Monday, September 11, 2017

தஸ்பீஹ் ஓதி வாருங்கள்

سْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
                      அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு...
ஒவ்வொரு பர்லான தொழுகைக்குப் பின்னரும், [ தஸ்பீஹ்] ஸுப்ஹானல்லாஹ் (33) தடவையும், [தஹ்மீத்] அல்ஹம்துலில்லாஹ் (33) தடவையும், [தக்பீர்] அல்லாஹு அக்பர் (34) தடவையும், வழமையாக ஓதி வாருங்கள்,
இவை உங்களுக்காக அல்லாஹ்விடத்தில் சிபாரிசு செய்து உங்களை சுவர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும். என்று பெருமானார் [ஸல்] கூறியிருக்கிறார்கள்.
மூலம் : Sahinath Isbhaஅரபி பேச கற்று கொள்வோம்
to
 

துன்பத்தின்போது ஓதும் துஆ

سْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
                  அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு...
கண்மணி நபி நாயகம் (ஸல்) அவர்கள் துன்பத்தின்போது, பின்வருமாறு கூறுவார்கள்:
5276. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
லாயிலாஹ இல்லல்லாஹு அழீமுல் ஹலீம்.
லாயிலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம்.
லாயிலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமா வாத்தி, வ ரப்புல் அர்ளி, வரப்புல் அர்ஷில் கரீம்.
(பொருள்: கண்ணியம் வாய்ந்தோனும் பொறுமை மிக்கோனுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. மகத்தான அரியணையின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. வானங்களின் அதிபதியும் பூமியின் அதிபதியும் மாட்சிமை மிக்க அரியணையின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை.)

Sunday, September 10, 2017

உடல் வலி ஏற்படும் போது ஓதும் துஆ

سْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
          அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு...
"பிஸ்மில்லாஹ்" என மூன்று தடவை கூறிவிட்டு, ஏழு தடவை "அவூது பில்லாஹி வ குத்ரத்திஹி மின் ஷர்ரி மா அஜிது வ உஹாதிரு" என்று சொல்வீராக" என்றார்கள்.
4430. நாஃபிஉ பின் ஜுபைர் பின் முத்இம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உஸ்மான் பின் அபில்ஆஸ் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், தாம் இஸ்லாத்தைத் தழுவியது முதல் தமது உடலில் வலி ஏற்பட்டுள்ளதாக முறையிட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் உமது உடலில் வலியுள்ள இடத்தில் கையை வைத்து, "பிஸ்மில்லாஹ்" என மூன்று தடவை கூறிவிட்டு, ஏழு தடவை "அவூது பில்லாஹி வ குத்ரத்திஹி மின் ஷர்ரி மா அஜிது வ உஹாதிரு" என்று சொல்வீராக" என்றார்கள்.
(பொருள்: நான் அல்லாஹ்விடம் அவனது ஆற்றலை முன்வைத்து, நான் (தற்போது) உணர்கின்ற தீமையிலிருந்தும் (எதிர்காலத்தில் ஏற்பட்டுவிடக்கூடாது என) நான் அஞ்சுகின்ற தீமையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.)
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 39. முகமன் (சலாம்)
மூலம் : அப்துல் ஜஹாங்கீர் - துஆக்களின் தொகுப்பு

Thursday, September 7, 2017

سْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
          அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு...
🗣 கேள்வி : ஸலவாத் எப்படி கூறுவது ?
{நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் எவ்வாறு கூறுவது என்பது அறிவோம் ஆனால் நாம் ஒவ்வொரு தடவையும் நபி (ஸல்) அவர்கள் பெயர் செவியுறும் போது நாம் எவ்வாறு பதில்கூறுவது! முழு ஸலவாத்தைக்கூற வேண்டுமா? அல்லது வெறுமனே ஸல்லலாஹூஅலைஹிவஸல்லம் என்று கூறினால் போதுமா ?}

 பதில் :
 தொழுகையில் அத்தஹிய்யாத் இருப்பில் ஸலவாத் ஓதும் போது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்தைத் தான் ஓத வேண்டும். மற்ற நேரங்களில் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றோ அலைஹிஸ் ஸலாது வஸ்ஸலாம் என்றோ கூறிக் கொள்ளலாம்.
பின்வரும் ஹதீஸ் இதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது.

ஐந்து விசயத்தை தினமும் செய்யாமல் உறங்கவேண்டாம்

سْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
          அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு...
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது மருமகன் ஹழ்ரத் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு உபதேசம் செய்தார்கள்.
“அலியே! ஐந்து விசயத்தை தினமும் செய்யாமல் உறங்கவேண்டாம்.
1. முழு குர்ஆனை ஓதாமல் உறங்காதே.
2. தினமும் 4000 தீனார்கள் தர்மம் செய்யாமல் உறங்காதே.
3. கஃபதுல்லாஹ்வை தவாபு செய்யாமல் உறங்காதே.

Wednesday, September 6, 2017

வீரமங்கையின் வீரவரலாறு - **அஸ்மா பின்த்தி அபீபக்கர் ரலியல்லாஹூ அன்ஹா**

سْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
          அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு...

அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ஆருயிர் தோழர்  அபூபக்கர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களின் மூத்த மகளும், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் வாழும்போது சுவர்க்கத்தின் 
நற்செய்தி சொல்லப்பட்டவர்களில் ஒருவரான ஜுபைர் இப்னுல் அவ்வாம் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களின் மனைவியும், வீர தியாகி அப்துல்லாஹ் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களின் அன்னையுமான மரியாதைக்குரிய அஸ்மா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் தான்...!!

Tuesday, September 5, 2017

விபச்சாரத்திற்கு ஈட்டு தொகை கிடையாது. தண்டனையே சட்டம்.

سْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
          அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு...
7260. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம்  இருந்தபோது கிராமவாசிகளில் ஒருவர் எழுந்து நின்று, “இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் சட்டப்படி எனக்குத் தீர்ப்பளியுங்கள்“ என்றார். உடனே அவரின் எதிரி (பிரதிவாதி) எழுந்து, “இவர் சொல்வது உண்மையே; இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் சட்டப்படியே அவருக்குத் தீர்ப்பளியுங்கள். எனக்கு (என் தரப்பு நியாயத்தை எடுத்துச்சொல்ல) அனுமதியளியுங்கள்“ என்றார்.