய பிரதமர்க்கு வழிகாட்டிய பச்சை தமிழர் காமராஜர்
பொற்காலம் அன்று 
பிரதமர் நேருக்கு என்னென்ன சிக்கல்கள், தொந்தரவுகள் வந்தாலும் அதைத் தீரத்தில் காமராஜர் முதல் மனிதராக இருந்தார்.
எதேச்சையாகக் காரிய கமிட்டி கூட்டத்துக்காக டெல்லி சென்ற அவர் , நேரு முகத்தை பார்த்த போது பெரும் சோர்வு தென்பட்டதை கவனித்து " உடம்புக்கு சரியில்லையா ?" என்றார். காமராஜரின் கேள்விக்கு பதில் சொல்லும் மனநிலையில் இல்லாத நேரு " இல்ல சரியாக தூங்காததால் ஏற்ப்பட்ட சோர்வு " என்றார். ஆனால், காமராஜர் விடாமல் கேட்டவே வேறு வழி இன்றி நேரு பேசினார். 

அலறிய காமராஜர் அய்யா...

நிகழ்ச்சியோ, பொதுகூட்டமோ. நடந்தால் மக்களோ, தொண்டர்களோ. காலணா அரையணா, ஒரு அணா என்று கொடுப்பார்கள். அதை வாங்கி பையில் போட்டுக்கொள்வார் காமராசர்.
சென்னை வந்ததும் பார்ப்பார். ஐந்து ரூபாய், எட்டு ரூபாய் என்று சேர்ந்திருக்கும். அப்படியே கொண்டு போய் தன் நண்பரான ‘இந்து’ பத்திரிகை முதலாளி கஸ்தூரி ரங்கனிடம் கொடுத்து விடுவார். நீண்ட காலம் அப்படி நீடித்தது.