Wednesday, July 25, 2018

உணரப்படாத தீமை: வட்டி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !!!
வட்டி வாங்குவோர் அதை விட்டு விடவில்லை என்றால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது என்று அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான் (2:279)
வட்டியை தவிர வேறு எந்த பாவத்திற்க்கும் அல்லாஹ் அவனிடம் இருந்து போர் அறிவிக்கப்பட்டுவிட்டது என்று கடுமையாக எச்சரித்ததில்லை

உண்மை முஸ்லிம் அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிய துணிவானா?
இது வட்டிக்கு பணம் கொடுப்பவர்க்கு மட்டும் சொன்னதல்ல அதை வாங்குவர்க்கும் தான்

நபி வழியில் நம் ஹஜ் (பாகம்-8⃣)

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !!!
 அரஃபாவில் செய்ய வேண்டியவை
நான் அரஃபாவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பின்னே (ஒட்டகத்தில்) அமர்ந்திருந்தேன். அவர்கள் தமது கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்தார்கள். ஒட்டகம் அவர்களைக் குலுக்கியது. அதனால் அதன் கடிவாளம் கீழே விழுந்து விட்டது. ஒரு கையை உயர்த்திய நிலையிலேயே இன்னொரு கையால் அதை எடுத்தார்கள்.
அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரலி)                                                                            நூல்: நஸயீ 2961
அரஃபாவில் லுஹரையும், அஸரையும் ஜம்வு செய்து இமாம் தொழுவார். அதில் சேர்ந்து தொழ வேண்டும். அதற்கு முன் நிகழ்த்தப்படும் குத்பாவை - உரையை - செவிமடுக்க வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரஃபா நாளில் குத்பா - உரை - நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) உங்களின் இரத்தங்களும் உங்கள் செல்வங்களும் உங்களுக்குப் புனிதமானவையாகும் என்று தொடங்கும் நீண்ட உரையை நிகழ்த்தினார்கள். பிறகு பாங்கு சொல்லி பின்னர் இகாமத் கூறி லுஹர் தொழுதார்கள். பிறகு மீண்டும் இகாமத் கூறி அஸர் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)                                                                                                  நூல்: முஸ்லிம் 2137

Thursday, July 19, 2018

இறைவனைத் தன் "பிதா" என்றும், தன்னை இறைவனின் "சொந்த மகன்" என்றும் உரிமை பாராட்டியது உண்டா...?????

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !!!
கிருஸ்தவர்கள் கேட்கிறார்கள்:-
இந்தப் பூமியில் இறைத்தூதராக தேர்த்தெடுக்கப்பட்ட எந்த ஒருவரேனும் இறைவனைத் தன் "பிதா" என்றும், தன்னை இறைவனின் "சொந்த மகன்" என்றும் உரிமை பாராட்டியது உண்டா...?????
(இயேசுவைத் தவிர)

இந்த கேள்வியை பதிவிட்டு அவர்களாகவே பெருமையும் பாராட்டிக் கொள்கிறார்கள். அது எப்படிப் பட்ட பெறுமை எனில், ஆதாம் முதற்கொண்டு இயேசு வரை உலகில் தோன்றிய எந்த இறைத்தூதருமே இறைவனைத் தன் "பிதா" (வாப்பா) என்று சொல்லவும் இல்லையாம்...! எந்த இறைத்தூதருமே தன்னை இறைவனின் "சொந்த மகன்" என்று உரிமை கொண்டாடவும் இல்லையாம்.! இறைவனை தன்னுடைய "பிதா" (அப்பா) என்று சொன்னது இயேசு மட்டுமே தானாம், தன்னை இறைவனின் "சொந்த மகன்"
என்றும் உரிமை கொண்டாடியதும் இயேசு மட்டுமே தானாம்!!!!!

Wednesday, July 18, 2018

உங்களுக்கு தெரியுமா? அன்றைய உதுமான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் இன்றைய 5 ஸ்டார் ஹோட்டல் பற்றி?

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் ) !!!
மக்காவின் ஜம்ஜம் நீர் போன்று மதீனாவின் குடிநீர் இனிய சுவையுடன் இல்லையே என அவர்களுக்கு ஒரு சிறிய வருத்தம். ஆனால் மதீனா நகரில் ருமா என்ற பெயருடைய ஒரு கிணற்றின் நீர் மட்டும் ஜம்ஜம் குடிநீரின் சுவையில் ஓரளவு ஒத்திருந்தது.
உடனே முஹாஜிர்கள் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் சென்று தங்களது சங்கடத்தையும், ருமா கிணறை குறித்த செய்தியையும் தெரிவித்தார்கள்.

நபி(ஸல்) அவர்கள் எத்தனை உம்ராக்கள் செய்துள்ளார்கள்?'

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !!!
நபி(ஸல்) அவர்கள் எத்தனை உம்ராக்கள் செய்துள்ளார்கள்?'
என நான் அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டதற்க அவர், 'நான்கு (உம்ராக்கள் செய்துள்ளார்கள்); அவை:
1.ஹுதைபிய்யா எனுமிடத்தில் துல்கஅதா மாதத்தில், இணைவைப்போர் தடுத்தபோது செய்யச் சென்றது;
2.இணைவைப்போருடன் செய்த சமாதான ஒப்பந்தப்படி, அடுத்த ஆண்டு துல்கஅதா மாதத்தில் செய்தது;

Monday, July 16, 2018

துஆ

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !!!
ஹஸ்பீ ரப்பி ஸல்லலாஹ் !
மாபி ஹல்பி கைருல்லாஹ் !!
நூறு முஹமது ஸல்லலாஹ் !!!
லாயிலாஹா இல்லல்லாஹ் !!!!
ஹஃகு லாயிலாஹா இல்லல்லாஹ் !!!!!
அல்லாஹ் உனக்கே புகழ் எல்லாம்
அரிதாம் நன்றி உனக்கேயாம்
சொல்லும் உயர்ந்த ஸலாத்து ஸலாம்
சுடரை பொழிக்கும் உன் தூதர்
நல்லார் நய்னார் நபிகள் பால்
நன்மை கிளைஞர் தோழர் பால்
அல்லும் பகலும் உண்டாக அனைத்தும்
அளித்து காப்பவனே!!

நபிமொழியை மெய்ப்பித்த நவீன விஞ்ஞானம்!!!

No automatic alt text available.                                     அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !!!
இன்றைய கால கட்டத்தில் அதிகமாக உண்பவர்களும் குறைவாக உண்பவர்களும் பல வயிறு ரீதியான பிரச்சனைகளை சந்தித்த வண்ணம் உள்ளனர்...