Monday, September 12, 2016

ஹதீஸ்-நரக விடுதலை

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்
நிலவட்டுமாக..!
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்..
அல்லாஹ் அரஃபா நாளில் அடியார்களுக்கு நரக விடுதலையளிக்கும் அளவிற்கு வேறெந்த நாளிலும் நரக விடுதலை அளிப்பதில்லை.
அன்றைய தினம் அவன் (அரஃபாவிலுள்ளவர்களை) நெருங்கி, வானவர்களிடம் அவர்களைக் குறித்துப் பெருமை பாராட்டுகிறான்.
”இவர்கள் எதை நாடி (இங்கு குழுமி)யுள்ளார்கள்?” என்று (பெருமிதத்தோடு) கேட்கிறான்.
முஸ்லிம் 2623.

Sunday, September 11, 2016

கஃபாவின் மீது போர்தப்படும் போர்வை

கஃபாவின் மீது போர்தப்படும் போர்வைக்கு பெயர் -
கஃபாவின் மீது போர்த்தப்படும் கருப்பு நிறபோர்வைக்கு " கிஸ்வா " என்று பெயர் சொல்லப்படும். தங்க ஜரிகைகலால் ஆனது ,
கஃபாவிற்க்கு போர்வை மாற்றம் வைபவம் என்றே ஆரம்பித்து இன்று வரை தொடர்கிறது
எப்போது மாற்றப்படும்-வருடந்தோறும்துல் ஹஜ் பிறை 9 ம் நாள் ஹஜ்ஜோடு சேர்த்து இந்த போர்வையை மாற்றப்படுகிறது,
பழைய போர்வை --பழைய போர்வை சின்னஞ்சிறு துண்டுகளாகவெட்டப் பட்டு வெளி நாட்டு நிறுவனங்களுக்கும், பிரமுகர்களுக்கும் வழங்கப்படுகிறது. ஆனால் கலிஃபா உமர்[ ரலியல்லாஹூ அன்ஹூ ] ஆட்சி காலத்தில்அது ஹஜ் பயணிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது.
14 -மீ-நீளமும் 101-செ.மீ அகலமும் கொண்ட 47 துண்டுகள் பயன் படுத்தப்படும்.

அரஃபா நோன்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்
நிலவட்டுமாக..!
அன்பார்ந்த இஸ்லாமிய சொந்தங்களே
வருகின்ற(13.09.2016) துல்ஹஜ் பிறை 10 வியாழக்கிழமை அன்று இரு சிறந்த பெருநாட்களில் ஒரு பெருநாளான ஈதுல் அல்ஹாவினை கொண்டாடவிருக்கிறோம்
💥அல்ஹம்துலில்லாஹ்💥
இதற்கு முந்தைய நாள் (12.09.2016)துல்ஹஜ் பிறை 9 அன்று அரஃபா நோன்பு என்ற சுன்னத்தான அமலினை நபி(ஸல்) அவர்கள் நமக்கு காட்டி தந்துள்ளார்கள்
இந்த நோன்பு மற்ற நாட்களில் நாம் நோற்கும் நோன்பினை போன்று கிடையாது
அரஃபா நோன்பு தனிச்சிறப்பு பெற்றது

கண்கள் பழுதாகும் முன் குர்ஆன் ஓதிக் கொள்ளுங்கள்!

கண்கள் பழுதாகும் முன் 
                                    குர்ஆன் ஓதிக் கொள்ளுங்கள்!
காதுகள் செவிடாகும் முன் 
                                        குர்ஆன் ஹதீஸ்களைக் கேளுங்கள்!

சீடரின் கேள்விக்கு மௌலானா ரூமி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அற்புத பதில்கள்:

விசம் என்பது என்ன..?
நமது தேவைக்கு அதிகமான அனைத்தும் விசமே, அது நமது அதிகாரமாக, செல்வமாக, பசியாக, அகங்காரமாக, பேராசையாக, சோம்பேரித்தனமாக, காதலாக, லட்சியமாக, வெறுப்பாகவும் எதுவாகவும் இருக்கலாம்.
அச்சம் என்பது என்ன..?
எதிர்பாராதவற்றை ஏற்றுக் கொள்ள மறுப்பதே அச்சமாகும், அதை நாம் ஏற்றுக் கொண்டால் அது சாகசமாகிவிடும்.

Monday, August 29, 2016

நீங்கள் தவறாது 5 வேளை தொழுபவரா...??

நீங்கள் தவறாது 5 வேளை தொழுபவரா...??
என்றால் கண்டிப்பாக உங்கள் உடம்பில் எந்த வேதனைகள் வரவும் வாய்ப்பே இல்லை என்கிறார்கள் அக்குபஞ்சர் நிபுணர்கள்

அல்லாஹ்வுக்குரியது

*உலகைப்பற்றிக்கவலைப்படாதே ஏனெனில் அது அல்லாஹ்வுக்குரியது.*
*உணவைப்பற்றி கவலைப்படாதே !அது அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது.*
*எதிர்காலம் குறித்தும் கவலைப்படாதே!அதுவும் அல்லாஹ்வின் கரத்தில் தான் உள்ளது*
*அல்லாஹ்வை எப்படி திருப்திப்படுத்துவது என்பது பற்றி மட்டும் கவலைப்படு*