"அல்லாஹ்விற்கு மிக விருப்பமான தொழுகை தாவூது (அலை) அவர்களின் தொழுகையாகும். அல்லாஹ்விற்கு மிக விருப்பமான நோன்பு தாவூது (அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் பாதி இரவு வரை தூங்குவார்கள். பிறகு இரவில் மூன்றில் ஒரு பகுதி நேரம் தொழுவார்கள். பிறகு ஆறில் ஒரு பகுதி நேரம் உறங்குவார்கள். மேலும் ஒரு நாள் நோன்பு வைத்து ஒரு நாள் நோன்பை விட்டுவிடுவார்கள்."
நபி (ஸல்) அவர்கள் காய்ச்சல் கண்டிருந்த ஒரு மனிதரை உடல்நலம் விசாரிக்கச் சென்றார்கள். அப்போது (அவரிடம்), “(காய்ச்சலை) நற்செய்தியாக எடுத்துக்கொள்வீராக! ஏனெனில் அல்லாஹ், ‘அது எனது நெருப்பாகும். பாவம் செய்த என் அடியான்மீது அதை நான் சாட்டிவிடுகிறேன். நரக நெருப்பின் ஒரு பங்காக அவருக்கு அது இருக்கட்டும் என்பதே காரணம்” என்று கூறுகிறான் என்றார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: ஜாமிஉத் திர்மிதீ, பாகம்:3 ஹதீஸ் எண்: 2014.
'ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் 'இஸ்லாத்தில் சிறந்தது எது' எனக் கேட்டதற்கு, '(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும், நீர் அறிந்தவருக்கும், அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்' என்றார்கள்" புகாரி -12