Tuesday, October 7, 2014

M.U.அபூபக்கர் ஸித்திக் அவர்கள் மௌத்

பேகம்பூர் புலவர் தெரு மர்ஹும் மௌலானா அப்துல் வாஜீத்  (டில்லி குத்புகானா உரிமையாளர்) அவர்களின் மருமகனும் ஜனாப் A.அப்துல் ஹமீது & A.முஹம்மது பைஜூ  ஆகியோரின் தந்தையுமாகிய M.U.அபூபக்கர் ஸித்திக் இன்று (13.03.2014) மாலை 7.00 அளவில்அன்னாரின் இல்லத்தில் காலமானார்கள். அன்னாரின் ஜனாசா அடக்கம் 14.03.2014 வெள்ளிகிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு பேகம்பூர் பெரியபள்ளிவாசலில் நடைபெறும். 
இன்னாலில்லாஹி  வ இன்னா லிலைஹி  ராஜீவூன் 

ஹாபீஸ் M.V.K.ஷாகுல் ஹமீது அவர்கள் மௌத்

திருச்சி BHEL முன்னாள் ஊழியரும் கரூர் ஈசனத்தம் மர்ஹும் M.V.காதர் இப்ராஹீம் அவர்களின் மகனாரும் பெரியகுளம் மர்ஹும் P.அப்துல் சுக்கூர் அவர்களின் மருமகனுமாகிய ஹாபீஸ் M.V.K.ஷாகுல் ஹமீது அவர்கள் இன்று (06.02.2014) காலை 10.00 அளவில் BHEL மருத்துவமனையில் காலமானார்கள். அன்னாரின் ஜனாசா அடக்கம் 07.02.2014 வெள்ளிகிழமை காலை 11.00 மணியளவில் பேகம்பூர் பெரியபள்ளிவாசலில் நடைபெறும். 
இன்னாலில்லாஹி  வ இன்னா லிலைஹி  ராஜீவூன் 








Monday, October 6, 2014

மின்வெட்டு

மின்வெட்டு என்றாலே 1912 என்ற எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம், மொபைலில் இருந்தும் பேசலாம். புகார் தெரிவித்த பிறகு சரிசெய்து விடுகிறோம் என்று டிமிக்கி கொடுத்துவிடுவார்கள்... தொடர்ந்து பேசி புகார் தெரிவித்ததற்கு ஆதாரமாக புகார் எண்ணை மறக்காமல் கேளுங்கள்.... கேட்டால்தான் கொடுப்பார்கள்.

புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

பேகம்பூர் ஜமாத்தார் சார்பாக ஒவ்வொரு வருடமும் நடைபெறும் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இன்று (06.10.2014) காலை 8.00 மணியளவில் பெரியபள்ளிவாசலில் ஜமாத்தார் அனைவரும் கலந்து சிறப்பாக  நடைபெற்றது. 

Sunday, October 5, 2014

ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள்வாழ்த்துக்கள்


ஒற்றுமையுடனும், தியாகத்துடனும் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து உள்ளங்களுக்கும் ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள்வாழ்த்துக்கள்

ஈதுல் அல்ஹா பெருநாள்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் ஈதுல் அல்ஹா பெருநாளன்று தொழுது முடிக்கும் வரை உண்ண மாட்டார்கள்.
ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் புரைதா ரலியல்லாஹு அன்ஹு - இப்னுமாஜா - 1756

இறுதி நாளும் அதன் அடையாளங்களும்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
இறுதி நாளும் அதன் அடையாளங்களும்!
1- அல்லாஹ் இவ்வுலகத்தை நிரந்தரமாக இருப்பதற்காக படைக்கவில்லை. மாறாக அதற்கென முடிவு நாள் வரும். அந்நாள் இறுதி நாளாகும். அதுவே ஐயத்திற்கிடமில்லாத உண்மையுமாகும். அல்லாஹ் சொல்கிறான்:
நிச்சயமாக இறுதிநாள் வந்தே தீரும் அதில் சந்தேகமில்லை.(40:59) நிராகரிப்பாளர்கள் இறுதி நாள் எங்களிடம் வருமா? எனக் கேட்கிறார் கள்(நபியே) நீர் கூறும்: ஆம்! எம் இறைவனின் மீது சத்தியமாக நிச்சயமாக அது உங்களிடம் வரும்.(34:3)